DAEIOU - தயவு
விழுப்புரத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க எழுச்சி மாநாடு

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க எழுச்சி மாநாடு.
விழுப்புரம் மாவட்டம்.
SUTTHA SANMARKKA CONFERENCE AT VILLUPPURAM.
நாள் – 26.7.2008, (சனி) 27.7.2008 (ஞாயிறு) ஆடி 11, 12 ஆகிய நாட்கள்.
இடம் – கரும்பு விவசாயிகள் சமுதயக் கூடம், விழுப்புரம், (காட்பாடி கேட் அருகில்)
மாநாட்டு விழாத் தலைமை
தவத்திரு சாது சிவராமன், அவர்கள்., சமரச சுத்த சன்மார்க்க யோக சாலை, ஞானசித்திபுரம், திருக்கன்ண்டீஸ்வரம் (என்ற) திருவடுகூர், கடலூர் மாவட்டம்.
மாநாட்டுக் குழு அன்பர்கள்
திரு.கோ.ஜெயமூர்த்தி, வள்ளலார் அகில உலக சேவை மையம், திண்டிவனம்.
திரு.கு.கணேசன், செயலர், புதுச்சேரி கூட்டமைப்பு.
திரு.பி.ஏகாம்பரம், ஆசிரியர் (ஓய்வு), விக்கிரவாண்டி.
திரு.சாமி பஞ்சநாதன், B.Com.,M.B.A., வள்ளலார் அகில உலக பேரவை, வடலூர்.
மாநாடு அமைப்பாளர்
ஆன்மநேயன் திரு ஜெய அண்ணாமலை, Ex.M.C.,
தலைவர், விழுப்புரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மாநாட்டுக்குழு.
தலைவர், விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (வடக்கு)
177, மெயின் ரோடு, விக்கிரவாண்டி, 605 652.
விழுப்புரம் வட்டம். செல் - 99948-56314.
மாநாட்டின் நோக்கங்கள்:-
  1. வடலூர் பெருவெளி மற்றும் வள்ளலார் தெய்வ நிலையங்கள் யாவும் வள்ளல் பெருமான் வகுத்த நெறிப்படி நடத்த வற்புறுத்தல்.
  2. வடலூரில் சட்டத்துக்குப் புறம்பாகக் கைப்பற்றி விற்பனை செய்யப்பட்ட பெருவெளி நிலங்களை மீட்க அரசை வேண்டுதல்.
  3. வடலூரில் தருமச் சாலையில் இயங்கி வந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை, தமிழக அரசு புனரமைத்து வள்ளலாரின் தெய்வ நிலையங்களின் நிர்வாகத்தை, அதனிடம் ஒப்படைக்க கோருதல்.
  4. வடலூரில் சமய மதங்கடந்த சன்மார்க்க நிலையங்களை சமய சார்புடைய இந்து அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகம் செய்வது முரணான செயல். எனவே தகுதியுடைய சுத்த சன்மார்க்கிகளை கொண்ட தனி வாரியம் அமைத்து நிர்வாகம் செய்ய அரசிடம் கோரிக்கை வைத்தல்.
  5. விழுப்புரத்தில் சாதி, சமய இன பேதமற்ற வள்ளலார் ஒளிநெறி ஞான கோட்டம் அமைந்திட தமிழக அரசை வலியுறுத்தி வேண்டுதல்.
  6. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலைக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் திருவருட்பா, சுத்த சன்மார்க்க தொடர்பான ஆய்வுகளை மாணவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள ஓர் இருக்கை அமைக்க தமிழக அரசிடம் நிதி கோருதல்.
  7. வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றையும், அற்புதங்களையும் தொகுத்து, தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் உலகத்தார் அறிய வழி செய்ய தமிழக அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறையால் புத்தகம் வெளியிட வேண்டுதல். மற்றும் வள்ளலார் தன் உயிரினும் மேலாக கருதிய நம் தாய் மொழி தமிழை சுத்த சன்மார்க்கிகளாகிய நாம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவது.




Sathu Sivaramanar




5 Comments
readm
ARUTPRUMJOTHI, ARUTPERUMJOTHI,
THANIPERUNKARUNAI, ARUTPERMJOTHI.
DEAR,
good effort and need one for world/universe.
BEST WISHES TO SUTHA SANMARKKAM CONFERENCE.
ELLA UYIRKALUM INPUTRU VAZHKA.
VALLAL MALARADI VAZHKA,
VALLAL THIRUVADI SARANAM.
BY
MARUDHANAYAGAM
Monday, July 7, 2008 at 11:14 am by readm
Ramanujam jam
we received some more photos and got updated here (last 3 photos were updated)
Tuesday, July 8, 2008 at 09:21 am by Ramanujam jam
moorthypoongundran
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஐயா தயவு வணக்கம்
விழுப்புரம் மாநாட்டிற்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்
தாங்கள் மாநாட்டு அழைப்பிதழை அழகாக அச்சிட்டு அளித்துளள்மை அருமை மேலும்
நிகழ்ச்சி நிரல் பட்டியலையும் விரைவில் வெளியிட்டால் அன்பர்கள் கலந்து கொள்வதற்கு
பேருதவியாய் இருக்கும்.
தயை கூர்ந்து அளித்தருளும் படி வேண்டுகிறேன். அன்புடன் ஆசிரியர் பூங்குன்றன் காரைக்கால்.
Wednesday, July 23, 2008 at 10:23 am by moorthypoongundran
Ramanujam jam
அனேகமாக எல்லா முக்கியமான சங்கங்களுக்கும் விழுப்புரம் மாவட்ட அன்பர்கள் அனுப்பியிருப்பார்கள்.
எனவே, தமக்கு அருகாமையிலுள்ள மாவட்ட அளவிலான சங்கத்தில், இது குறித்து அன்பர் தெரிந்து
கொள்ளலாமே.
தயவு.
Wednesday, July 23, 2008 at 17:27 pm by Ramanujam jam
Ramanujam jam
இதோ scanned copy of the நிகழ்ச்சி நிரல்
1. {ContentRefr:1452}
2. {ContentRefr:1453}
தயவு.
Wednesday, July 23, 2008 at 17:35 pm by Ramanujam jam