<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

தைப்பூச நாளை அரசு விடுமுறையாக அறிவிக்கக் கோரிக்கை

Ramanujam
posted 41 months ago
13 Aug 2008 22:52:51 GMT 10:52:51 PM

1688 views



தைப்பூச நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரிக்கை.

 


 

          தமிழ் நாடு அரசு, தை மாதத்தை, வருடப் பிறப்பு மாதமாக ஏற்கனவே அறிவித்து விட்டது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு சன்மார்க்க உலகத்திடையே, ஒரு மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. இவ் விதம் தை மாதத்தை, வருடப் பிறப்பு மாதமாக அறிவித்ததற்கு, தமிழ் நாடு அரசிற்கு அனைவரும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

         வள்ளற் பெருமான் மனித குலத்தில் அவதரித்து, மனிதனும் சுத்த சன்மார்க்க உயர் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தால், இறவா நிலை அடையலாம் (Deathlessness)  என்பதற்கு, தாமே உதாரணமாகத் திகழ்ந்து, அந் நிலையை அடைந்தார்.

 

       ஆன்ம உரிமைச் சகோதரர்களாக (Universal Brotherhood) உள்ள இம் மனித குலம் அனைத்தும், தாம் அடைந்த அந் நிலையை அடைவதற்கு ஒழுக்க நெறிகளுக்கான பயிற்சிகளைப்  பெறும் விதத்தில், வடலூரில் சத்திய தருமச் சாலையையும், சத்திய ஞான சபையையும், மற்றும், சங்கத்தையும் தோற்றுவித்தார்.

 

          வழக்கமாக மாதப் பூச நாட்களில், வடலூர் ஜோதி தரிசனத்தைக் காண்பதற்கு, மாநிலம் முழுவதிலுமிருந்து, வடலூருக்கு  பல்லாயிரக்கணக்கான அன்பர்களும் சன்மார்க்க சங்கத்தவர்களும், அங்கு வருகை தருகின்றனர்.

 

          அதேபோல், தைப் பூச தரிசனம் காண்பதற்கு, லட்சோப லட்சம் மக்கள் வடலூர், மேட்டுக் குப்பம், மருதூர், கருங்குழி ஆகிய இடங்களுக்கு, தம் குடும்பத்தினருடன் வருகை தருவது தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.

 

 இந்த தைப்பூச நாளன்று, மாநிலம் முழுவதிலுமிருந்து மக்கள் வெள்ளம் ஜோதி தரிசனம் காண்பதற்கென வடலூருக்கு வருவதால், அந் நாளை, அரசு விடுமுறை நாளாக அறிவிக்கும்படி கோரி, தமிழ் நாடு அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் விண்ணப்பித்து, அதற்கான உத்தரவினைப் பெற வேண்டியுள்ளது.

 

எனவே, அதற்கான மனுவினை, கீழ்க்கண்ட முகவரிக்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட சன்மார்க்க சங்கங்கள், தாமும், தமது மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளைச் சங்கங்களிலிருந்தும் கோரிக்கை மனுவினை அவர்களே நேரடியாக,  மாண்புமிகு தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் அவர்களுக்கும்,   (தமது சங்கத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் உள்ள முக்கியஸ்தர்கள் (Letter Head Pad or by affixing the rubber Stamp of the Sanmarga Sangam) கையெழுத்துப் பெற்று), உடனடியாக அனுப்ப வேண்டும்.

 

அனுப்ப வேண்டிய முகவரி

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,

புனித  ஜார்ஜ்  கோட்டை, சென்னை.9.

 

அதன் பிரதியை, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களுக்கும் அனைவரும் அனுப்பி வைக்க வேண்டும்

 

அனுப்ப வேண்டிய முகவரி

 

தலைமைச் செயலாளர்,

 தமிழ்நாடு அரசு,

புனித ஜார்ஜ் கோட்டை,

சென்னை.9

 

இதனைப் படிக்கும் சன்மார்க்க அன்பர்கள், தத்தமது தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் (Member of Legislative Constituency) மற்றும் தமது பாராளுமன்றத் தொகுதியின் (Member of Parliament) உறுப்பினர் அவர்களுக்கும் மேற்படி மனுவின் நகலுடன் அனுப்பி வைத்து, அவர்கள் மூலமாக, தைப்பூச நாளை, அரசு விடுமுறை நாளாக அறிவிப்பதற்கு ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.


 


 

அனைவரின் வசதிக்காக, கோரிக்கை மனுவின் நகல் இத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 


 

மனுவின் மாதிரி நகல் –

 


 

 

 


தைப்பூச நாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரிக்கை.

 


 

அனுப்புபவர்,

 

. .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ,

தலைவர்,

சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்,

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

. . . . . . . . . . . . . . . . . . மாவட்டம்.

 

 

பெறுபவர்

 

மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள்,

புனித ஜார்ஜ் கோட்டை,

சென்னை.9

 

 

மதிப்பிற்குரிய அய்யா,

 

 

          தமிழ்நாடு அரசு, தை மாதத்தினை, தமிழ் வருடப் பிறப்பு மாதமாக அறிவித்துள்ளது. அதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

தை மாதத்தில், பழனியிலும், வடலூரிலும், பூச நாள் விழாக்கள் தொன்று தொட்டு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. வடலூரில் இந்த விசேடத்தின் போது மட்டுமே, ஏழு திரைகளும், சத்திய ஞான சபையில் (Temple of Wisdom) நீக்கம் செய்து, பக்தர்களுக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

 

அவ் விழாவிற்கு, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலுமிருந்து, பொது மக்கள், குடும்பங்களுடன் வந்து கலந்து கொள்கின்றனர்.

 

பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற நாட்டினரும், இந்த தைப்பூசப் பெருவிழாவினைக் காண்பதற்கு, வடலூருக்கு வருகை தருகின்றனர்.

 

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும், தைப் பூச விழா அந்நாட்டு மக்களால் நீண்ட காலமாக வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந் நாட்களில், அரசு விடுமுறை அங்கு விடப்பட்டுள்ளது.

 

எனவே, வடலூரில், தைப்பூசத் திருவிழா கொண்டாடுவதற்கு ஏதுவாக, அந்த நாளை, அரசு விடுமுறை நாளாக, அறிவிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

நாள்.      .8.2008.

இடம் .     .. . . . . . . . . . .                                                          இப்படிக்கு,

 

 

 

                                       தலைவர்,             செயலாளர்         பொருளாளர்

                                   (கையெழுத்து - ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையுடன்)


 


 

 

 

(இதன் நகலை, தலைமைச் செயலாளர், தமிழ் நாடு அரசு, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை.9 என்ற முகவரிக்கும் இதே போல் கையெழுத்துப் போட்டு, அந்தந்த சங்கங்கள், தாமே, சங்கத்தில் லெட்டர் ஹெட் பேடிலோ அல்லது சங்கத்தின் பெயர் உள்ள ரப்பர் ஸ்டாம்ப் போட்டோ அனுப்பி வைக்கலாம். அதன் நகலினை, சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் பாராளு மன்ற உறுப்பினர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கலாம். இன்னும் 4 மாதங்களே இடை வெளி உள்ளதால், அனைத்து சங்கங்களும், இம் மனுவினை, உடனே அனுப்பி வைக்க வேண்டப் படுகிறது)

 

 

 

 

             

 

Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums
Articles

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace