மனித உடலில் ஆதாரங்கள்-சுவாச நிலைகள்-மாயா திரைகள் விவரம்-ப்ளெக்ஸ் பேனர்.
Ramanujam
posted 24 months ago
26 Aug 2008 11:12:05 GMT 11:12:05 AM
1449 views
கோயம்புத்தூர் புத்தக விழாவில் அனைவரையும் கவர்ந்த ஃப்ளெக்ஸ் பேனர்.
கடந்த 14.8.2008 முதல் 24.8.2008 வரையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற புத்தக விழாவில் 103-ஆம் எண் கொண்ட ஸ்டாலில் வள்ளல் பெருமானின் திரு அருட்பாக்களும், உபதேசப் பகுதிகளும், வடலூர் தெய்வ நிலையங்கள் பதிப்புக்களும், திரு அருட்பா ஆடியோ சி.டி.களும் இடம்பெற்றன. அதேபோல், திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகளின் சுத்த சன்மார்க்கம் விளக்கப் புத்தகங்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.
புத்தகங்கள், திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் உருவான ஆடியோ சி.டி.கள் முதலானவை விற்பனை செய்யப் பட்டாலும், மேற்படி ஸ்டாலுக்கு வந்த அனைவரையும் கவர்ந்த ஒரு படம், ஒரு நாளில், மனிதன் விடும் 21,600 சுவாசங்கள், எங்கெங்கிருந்து எந்தெந்த மணிக்கு விடப் படுகின்றன. அவை விளக்கும் மாயா திரைகள் மனித உடலில் எங்கெங்கு உள்ளன என்பதேயாகும்.
இந்தப் படம், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் மற்றும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதியுள்ள சுத்த சன்மார்க்க விளக்கக் கருத்துக்களின் அடிப்படையில் வடலூரில் உள்ள திருவாளர்கள் ப.கோ.இராமலிங்கம், K.N. வரதராஜூலு, N. ராமர், ஜோதிமுருகன், T. சீனிவாசன் முதலான - அன்பர்களால் தயாரிக்கப்பட்டதாகும். குறிப்பாக, இந்த படத்தின் விபரங்களை, சித்தா மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள், யோகக் கலை கற்றவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், ஆகியோர் மிக்க ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
பார்வையாளர்களில் பெரும்பாலானோரைக் கவர்ந்த அந்த படம்,
அன்பர்கள் அனைவரின் கவனத்திற்கும் இணைக்கப்பட்டுள்ளது.
Daeiou Team, Madurai.