<<
Upcoming Events
Space Directory
Web Albums
eBook Download
Audio
Romanize Tamil
Search in ThiruArutpa
Print
Post your comment

சென்னை அயனாவரத்தில் வள்ளலாரின் உறவினர்கள்-தற்போதைய நிலை.

Ramanujam
posted 23 months ago
06 Sep 2008 05:11:44 GMT 5:11:44 AM

1104 views



சென்னை அயனாவரத்தில் வள்ளலாரின் உறவினர்கள் தற்போதைய வாழ்க்கை நிலை.

 


 

கோயம்புத்தூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு, கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு ரமேஷ் பாபு என்ற அன்பர்  வந்து, தமது தலைமை நாகம்மை அம்மையார் இயக்கத்தில் தாம் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். தங்களது முயற்சியினால், ஹோசூரில் ஒரு சத்திய ஞான சபை கட்டி வருவதையும் அவர் அப்போது தெரிவித்தார்.

 

புத்தக கண்காட்சி முடிவடைந்த பின், தயவு அன்பர், மதுரைக்குத் திரும்பினார். கடந்த 28.8.2008 அன்று கோயம்புத்தூர் திரு ரமேஷ் பாபு அவர்கள், வள்ளல் பெருமானின் உறவினர்கள், சென்னையில் உள்ளனர். அது விபரம் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டுள்ளார். அந்த விபரம் ஏதும் தெரியவில்லை என மதுரை தயவு அன்பர் பதில் கொடுத்ததும், சென்னை அயனாவரத்தில் பெருமானின் உறவினர்கள் உள்ள விபரத்தையும் அவர்களது தொடர்பு அலைபேசி எண், விலாசம் முதலானவற்றையும் அவரிடம் தெரிவித்தார்.

 

4.9.2008 அன்று ஷோளிங்கரில் தெய்வ நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்ட தயவு அன்பர், ராணிப்பேட்டை அருகே 2 கி.மீ. தூரத்தில் உள்ள காரையில் மகாமந்திர பீடம் அமைத்து, சன்மார்க்க சங்கம் நடத்தி வரும் திரு பழனி என்ற ஜோதிமைந்தன் கோரிக்கையின் பேரில் அங்கு 4.9.2008 அன்று சென்றிருந்தார்.

 

திரு ஜோதி மைந்தனுக்கு, வள்ளலார் ஸ்பேஸ் இணைய தளம் குறித்த சந்தேகத்திற்குரிய சில விளக்கங்களை அங்கு தெரிவித்த பின்னர், மதுரை அன்பர், சென்னைக்குப் புறப்பட்டு வந்து விட்டார்.

 

அவர், 6/9/2008 சனிக்கிழமை நண்பகல் சுமார் 12.25 மணியளவில், அயனாவரத்தில் உள்ள வள்ளற் பெருமானின் உறவினரின் வீட்டிற்குச் சென்றார்.

 

அங்கு திரு ரமேஷ் பாபு -  குறிப்பிட்ட விலாசத்தில் சுமார் 58 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் அவரது மகளும் இருந்தனர். விசாரித்த போது வயதான பெண்மணி தனது பெயர் T.ராணி  (W/O) திருநாவுக்கரசு என்றும், உடன் இருந்தவர் தனது மகள்தான் எனத் தெரிவித்து அவர் பெயர் கலைவாணி என்றார்.

 

தனது கணவர் திரு திருநாவுக்கரசு அயனாவரம் பஸ் டிப்போவில் பணி புரிந்தவர். பணி ஓய்வு பெற்று, தங்களுடன் வசிப்பதாகத் தெரிவித்தார். பிறந்த குழந்தைகள் விபரம்.

 

1.       திரு குணசேகரன் (41) (திருமணமானவர்) Working as Driver in a Private Travels Company at Chennai.

2.    திரு ஷ்ரீ சற்குரு (36) (திருமணம் ஆகவில்லை) தனியார் கம்பெனியில் வேலை பார்க்கின்றார்.

3.    செல்வி கலைவாணி (35) திருமணம் ஆகவில்லை.

 

அவர்களிடம் எவ்விதம் அவர்கள் வள்ளற் பெருமானுக்கு வாரிசுதாரர்கள் என்ற விபரத்தை அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அளித்த பதில், கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

 

வள்ளலாருக்கு நாங்கள் உறவினர்கள் என்ற விபரம், எங்களுக்கு முதலில் தெரியாது. சுமார் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக சுவாமி வழிபாட்டுக்காக மேட்டுக் குப்பத்துக்குச் சென்றிருந்த போது வள்ளலார், சித்தி அடைந்த இடத்தில் நாங்கள் ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருந்தோம்.

 

அதாவது, இந்த இடத்திற்கு, சைவம் கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே வரவேண்டும் என அங்கிருந்த நபர் தெரிவித்தார். நாங்கள் பிறவி முதல், நாங்கள் சைவர்கள் என அவருக்கு தெரிவித்தோம். எங்கிருந்து வருகிறீர்கள் என்ற விபரத்தை அவர் எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

 

பின்னர் நாங்கள் எங்களது மூதாதையர்களது விபரங்களைத் தெரிவித்த பின்னர், நீங்கள், வள்ளற் பெருமானுக்குப் பிறகு வாழ்ந்த பரசுராமப் பிள்ளையின் வழித்தோன்றல்கள் என்கிறீர்கள். எனவே நீங்கள் வள்ளலாரின் வாரிசுகள் தான் என்று தெரிவித்தார். இது குறித்து, எங்களது பெற்றோர் எந்த விபரமும் தெரிவிக்க வில்லையே என நாங்கள் கூறினோம்.

 

அதிலிருந்து எங்களை, வடலூருக்கு அவர் தொடர்ந்து வரச் சொன்னார். நாங்களும், அங்கிருந்த திரு அருட்பாவினை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு சென்னையில் அயனாவரத்தில் உள்ள வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்து, அன்றிலிருந்து அதனையும், அருட்பெருஞ்ஜோதி அகவலினையும் தொடர்ந்து படித்து வருகிறோம். நாங்கள் அயனாவரத்தில் 1987 முதல் வசித்து வருகிறோம். (சிறிய வீடானாலும், இது, இவர்களது சொந்த வீடு. அருகில் ஒரு சிறிய இடத்தில் கூரை வேய்ந்த பழமையான ஒரு கீற்றுக் கொட்டகை சிதிலமடைந்து கிடக்கிறது. )

 

தந்தையார் திரு கண்ணபிரான் பிள்ளை (93 வயது) ஏற்கனவே அயனாவரம் பஸ் டிப்போவில் போக்குவரத்துக் கழகத்தில் அந்தக் காலத்தில் பணி புரிந்தவர். குடும்ப பாரம் தாங்காமல், வறுமையில் அழுந்தியவர். எனவே தனது முன்னோர்களைப் பற்றிய செய்திகளை, எங்களுக்கு, உரிய காலத்தில் அவர் தெரிவிக்கவில்லை. அவர்,. வயது முதிர்ச்சியால், தற்போது வெளியில் எங்கும் செல்வதில்லை. தாயார் பெயர் திரு கோவிந்தம்மாள் (வயது 82). அருகில் வசித்து வருகிறார்.

 

என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 3 நபர்கள். என்னைத் தவிர ஏனைய இருவரும் சகோதரர்கள். ஆனால் அவர்களைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறாற் போல் தற்போது ஏதுமில்லை என்றார். சுத்த சன்மார்க்க நெறியினை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி, அவர்களது பெயர்களைக் கூட சொல்ல மறுத்துவிட்டார்.

 

வள்ளலாரின் வாரிசுதார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும், இதுவரை எங்களது பெற்றோர் இதுகுறித்த தகவல்கள் ஏதும் தெரிவிக்காமல் இருந்தும் கூட, தற்போது, அது குறித்த தகவல் கிடைத்துள்ளதால், திரு அருட்பாவினை நாங்கள் ஊன்றிப் பயின்று வருகின்றோம்.

 

       வடலூருக்கு கடந்த ஆண்டு சென்றிருந்த போது ஒரு விழாவில் திருஅருட்பா பாடகர் மழையூர் சதாசிவம் அவர்கள் அங்கிருந்த சன்மார்க்க அன்பர்களுக்கெல்லாம் என்னைப் பற்றிய செய்திகளை - நான் வள்ளலாருக்கு உறவினள் - என்று தெரிவித்து, கெளரவித்தார்கள். (அந்தப் படத்தினைக் காண்பித்தார்.)

 

       இன்னார் என்று தெரிந்த பின்னர், என்னை, கீழ்க்காணும் சன்மார்க்க சங்கங்கள் வரும்படி அழைத்து, அருட்பெருஞ்ஜோதி அகவலினைப் பாராயணம் செய்யச் சொல்கின்றனர்.

 

அவர்களது கோரிக்கையைத் தட்டாமல், அங்கெல்லாம் சென்று, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்து வருகின்றேன்.

 

1)       வடலூர்

2)    ஆவடி

3)    கவரப்பாளையம்

4)    வள்ளலார் நகர்

5)    கந்த கோட்டம் (நூலகம்)

6)    திருவொற்றியூர்

7)     அயனாவரம் I.C.F சத் சங்கம்.

 

தனது கணவர் பெற்றுவரும் பென்ஷன் தவிர வேறு வருமானம் இல்லாத நிலையில், தாமே மிகுந்த பொருளாதார நெருக்கடியில் காலந் தள்ளி வருவதால், தம்மால், முடிந்த வரை பரோபகாரப் பணி செய்து வருகிறோம் என திருமதி ராணி அம்மையார் தெரிவித்தார்.

 

இவர்களது முகவரி.

திருமதி T. ராணி, அவர்கள்,

க/பெ திருநாவுக்கரசு

(கோபி கிருஷ்ணா தியேட்டர் சமீபம்)

நிர். 18/27, முத்தம்மன் நகர்,

அயனாவரம், சென்னை.23.

 

செல் நம்பர் 99414-06233.

 

(இது குறித்த போட்டோக்கள் பின்னர் பிரசுரிக்கப்படும்)  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment
#1
very good effort by தயவு குழு அன்பர் by collecting the vallalar derivative information.
Vallalar Karthikeyan

08 Sep 2008 02:06:18 GMT 2:06:18 AM
23 months ago
#2
Why the font size is too big?
I think it is too big and that can be reduced for better readability.
Ramalinga Swamigal Mother Chinnammaiyar House

09 Sep 2008 00:56:23 GMT 12:56:23 AM
23 months ago
#3
good work daeiou anbar. however how is parasuraman pillai related to ramalinga swamigal.
but the most important thing, this family is fully vegetarian since birth and now they are followers of vallalar.
that makes me happy.
jothi ramalingam

09 Sep 2008 21:12:54 GMT 9:12:54 PM
23 months ago
#4
After coming out from the darkness by Tmt. T.Rani, and rendering her services to Suddha Sanmargam by chanting Arutperunjothi Agaval etc., there is quarrel between she & her husband as to why U are very often going out for chanting these Arutpas.etc By this way her husband restricts her going to any place even within Chennai for chanting of Thiru Arutpa or Arutperunjothi Agaval.

But after knowing the real position that she is related to Vallal Peruman, she intends going out to chant for some Temples nearby. Why she refused to tell about her brothers when questioned - she replied those fellows are not following vegetarianism. Hence the refusal.

Ramanujam

11 Sep 2008 10:15:38 GMT 10:15:38 AM
23 months ago

Login
Login to post your comments
A. RAMANUJAM
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
திருவருளால் பார்க்க நேர்ந்த இடங்கள்

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace