திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் ஆடியோ சி.டி.விற்பனை மையங்கள் அறிவிப்பு
Ramanujam
posted 40 months ago
02 Sep 2008 09:48:03 GMT 9:48:03 AM
1692 views
திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் வந்துள்ள புத்தம் புதிய ஆடியோ சி.டி.கள் அங்கீகாரம் பெற்ற விற்பனை நிலையங்கள்
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் அருளிய திரு அருட்பாவில் உள்ள பாக்கள் அனைத்தையும், ஆடியோ சி.டி. வடிவில், சுத்த சன்மார்க்க அன்பர்களும், ஏனையோரும் கேட்டுப் பயன் பெற்றுத் தம் வாழ்வில் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்ற சிறந்த பணி நிமித்தம், திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் என்ற ஒரு ப்ரொஜெக்ட் துவக்கப்பட்டது,
திரு தர்மலிங்க சுவாமிகளைக் கொண்டு, இசை அமைக்கப்பட்டு, சி.டி.கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இதனை சிங்கப்பூரில் வாழும், சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார், அவர்கள், மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு, தயாரிப்புப் பணிக்கான உதவிகளைச் செய்து வருகிறார்.
அத் திட்டம், கடந்த 4 ஆண்டுகளாக, பல பிரபலமான இசைக் கலைஞர்களையும், சிறந்த வித்வான்களைக்கொண்டும், இசை அமைப்பாளர்களைக் கொண்டும் இசை அமைத்து ரிக்கார்டிங் செய்த ஆடியோ சி.டி.களை, பல காலம் அவை, கெடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், சிங்கப்பூரில் உள்ள உலகத் தரம் வாய்ந்த மிகச் சிறந்த நிறுவனத்தின் மூலமும், சிறந்த தொழில் நுட்பத்துடனும், தயாரித்து, அதனை இந்தியாவில் விற்பனை செய்வதற்காக அனுப்பி வைக்கின்றது.
ஆனால், இந்தியாவில், அந்த சி.டி.கள், யாருடைய அனுமதியையும் பெறாமல், நகலெடுக்கப்பட்டு, (audio piracy) சட்ட விரோதமாக, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அவ்விதம் விற்கப்படும் சி.டி.கள் தரம் குறைந்தவையாக உள்ள காரணத்தினால், வெகு விரைவில், சி.டி.கள் பாழ்பட்டு, திரு அருட்பா பாடல்களைக் கேட்க இயலாத நிலையினை, அதனை வாங்கிய பல சன்மார்க்க அன்பர்கள் அனுபவித்து வருகின்றனர் என்ற செய்தி, இந்த நிறுவனத்தை எட்டியுள்ளது.
அதனைக் கண்டித்தும், இனிமேல், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியிலும், இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பும், “ஞான தீபம்” சன்மார்க்கத் திங்களிதழில் நடப்பு மாதத்தில், வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் தயார் செய்யப்படும் தரமான ஆடியோ சி.டி.களை இந்தியாவில் உள்ள கீழ்க்கண்ட விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
VallalarOrg Foundation Authorized Distributors By Volunteers of VallalarSpace Team |
Bangalore Karthikeyan
182,First Floor,6th Main,
Mohan Kumar Nagar,Yeswantpur
Bangalore, Karnataka, India - 560022
Phone.09902268108 |
Madurai A. RAMANUJAM
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India - 625 014
Phone.91-97898 72120 |
VallalarOrg Foundation Authorized Distributors by Tamilnadu District |
|
Coimbatore Thiru Sivakumar,
(Sri Ramdass Anbar group)
L.I.C. Agent,
No.95, Thiruvalluvar Street, Krishnapuram,
LGB Nagar Bus Stop, Saravanampatti,
Coimbatore. Pin 641 035.
Coimbatore District.
Cell 94420 65036. |
|
|
Dindigul Thiru Muralidharan
No.4, Maulana Street,
R.S Road
Dindigul, Tamil Nadu, India - 624003
Phone.91-451-2424100, 91-9790119769 |
|
|
Kanayakumari Thiru Sivaselvaraj, Samara Suththa Sanmarka Sathaya Sangam
17/49-P Thangajothi
Kalangar KudiYiruppu
Kanayakumari, Tamil Nadu, India – 629 702
Phone.91-92451 53454 |
|
|
|
|
|
|
|
Ramanathapuram Rajaveer Jothi Murugan
Vallalar Universal Mission Trust, 851 Vallalar Street, Bharathi Nagar
Ramanathapuram, Tamil Nadu, India - 623503
Phone.91-4567-230322, 220278 |
Salem K.Saravanan 175/20-C, K.M.S. Gardens, Saradha College Road, Salem - 636 016, Tamil Nadu, India |
|
Thanjavur Dr. Thambaiah Arutperumjothi Trust
4309,Pasu Nagar,
Matha Kottai Road,
Thanjavur, Tamil Nadu, India - 613005
Phone.+91-9443375533,+91-9884055115 |
|
|
|
Thiruvannamalai Arulthiru Babu Sadhu Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
91/444 - HIG TNHB
Thamarai Nagar
Thiruannamalai , TamilNadu, India - 606601
Phone.94434-89849, 99427-76351 |
|
|
Tuticorin Thiru Kaliyuga varadhan
Secretary, Vallalar Sanmarga Sangam
59, Kipson puram,
Tuticorin.2.
Tuticorin Dist.
Cell : 9442913101 |
|
|
|
|
இந்த ஆடியோ சி.டி.களை விற்பனை செய்ய முன்வருபவர்கள், தங்களது முகவரியினைத் தரும்படியும், இந் நிறுவனம் வேண்டுகிறது.
http://www.vallalarfiles.com/image/o8jSrrCNfjMuCFjxzIfYXA,$,3d,$,3d/sz-tn650/IsaiAmutha15200000.jpg
எனவே சன்மார்க்க அன்பர்கள், இதனை உணர்ந்து, இனிமேலாவது, நகல் எடுக்கப்பட்ட திரு அருட்பா ஆடியோ சி.டி.களை வாங்கி ஏமாறாமல், திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் தயாரிக்கப்படும் தரமான ஆடியோ சி.டி.களை மட்டும் வாங்கி பயன்பெற்று, வாழ்வில் இன்புறும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இந்த ஆடியோ சி.டி.களின் விலை விபரம், “ஞான தீபம்” இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
இங்ஙனம்,
திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் குழு,
சிங்கப்பூர்.