திருஅருட்பா விற்பனை-கோயம்புத்தூரில் புத்தக விழா 24.8.2008-டன் நிறைவுறல்
Ramanujam
posted 41 months ago
25 Aug 2008 01:32:37 GMT 1:32:37 AM
1505 views
கோயம்புத்தூரில் புத்தக விழா நிறைவு நாள் நிகழ்ச்சி (24.8.2008)
கடந்த 14.8.2008 முதல் 11 நாட்கள் கோயம்புத்தூரில் நடைபெற்ற புத்தக விழா நிகழ்ச்சி, 24.8.2008 (ஞாயிறு) அன்று இரவு 9.00 மணியளவில் முடிவு பெற்றது.
மற்ற நாட்களில் இல்லாத வகையில், அன்றைய தேதி ஒரு விடுமுறை நாளாக இருந்ததாலும், கடைசி நாள் என்ற முறையிலும், பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் வந்து திரு அருட்பா உபதேசம், ஆடியோ சி.டி,கள் - மற்றும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் அருள் நூல்களைப் பெற்றுச் சென்றனர்.
குறிப்பாக துடியலூர் சன்மார்க்க அன்பர் அன்றைய தேதியில், அகவல் பாராயணத்தை முடித்து விட்டு, இங்கு வந்து மழையூர் சதாசிவம் அவர்களின் இசை (Thiru Arutpa Amutham Project) 8 (எட்டு) ஆடியோ கேசட்டுகள், கேட்டுப் பெற்றுச் சென்றார்.
அதேபோல் கோயம்புத்தூர் நகரில், இமய ஜோதி ஞானானந்தா அவர்கள் நடத்தும் சன்மார்க்க சங்கத்தில் இருந்து அன்பர்கள் வந்து, ஸ்டால் போடுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டம், ஹோசூரில் சன்மார்க்க சங்கம் கட்டுவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து வரும், கோயம்புத்தூரில் அருள் ஜோதி சன்மார்க்க ஞான சபை நடத்தி வரும் குரு அன்னை நாகம்மை அம்மா அவர்கள் சங்கத்தில் இருந்து வந்த அன்பர்களும் வாழ்த்தியதுடன், திருஅருட்பா முதலான நூல்களையும் பெற்றுச் சென்றனர்.
மற்றும் பல சன்மார்க்க அன்பர்கள் வந்து ஸ்டால் எண்.103ல் இருந்த அன்பர்கள் (1) சிவக்குமார், சரவணம்பட்டி (2) பிரபாகரன், மசக்காளி பாளையம் (3) தயவு குழு அன்பர், மதுரை மற்றும், கோயம்புத்தூர் எல்.ஜி.பி.நகர் ஷ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவன அதிபர், திரு ராம்தாஸ் முதலானோரையும், (சென்னையில் இருந்த) தயவு அன்பர் திரு சாயி கணேஷ் ஆகியோரையும்
- அவர்கள் திருவருட்பிரகாச வள்ளலார் மற்றும் திண்டுக்கல் தயவு சரவணானந்த சுவாமிகளின் புத்தகங்களை விற்பதற்கென இது வரை இல்லாத வகையில், கோயம்புத்தூர் புத்தக விழாவில், ஒரு தனி ஸ்டால் ஏற்பாடு செய்து சுத்த சன்மார்க்கம் பரவுவதற்கு உதவியதற்கு, மிகவும் பாராட்டினர். எடுத்துக்கொண்ட தனி முயற்சியினை மென்மேலும் தொடரும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இரவு சுமார் 9.50 மணியளவில், வந்திருந்த புத்தகங்களில், விற்பனை செய்தது போக, ஏனைய புத்தகங்களை ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவன அதிபர் திரு ராம்தாஸ் அவர்கள், தாமே நேரில் வந்து கடைசி வரையிலும் இருந்து தமது நிறுவன வேனில் எடுத்துக் கொண்டு செல்வதற்கு மிகுந்த உதவி செய்தார்.
கோயம்புத்தூர் நகரிலும் அதனைச் சுற்றிலும் உள்ள ஏரியாக்களில், சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்கள் பெரு வாரியாக இருந்தும், புத்தகத் திருவிழாவில் புத்தக ஸ்டால் அமைத்து, சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள், இந்த ஏரியா முழுவதும் பரவுவதற்கு உதவி செய்த ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் அதிபர் திரு ராம்தாஸ் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அன்பர்களும் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியவர்கள் என்பதை சன்மார்க்க உலகம் என்றும் மறவாது.
இதனை முன் உதாரணமாக வைத்து, மற்ற மற்ற நகர்களில் இது போன்ற புத்தகத் திருவிழாக்கள் எங்கெங்கு நடைபெற்றாலும் அங்கெல்லாம், வள்ளல் பெருமானின் திரு அருட்பாக்கள், மற்றும் சுத்த சன்மார்க்கம் சார்ந்த சன்மார்க்கக் கருத்துக்கள் நிறைந்த புத்தகங்கள் விற்பனை செய்வதற்கு, அங்கங்கு உள்ள சன்மார்க்க அன்பர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சிக்கு இந் நிகழ்ச்சி, ஒரு முன் உதாரணமாக அமைந்தது என்பது ஒரு நிதர்சனமான உண்மையாகும்.
Daeiou Team, Madurai.
(camp) Coimbatore.