HyperLink HyperLink

கோயம்புத்தூர் புக் ஸ்டாலில் அனைவரையும் கவர்ந்த வள்ளற் பெருமான் படம்.

 

கோயம்புத்தூர் புத்தக ஸ்டால் 103ல் அனைவரையும் கவர்ந்த வள்ளற் பெருமானாரின் படம்.
 
 
கோயம்புத்தூரில் 14.8.2008 முதல் 24.8.2008 வரையிலும் புத்தக விழா நடைபெற்றது.
 
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பாக்கள் (திருமுறைகள்) உபதேசம், திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட திரு அருட்பா ஆடியோ சி.டி.கள், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் திருவருட்பா பாக்களுக்கு எழுதிய விரிவுரைப் புத்தகங்கள், சுத்த சன்மார்க்கம்  மற்றும் தயவு விளக்கமாக அவர்கள் எழுதிய தயவுப் பெரு நெறி, தயா விளக்க மாலை மற்றும் அது சார்ந்த புத்தகங்கள் அங்கு ஸ்டால்.103ல் பொது மக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. பெரும்பாலான அன்பர்கள், அவற்றை, வாங்கிப் பயன் பெற்றனர்.
 
அந்த ஸ்டாலை பார்வையிட்ட அன்பர்களில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்த ஒரு படம் வள்ளற் பெருமானின் படம் ஆகும். 
 
 
வள்ளற் பெருமானை அவர்கள் இருந்த காலத்தில், பல அன்பர்கள், போட்டோ எடுக்க முயன்றும், அம் முயற்சியில் அவர்கள் தோல்வியே அடைந்தனர் என்பது சன்மார்க்க உலகம் அறிந்த ஒரு செய்தி.
 
ஆனாலும், பழக்க வசத்தால், பெருமான் எப்படி இருந்திருப்பார் என்பதை, அவரவர்களின் கற்பனைக்குத் தக அவரவர்கள் வடிவமைப்பதென்பது, தடைசெய்யப் படாமல் தொடர்ந்து நடந்து வருகிறது இன்றளவும்.
 
மேற்படி  படத்தை, கோயம்புத்தூர் அருள் ஜோதி சன்மார்க்க ஞானசபைச் சங்கத்தினர் தயார் செய்திருந்தனர். குரு அன்னை நாகம்மை அவர்களின் தலைமையின் கீழ் மேற்காணும் சன்மார்க்க ஞானசபை ஜி. என்.மில்ஸ். அஞ்சலில், சுப்பிரமணிய பாளையத்தில், பாலாஜி கார்டன்ஸில் இயங்கி வருகிறது.
 
இந்த சன்மார்க்க சங்கத்தவர்கள், வரும் 14.9.2008 அன்று காலை 11.00 மணியளவில், கீழ்க்கண்ட இடத்தில் வழக்கமாக நடத்தும் கூட்டம் நடைபெற  இருப்பதாக மேற்படி சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்த அலுவல் குழு அன்பர் திரு ரமேஷ் பாபு கூறினர்.
 
14.9.2008 அன்று கூட்டம் நடைபெறும் இடம்
 
சசி பாலிகா வித்யா மந்திர், டோர்.
நிர்.7/8. ஆஸாத் ரோடு,
சாஸ்திரி மைதானம் பின்புறம்,
R.S. புரம், கோயம்புத்தூர்.
 
 
Daeiou Team, Madurai.

 

Title:
 
Comment:
 
(* login required)

Latest Prev</span 1 Next Begining 
2. # re: கோயம்புத்தூர் புக் ஸ்டாலில் அனைவரையும் கவர்ந்த வள்ளற் பெருமான் படம்.
Jan 25 2009 8:40PM Ramanujam

The suggestion is welcomed.

The information about the necessity to put up a separate stall at the

next Book Fair to be conducted at Madurai (for the benefit of the southern

District area people and the public of Madurai, )will be passed on to the

District Sanmarga Association President Thiru T.R. Jawaharlal and

Secretary, Th. Subramaniam.

During the recent District Sanmarga Federation Meeting held at Madurai

on 20.12.2008 & 21.12.2008, a separate Book Stall was put up for the works of Thiru

Arutprakasa Vallalar and Dhayavu Principles by Swami Saravanaananda

of Dindigul and the Thiru Arutpa audio C.Ds. Many Sanmargis got the Books

and Thiru Arutpa audio C.Ds.

Daeiou Team.

1. # re: கோயம்புத்தூர் புக் ஸ்டாலில் அனைவரையும் கவர்ந்த வள்ளற் பெருமான் படம்.
Jan 24 2009 5:33AM arumugam surendran

ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI THANIPERUMKARUNAI ARUTPERUMJOTH

ANBULLA ARULLAR,
I am fee very happy that nowdays many people like to follow samarasa sutha sanmarka sangam .This is happend when they come to read adout vallalar teachings.I feel very proud that our sanmarka anbarkal put seperate book stall in chennai and coimbatore.I feel very sad why they didnt put seperate book stall in madurai book exhibation which was held on last of december.Madurai is centre city which connects so many small towns. IN FUTURE DONT FORGET to put a book stall in madurai book exhibition.Surely you will come to know the result how eagerly they are expecting this.
Latest Prev</span 1 Next Begining