கோயம்புத்தூர் புக் ஸ்டாலில் பரிணாம வளர்ச்சி பற்றிய படம்.
Ramanujam
posted 40 months ago
31 Aug 2008 05:51:03 GMT 5:51:03 AM
1936 views
கோயம்புத்தூர் புத்தக கண்காட்சியில் மெய்ஞ்ஞான அறிவின்படி
பரிணாம வளர்ச்சியினை விளக்கும் படம்
கடந்த வாரத்துடன் முடிவடைந்த கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சியில், சுவர் ப்ளெக்ஸ் விளம்பரமாக பல படங்கள் தொங்க விடப்பட்டிருந்தன.
அவற்றில், ஒவ்வொருவரையும், ஒவ்வொரு ப்ளெக்ஸ் பேனர் கவர்ந்தது.
அவ்விதம் பார்வையாளர்களைக் கவர்ந்ததில் ஒன்று, திரு அருட்பிரகாச வள்ளலார் படம்.
அது ஏற்கனவே இந்த இணைய தளத்தின் மூலம் 2 தினங்களுக்கு முன் பிரசுரிக்கப்பட்டது.
அடுத்தது, மனித உடம்பில், 6 ஆதாரங்கள் இயங்கும் இடம், 21,600 மூச்சுக் காற்று எங்கெங்கு, எந்த நேரம் முதல் எந்தெந்த நேரம் வரை செயல்படுகின்றது என்பதை விளக்கும் ப்ளெக்ஸ் பேனர்.
இது, மிக அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்து, ஸ்டாலை விட்டு நகர விடாமல் பண்ணியது. அந்த ப்ளெக்ஸ் பேனரும் இந்த இணைய தளத்தில் அன்பர்களின் தகவலுக்காக பிரசுரம் செய்யப்பட்டு விட்டது.
அதேபோன்றதொரு (copy) ப்ளெக்ஸ் பேனர் தமக்கும் வேண்டும் என அடம் பிடித்தவர்களை, ஸ்டாலில் இருந்த மசக்காளிபாளையத்து தயவு அன்பர் திரு பிரபாகரன், தனது வீட்டிலிருந்த கம்ப்யூட்டர் மூலம், கறுப்பு வெள்ளைப் படமாக (ஏ.4சைஸ்) பிரிண்டிங் செய்து கொடுத்துத் திருப்தி செய்தார்.
http://www.vallalarfiles.com/image/HXq,$,2fvsWTjwxBMT8ma6URkA,$,3d,$,3d/sz-tn650/Apictorial15180000.jpg
அடுத்ததாக, உலகம் உருவானது முதல், 6-ஆவது அறிவு படைத்த மனித உடல் கிடைத்து, தயவு மனிதனாக ஆகும் வரையிலும் உள்ள பரிணாம வளர்ச்சி நிலைகளை எளிதாக விளக்கும் படம்.
இதனைத் தயாரித்தது அன்பர் கோயம்புத்தூர் சிவக்குமார்.
திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் நூல்களை ஆராய்ந்து, அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில், அவர், இந்த ப்ளெக்ஸ் பேனரை தயாரித்திருந்தார்.
இதன் விளக்கத்தை, பள்ளிப் பிள்ளைகள் முதல், நூல்கள் பல கற்றாரும், அறிஞர் பெருமக்களும், பல எழுத்தாளர்களும், ஆன்மீக அன்பர்களும், சன்மார்க்க அன்பர்களும் பார்த்து, விளக்கம் கேட்டு, திருப்தியடைந்து சென்றனர்.
ஒருவர் மட்டும், ஏன் கடவுள், ஆன்மாவைப் படைத்து, இத்தனை பிறவிகளை எடுக்க வைத்துக் கஷ்டப் படுத்த வேண்டும் என்று ஸ்டாலில் இருந்த நபர்களை திக்கு முக்காடச் செய்தார்,
என்ன விளக்கம் செய்தும் அதனைக் கேட்கவே மாட்டேன் என்று, திருவிளையாடல் படத்தில் வரும் நாகேஷ் போல, எனக்கு கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரியும் என்று, சென்றே விட்டார்.
இது போன்ற நபர்களை, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆக்ஞைக்கு உட்படுத்த வேண்டும் என ஸ்டாலில் இருந்த அன்பர்கள் விட்டு விட்டனர்.
அந்தப் படம், பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.