<<
Upcoming Events
Space Directory
Web Albums
Documents Download
Audio
Radio
Search in ThiruArutpa
Print
Post your comment

தைப்பூச நாளை, அரசு விடுமுறையாக அறிவிக்க கோரிக்கை

Ramanujam
posted 41 months ago
31 Jul 2008 09:09:52 GMT 9:09:52 AM

2020 views


வடலூரில் தைப்பூச விழாவிற்கு அரசு விடுமுறை வழங்கக் கோரிக்கை

 

        ஏற்கனவே சித்திரை மாதத்தின் முதல் நாளை, வருடப் பிறப்பாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வந்தது.

 

     தமிழ்நாடு அரசு, தை மாத முதல் நாளை, வருடப் பிறப்பு நாளாக அறிவித்துள்ளது.

 

      வழக்கமாக, தைப்பூசப் பெருவிழா, முருகனின் திருத்தலமான பழனியிலும், வடலூரில் திரு அருட்பிரகாச வள்ளலார் அமைத்த சத்திய ஞான சபையில். ஏழு திரை நீக்கி, காண்பிக்கப்படும் ஜோதி தரிசனத்திற்காக, நடத்தப்படுகிறது.

 

         அதனைக் காண்பதற்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் வடலூரில் கூடுவார்கள்.

 

           தைப்பூச நாள் மிகவும் விசேடமான நாளாக, வெளி நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாடுகளில், பொது மக்கள் விழா நடைபெறும் இடங்களுக்குச் சென்று வருவதற்கு வசதியாக, அந் நாட்டு அரசு, விடுமுறை  அறிவித்துள்ளது.

 

        அதேபோல், தைப்பூச நாளினை, தமிழ் நாடு அரசு, விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.

 

       இது குறித்து கோரிக்கை மனு தயார் செய்து, இத்துடன் இணைத்து பார்வைக்குத் தரப்பட்டுள்ளது.

 

         இந்த இணைய தளத்தினை பார்த்துப் பயன் பெறும் அன்பர்கள், அந்த மனுவை நகல் எடுத்து, தமது மாவட்ட சமரச சுத்த சன்மார்க்கச் சத்தியச் சங்கத்தில் கொடுத்து, நிர்வாகிகளிடம், இது குறித்து விளக்கி, இந்த ஞாயமான கோரிக்கையினை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

 

     , இந்த மனுவை நகல் எடுத்து, தமது மாவட்டத்தில் உள்ள எல்லா கிளைச் சங்கங்களுக்கும் கொடுத்து, அவர்கள், நேரடியாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பி வைக்கத் தக்க நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

 

       தாம் இணைய தளத்தில் பார்த்த இச் செய்தியை, மாதந்தோறும் நடத்தப்படும் பூச விழாவின்போது, அன்பர்களிண் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும். அவர்களிடமிருந்தும் மனுக்கள் பெற்று, மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களுக்கு, உடனடி நடவடிக்கைக்காக அனுப்பி வைக்க வேண்டும்.

 

இணைப்பு – மனு. {DownloadRefr:686}

 
Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
Daeiou Team தயவுக் குழு.
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Home
Documents
Audios
Photo Albums
Articles

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace