<<
Upcoming Events
Space Directory
Web Albums
eBook Download
Audio
Romanize Tamil
Search in ThiruArutpa
Print
Post your comment

விழுப்புரம் மாநாட்டில் - வள்ளலார் ஸ்பேஸ் பற்றிய தகவல்கள் ஒர் அறிமுகம்!

Ramanujam
posted 25 months ago
19 Jul 2008 10:39:16 GMT 10:39:16 AM

940 views

 


அருட்பெருஞ்ஜோதி                                         அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                                       அருட்பெருஞ்ஜோதி

 

சன்மார்க்க சங்கங்களுக்கு தயவு வேண்டுகோள்.

 

             திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடைப்பிடித்து தமிழகத்திலும் சரி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சரி, பல்வேறு சங்கங்களும், பல்வேறு தனியார் அமைப்புக்களும், மனித குலத்துக்கு தொண்டு செய்தும், கல்வி நிலையங்கள் அமைத்தும், புதிய தலைமுறையினரை, பெருமானார் காட்டிய சுத்த சன்மார்க்கப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.

 

         பெருமான் கூறியது போல், உலகளாவிய அளவிலே பல நாடுகளிலும், பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகள்,  இன்றைய நாளில், வெகு வேகமாகப் பரவி வருகின்றன.

 

            நாடு, மொழி, மதம், இனம் என அனைத்தையும் தாண்டி, ஆன்ம நேய ஒருமைப்பாட்டினை (Universal brotherhood) வள்ளல் பெருமான் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

 

            எங்குலம் எம்மினம் என்ப தொண்ணூற்றாறு

           அங்குலம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி

 

          எம்மதம் எம்இறை என்ப உயிர்த்திரள்

          அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி

 

என்ற அகவல் வரிகள் ஈண்டு நினைவு கூறத்தக்கவை.

 

            .

 

            வள்ளலார்ஸ்பேஸ் இணைய தளம், உலகில் எந்த நாட்டில், எந்த மொழியில் வள்ளல் பெருமானின் சன்மார்க்க சங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அவை அனைத்தையும், ஒருங்கிணைத்து, ஒரே அணியில் கொண்டு வரும் முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.

 

           உதாரணமாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு சன்மார்க்க சங்கங்களும், தமிழ் நாடு கடந்து அண்டை மாநிலமான புதுச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், மலேசியாவில் சுங்கப் பட்டானியில் உள்ள சங்கமும், பர்மாவில் ரங்கூனில் உள்ள சங்கமும், ஸ்ரீ லங்காவில் சாவகச்சேரியில் உள்ள சங்கமும் மற்றும், அமெரிக்காவில் இருந்தும், (ரஷ்யாவில் உள்ள சங்கம் சேர உள்ளது) பல சங்கங்கள் இந்த இணைய தளத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தாங்கள் செய்து வரும் சுத்த சன்மார்க்கப் பணிகளை உலகறியச் செய்து வருகின்றன.

 

            ஒவ்வொரு சங்கத்திலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்தும், போட்டோக்களும், ஆடியோ சி.டி.யில் சன்மார்க்கச் சான்றோர்களின் உரையாடல்களும், வீடியோ காட்சிகளும், எடுத்து, இந்த இணைய தளத்தில் சேர்த்துள்ளனர். இதன் மூலம், உலகில் உள்ள ஏனையோர் அனைவரும் ஒவ்வொரு சங்கத்தின் நடவடிக்கைகளையும் அறியச் செய்துள்ளனர்.

 

            வள்ளல் பெருமானின் கொள்கைகளைக் கடைப்பிடித்து பல நற்செயல் செய்து வரும் பல சங்கங்கள் இந்தியாவிலும் சரி, வெளி நாடுகளிலும் சரி, இயங்கி வந்தாலும், அவை பற்றிய நல்ல பல செய்திகள், இன்னும் வெளியுலகு அறியாதிருக்கின்றன.

 

         அனைவரும் ஒருங்கிணைவதற்கு, ஒரு வாய்ப்பினை, இந்த www.vallalarspace.com இணைய தளம் இலவசமாக அளித்து வருகிறது., இது வரை சேராத சங்கங்களும், சன்மார்க்கச் செயல்பாடுகளை தனி நபராக இருந்தும் செய்து வரும் பல அன்பர்களும், இவ் வாய்ப்ப்பினை பயன் படுத்திக் கொண்டு இன்புற்றும் தயவுடனும் வாழ வள்ளலார் ஸ்பேஸ் டீம் விரும்புகின்றது.

 

            இதற்கென கட்டணம் ஏதும் கிடையாது. எனவே, இதுவரை இந்த இணைய தளத்தில் சேராத சங்கங்கள் மற்றும் அன்பர்கள், தாம் செய்து வரும் சுத்த சன்மார்க்கச் செயல்பாடுகளை விளக்கி, எழுத்து மூலமாக இந்த இணைய தளத்திற்கு அனுப்பி உரிய இடம் ஒதுக்கீடு செய்யப் பெற்றுக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

            இது குறித்து வெளியிடப்பட்ட பிரசுரம், அடியில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

 


http://www.vallalarfiles.com/image/ZeUmEeyvJqEAu3HMbUKLyg,$,3d,$,3d/sz-tn650/SpaceInvit11540000.jpg


http://www.vallalarfiles.com/image/rY,$,2fifuMWVOs3DZwgqDCvnQ,$,3d,$,3d/sz-tn650/SpaceInvit11560000.jpg


http://www.vallalarfiles.com/image/ucA4JtvDs61U1HCuITchZA,$,3d,$,3d/sz-tn650/SpaceInvit11580000.jpg


http://www.vallalarfiles.com/image/KvpFSc6,$,2b9QqEndPK0iAEQg,$,3d,$,3d/sz-tn650/SpaceInvit11600000.jpg


Tags:
Print
Post your comment
newest
oldest
post a comment

Login
Login to post your comments
A. RAMANUJAM
☎: 91-97898 72120
2/244-1, Thandal Muthu Konar Street,
Narayanapuram (East),
Reserve Lines (Post)
MADURAI.14, Tamil Nadu, India-625 014
Events & Meetings

All the contents including articles, documents, audio and video on this DAEIOU - தயவு website is copyrighted and owner of this content. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the authors content, audio or documents and video without permission is prohibited.

Powered by VallalarSpace