சுத்த சன்மார்க்க நூல்கள் கோயம்புத்தூரில் கிடைக்குமிடம் விலாசம்
Ramanujam
posted 24 months ago
25 Aug 2008 02:28:34 GMT 2:28:34 AM
773 views
கோயம்புத்தூரில் சுத்த சன்மார்க்கம் சார்ந்த புத்தகங்கள் திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் - தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு.
கோயம்புத்தூரில் 14.8.2008 முதல் 24.8.2008 வரையில் நடைபெற்ற புத்தக விழாவில் திண்டுக்கல் தயவு சரவணானந்த சுவாமிகளின் சுத்த சன்மார்க்க விளக்கப் புத்தகங்கள் மற்றும் திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் திரு அருட்பா, உபதேசம் முதலான புத்தகங்கள், திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடியோ சி.டி. முதலானவற்றை, விற்பனை செய்வதற்காக, 103ம் எண் புத்தக ஸ்டால் ஏற்படுத்தப்பட்டு, கோயம்புத்தூரில் வாழும் சன்மார்க்க அன்பர்கள் பயன்பாட்டிற்காகவும், மற்றும் பொதுமக்கள் சுத்த சன்மார்க்க நெறி குறித்து அறிந்து கொள்வதற்காகவும், 11 நாட்கள் விற்பனை செய்யப்பட்டது.
திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய திரு அருட்பா பாடல்களுக்கு எழுதிய விரிவுரை நூல்கள், சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் அடங்கிய புத்தகங்கள், தயவு கொள்கைகள் குறித்த நூல்கள் மற்றும் திரு அருட்பா அமுதம் ப்ரொஜெக்ட் மூலம் உருவான ஆடியோ சி.டி.கள் முதலானவை மென்மேலும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, நாமக்கல், கரூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் அதனைச் சுற்றியிலும் உள்ள பல மாவட்டங்களில் வாழும் சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில், அவை, கோயம்புத்தூரில் உள்ள சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார் வீட்டில் இருக்கட்டும் என்று, திண்டுக்கல்லில், தயவு நூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் அவர்கள், அனுமதி அளித்துள்ளார். இவற்றைப் பெறுவதற்காக பொருட் செலவில், யாரும் இனி, திண்டுக்கல் செல்ல வேண்டாம்.
சரவணம்பட்டியில் LGB நகரில், கீழ்க்காணும் விலாசத்தில் வசிக்கும் திரு சிவக்குமார் வீட்டில், ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் கம்பெனி நிறுவனர் திரு ராம்தாஸ் அவர்களின் அனுமதியுடனும், ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும், வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில், திரு அருட்பா அகவல் பாராயணம் அன்னமளித்தல் மற்றும், சத் விசார நிகழ்ச்சிகள் வெகு காலமாக நடை பெற்று வருகின்றன.
மேற்காணும் புத்தகங்கள் வேண்டுவோர், கீழ்க்காணும் விலாசத்தில், பெற்றுக் கொள்ளலாம்.
புத்தகங்கள் மற்றும் திருஅருட்பா சி.டி.கள் கிடைக்குமிடம்.
திரு சிவக்குமார்,
நிர்,95, திருவள்ளுவர் வீதி,
கிருஷ்ணாபுரம் LGB நகர், சரவணம்பட்டி,
கோயம்புத்தூர் 641 035.
இந்த செய்தியினைக்கண்ணுறும் அன்பர்கள், புத்தகம் மற்றும் ஆடியோ சி.டி.கள் வேண்டுவோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதே, இதனை இணைய தளத்தில் வெளியிடும் நோக்கமாகும்.
Daeiou Team, Madurai,
(camp) Coimbatore.