<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

காஞ்சீபுரம் அஷோக் நகரில் வள்ளலார் தெய்வ நிலையங்கள் செயல்பாடு.

Ramanujam
posted 40 months ago
02 Sep 2008 08:52:10 GMT 8:52:10 AM

1686 views


திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்.

 

அசோக் நகர், காஞ்சிபுரம்.2.


 


 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரத்தில் உள்ள மாமல்லன் நகரை அடுத்த அஷோக் நகரில் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் இயங்கி வருகிறது.

 

அதற்கு கடந்த 7.6.1998ஆம் நாள், புனித நன்னீராட்டு விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

 

அந்த மாவட்டத்தில் அப்போது கூடுதல் ஆட்சியாளராகப் (Additional Collector), பணி புரிந்த டாக்டர்.திரு க. மணிவாசன், I.A.S., அவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். விழாவினை ஒட்டி இச் செய்தி அப்போதைய நாளில், தினமலர் நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

 

இந் நிலையம் துவக்கப்பட்டு இன்றைய தேதி வரை தொடர்ந்து, தொய்வில்லாமல் சுத்த சன்மார்க்க விளக்கப் பணியினை நடத்தி வருவதை,  அதன் தற்போதைய செயலாளர் திரு வெங்கடேசன் என்பவர் கீழ்க்கண்டவாறு விவரித்தார்.

 

       இதற்கு நிரந்தரக் கட்டிடம் கட்டுவதற்கு, கடந்த 1998 நவம்பர் மாதம் நிலம் வாங்கப்பட்டது. பின்னர், அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பேராதரவுடன், தெய்வ நிலையக் கட்டிடம் கட்டி, நித்திய தீபம் ஏற்றி, சங்கம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

 

       இதன் அலுவல் சார் குழுவினர் விபரம் வருமாறு

 

தலைவர் - திருவருட்பிரகாச வள்ளற் பெருமான்.

 

துணைத் தலைவர் திரு ஏ.எஸ்.ராமலிங்அம் (S.B.I Manager, Retd)

 

செயலாளர் திரு P.V. வெங்கடேசன்

 

டிரஸ்டி திரு R. ஜெயவேலு.

 

பொருளாளர் திரு M.V.அசோக்குமார், M.A.,

 

கெளரவ ஆலோசகர் K.R. ஆறுமுகம் B.E., செயலாளர், பக்தவத்சலம் பாலிடெக்னிக்.

 

       இந்தச் சங்கம் கடந்த 10 ஆண்டுகளில், சன்மார்க்கச் சான்றோர் பலரையும் வரவழைத்து, சொற்பொழிவுகளை நிகழ்த்தி, சன்மார்க்கம் அறியாத பலரையும் சன்மார்க்க வழிக்குத் திருப்பிக் கொண்டிருக்கும் அரிய பணியினையும், ஏற்கனவே சன்மார்க்கப் பாதையில் தமது வாழ்வினைத் தொடந்துள்ளவர்களுக்கும் மரணமில்லாப் பெருவாழ்வின் (Deathlessness) மாண்பினை உணர்த்தும் வகையிலும்  தொடர்ந்து தனது பணியினைச் செய்து வருகிறது.

 

       அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற வள்ளற் பெருமகனாரின் கொள்கைப்படியும், ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்ற வகையில் பெருமானார் உணர்த்தியதை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஏரியாவில் வசிக்கும்  அன்பர்களின் பேராதரவுடன், அவர்களுக்கும், திருவருட் செயலால், இந்த அருட்பணியில் புண்ணியத்தின் பலாபலன் கிடைக்க வேண்டும் என்ற விதத்திலும் அவர்களிடமிருந்து பொருள் உதவி மற்றும் நிதி உதவியினைப் பெற்று, அன்னதானப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

 

       இதில் சிறப்பு என்னவெனில், குறிப்பாக, ஆதரவற்ற, அனாதைகளாக வீடற்ற நிலையில், எந்த வித உதவியும் இல்லாத அனாதரவான நிலையில் வாழ்வோரை அடையாளம் கண்டு, அன்னதானப் பணிகளை, அவர்கள் வசிக்கும் ஏரியாவிற்கே (FREE FEEDING AT THE DOOR STEP ITSELF) சென்று வழங்கி வருகிறது.

 

       கடந்த 2007ஆம் ஆண்டில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் தயாரிக்கப்பட்ட வள்ளலார் திருவுருவச் சிலையை 15.2.2007ஆம் நாள் (வியாழக்கிழமை) நிறுவியுள்ளது. அந் நிகழ்ச்சிக்கு சென்னையில் வாழும் தயவு திரு மு.பாலு ஐயா மற்றும் தயவு திரு சாது சுப்பிரமணி ஐயா ஆகியோர் முன்னின்று நடத்திக் கொடுத்துள்ளனர்.

 

        வள்ளற் பெருமான் தீப முன்னிலையில் ஆண்டவர் விளங்குவதாக பாவனை செய்து வழிபடும்படி சொல்லிச் சென்ற நிலையிலும், இங்கு வசிக்கும் மக்கள், ஏற்கனவே பழக்கப்பட்டுவிட்ட சிலை வழிபாட்டினைக்கூட இங்கு வந்து  செய்வதற்கு ஒரு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

 

அதன் பேரிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரிலிருந்து செய்து கொண்டு வரப்பெற்ற வள்ளலார் அமர்ந்த நிலையில் உள்ள உருவச் சிலை இங்கு வைக்கப்பட்டு, அன்பர்களின் வழிபாடு நடைபெற்று வருகிறது.

 

       முதற்கட்டமாக,  சிலை வழிபாட்டில் ஏற்கனவே பழக்கப்பட்டுள்ளவர்கள், பழகிப்பழகி, திரு அருட்பிரகாச வல்ளர் பெருமானின் திரு அருட்பாக்களை ஊன்றிப் படித்தும், அவர்கள் அருளிய உபதேசப் பகுதி முதலானவற்றை, தக்க ஆசான்களைக் கொண்டு, அதன் பின்னர் அனகமாக உள்ள அருவ நிலையினைத் தற்போது உணர ஆரம்பித்து, அருட்பெருஞ்ஜோதியினை வழிபாடு செய்து வருகின்றனர்.

 

 வள்ளற் பெருமானின் அருளிய சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை ஆழ்ந்து பயின்றவர்கள், புற நிலையில் அருட்பெருஞ்ஜோதியினை வழிபட்டு, அக நிலையில் அதனை உணர்ந்து மேலேற வேண்டும் என்ற நோக்கில் ஜோதி வழிபாட்டினை கடைப்பிடித்து வருகின்றனர்.

 

வருடந்தோறும் மற்றும் மாதந்தோறும் வாரந்தோறும் மற்றம் தினந்தோறும் இந்த தெய்வ நிலையத்தில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், அவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல், கீழ்க்காணும் நாட்களில், அதனதற்கெதிரே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை, முக்கிய நபர்களைப் பங்கேற்கச் செய்து, இந்த ஏரியாவில் உள்ள அன்பர்களின் உதவி ஒத்தாசையுடன் இந்த தெய்வ நிலையம், மிகச் சிறப்புடன் நடத்திக் காண்பித்துள்ளது.

 




























































வ.எ


நாள்


நிகழ்ச்சி விபரம்


கலந்து கொண்டு சிறப்பித்த முக்கிய நபர்கள்


1.


2.


3.


4.


1.


7.6.1998


தெய்வ நிலையம் புனித நன்னீராட்டு விழா


டாக்டர் திரு க.மணிவாசன். I.A.S., கூடுதல் ஆட்சியர், காஞ்சீபுரம்.

திரு மு.பாலு, சென்னை

திரு கே.சங்கரய்யா

சாது பா.சுப்பிரமணியம்

கன்னியப்ப சுவாமிகள்

அண்ணா ராமதாஸ்

அருட்பா மா.கோவிந்தசாமி

திரு குருபக்கிரிசாமி மற்றும் பலர்


2.


17.10.1999


வள்ளலார் வருவிக்க உற்ற நாள்


திரு R. ராமமூர்த்தி B.P.T, காஞ்சி

திரு ஜெயவேல், து.த.காஞ்சி.

 திரு B.பொன்னப்ப, து.த, சன்மார்க்க சங்கம்

திரு K.R. ஆறுமுகம், முதல்வர், B.P.T, காஞ்சி.

சிறப்புரை திரு முத்துக்காமாட்சி, திருப்பாச்சேத்தி,

திரு மா.கோவிந்தசாமி, விழுப்புரம்.

மற்றும் பலர்


3.


14.6.2003


தருமசாலை விழா மற்றும் புரவலர்களுக்கு பாராட்டு விழா


சிறப்புரை திரு D.சந்திரசேகரன், I.A.S., கூடுதல் செயலர், தமிழ்வளர்ச்சித் துறை

திரு தென்கச்சி சுவாமிநாதன் அகில இந்திய வானொலி புகழ்.

திரு இ.ம.மாசானமுத்து, I.P.S. மாவட்டக் கண்காணிப்பாளர்,

மற்றும் பலர்.


4.


26.2.2006


தைப்பூச விழா அழைப்பிதழ்


திரு மு.பாலு ஐயா, திரு கு.மு.சங்கரய்யா,

திரு சாது, சுப்பிரமணியம், சேவாசிரமம்

திரு R.கருணாகரன், இணை இயக்குனர், சென்னை.

திருமதி T.மைதிலி திருநாவுக்கரசு M.L.A.

மற்றும் பலர்.


5.


28.10.2006


வருவிக்கவுற்ற நநள் மற்றும் திருவேங்கட ஐயா ஆன்மசாந்தி விழழ & சன்மார்க்க கருத்தரங்கம்.


திரு மு.பாலு ஐயா, ஆழ்வார்திருநகர்

திரு R.பாலகிருஷ்ணன், படப்பை மற்றும் பலர்.


6.


15.2.2007


வள்ளலார் திரு உருவச் சிலை பிரதிஷ்டை விழா


திரு மு.பாலு ஐயா சென்னை மற்றும் திரு சாது சுப்பிரமணி ஐயா, I.I.T


7.


17.2.2008


தைப்பூச விழா


திரு இசைமாமணி S.சதாசிவம்

திரு பாலு ஐயா, ஆழ்வார்திருநகர்

இரா.கருணாகரன், இணை இயக்குனர், சென்னை

உயிர் உறவு சங்கரய்யா, சென்னை மற்றும் பலர்



 

இன்னும் சன்மார்க்கப் பணியில் இந்த தெய்வ நிலையம், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் விதத்தில், மாதப் பூச வழிபாடு, சனிக்கிழமை தோறும் அனாதை ஆஸ்ரம அன்னமளிப்பு, வருடத்தில் தைப்பூச வழிபாடு, முக்கியமான சன்மார்க்கச் சான்றோர் பெருமக்களை வரவழைத்து, சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தல், அன்றைய தேதியில், அனாதை குழந்தைகளுக்கு உணவளிப்பு நடத்துதல் மற்றும் தியானம், சத் விசாரம் முதலான நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது,

 

தினமும் காலையில் திரு கோதண்ட ராமன் (60) என்ற அன்பர் தெய்வ நிலையத்தைத் திறந்து சுத்தம் செய்கிறார். காலை 8.00 மணியளவில் தெய்வ நிலையத்திற்கு வந்து,  துணைத் தலைவர், திரு ராமலிங்கம் (Manager, Gr. I, S.B.I, Retired) வந்து 11.00 மணி வரை பணி செய்கிறார். மாலை 5.30 மணியளவில், பெண்டிர் ஒருவர் வந்து திரு அருட்பா பாடல்களைப்பாடி, அங்கு வந்த அன்பர்களுக்கு,  கல்கண்டு வினியோகம் நடைபெறுகிறது.

 

இந்த தெய்வ நிலையத்தின் செயலாளராக திரு P.V. வெங்கடேசன் பணிபுரிந்து வருகிறார்.

 

அவரது முகவரி-

திரு P.V. வெங்கடேசன்,

நிர்.65. வள்ளலார் இல்லம்,

முதல் தெரு, அஷோக் நகர், காஞ்சீபுரம்

பின் கோடு எண். 631 502.

 

இந்த ஏரியாவில், இந்த சங்கத்தின் அதி தீவிரமான  செயல்பாடுகளால், பலர், திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின், சுத்த சன்மார்க்க நெறி முறையினை தமது வாழ்வில் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர் என்பது ஒரு சிறப்பான செய்தி.

 

(இது குறித்த படங்கள் பின்னர் பிரசுரிக்கப்படும்.)
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums
Articles

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace