Dhayamoolam
சன்மார்க்க சங்கங்கள் வடலூர் வள்ளலார் தெய்வநிலையங்கள் ஒருங்கிணைப்பு

{tag.month}07/2007{/tag.month}



உலகமெங்கும் ஆன்மநேய ஓரமைப்பாட்டு உரிமையை பரப்ப வடலூரில், 1865 ஆம் ஆண்டு வள்ளலார் சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்கள்.

சங்கம் சார்பாகவே தருமச்சாலை (1867) ஞானசபை (1872) நிறுவப்பட்டது. சித்திவளாக பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது.திருவருட்பா நான்கு திருமுறைகள் (1867) வெளியிடப்பட்டது. இவை யாவையும் வள்ளலாரின் நேரடிப் பார்வையிலேயே நடைபெற்றது.


30.01.1874 வள்ளல் பெருமான் சித்திபெற்ற பின் வடலூர் நிலையங்கள் ஆடுர் சபாபதி, விருத்தாசலம்- வக்கீல் வெங்கடேசர், கான்ட்ராக்டர் -ஆறுமுகம், கடலூர் அப்பாசாமி முதலியோரை அறங்காவலர்களாக அறிவித்து சிதம்பரம் தாசில்தார் உத்தரவுப்படி வடலூர் தெய்வநிலையங்கள் நிர்வகிக்கப்பெற்றன.

இந்த நால்வரும் வேட்டவலம் சமீன்தாருக்கு நிர்வாகத்தை மாற்றிக்கொடுத்து, ஜமீன்தார் சார்பாக சமீன்மேனஜர் சிவச்சிதம்பரம் வேட்டவலத்திலிருந்து வடலூர் வந்து தங்கி அவ்வப்போது வடலூர் தெய்வ நிலைய நிர்வாகத்தை மேற்பார்வையிட்டு செல்வார்.


பெரிய ஜமீன்தார் காலமானபின் வேட்டவலம் சின்ன ஜமீன்தார், ஆடுர் சபாபதி பெயருக்கு அறங்காவலர் பதவியை மாற்றிக் கொடுத்து

11.05.1938 வரை அவர்கள் குடும்பமே வடலூர் நிர்வாகத்தை மேற்பார்வை செய்தனர். 12.05.1938 முதல் இந்து அறநிலையத்துறை வடலூர் தெய்வ நிலைய நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது.

இன்று வரை திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையங்கள் என்ற பெயரில் இந்து சமய அறநிலையத்துறை, வடலூர் நிர்வாகத்தை நிர்வகித்து வருகிறது.

வள்ளலாரின் நேரடித் தொண்டரான மேட்டுக்குப்பம் மணியம் முத்தையா அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து, மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தையும், 1938 முதல், மேற்படி தெய்வநிலைய நிர்வாகத்துடன் இணைத்துக்கொண்டது.

வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லம் 1986-ல் வல்லநாட்டு சுவாமிகளால் சீரமைப்பு பணி துவக்கப்பட்டு,வி.ஆர்.இராமக்கிருஷ்ணன் ஐயா அவர்களால் திருப்பணி செய்யப்பட்டும்.வள்ளலார் ஒன்பது ஆண்டுகள் (1858-1867) தங்கி இருந்து தண்ணீர் விளக்கெரித்த கருங்குழி மணியக்காரர் புருசோத்தமர் இல்லம், தவத்திரு ஊரனடிகளால் 1987-ல் திருப்பணி செய்யப்பட்டும் தெய்வநிலையத்துடன் இணைக்கப்பட்டது.

வள்ளலார் தந்தையை இழந்தபின் கைக்குழந்தையாக ஓராண்டு வசித்த வள்ளலாரின் தாயார் ஊரான பொன்னேரி (திருவாரூர் மாவட்டம்) சின்னக்காவனம்-இல்லம், அவ்வூரைச் சேர்ந்த வள்ளலார் மரபு வழி வந்த சி.சு.நடேசனார் அவர்களாலும், சென்னை வீர.சண்முகனார் அவர்களாலும் 1985-ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டு, அவ்வூர் மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வள்ளலாருடன் நேரடித் தொடர்புடைய இடங்களைப் பற்றி சுருக்கமான தகவல்கள் இதுவே.

வள்ளலார் 1874-ல் சித்தியடைந்த பின் அவர்களின் சீடரான காரணப்பட்டு ச.மு.கந்தசாமி அவர்கள் அடுத்த ஐம்பதாண்டு (1924) தனது இறுதிகாலம் வரை வடதமிழகம் முழுவதும் இசைத்தமிழில் வள்ளலாரின் புகழையும், கொள்கைகளையும் பரப்பினார். ஏராளமான சங்கங்களையும் வட தமிழ்நாட்டில் நிறுவினார்.

புதுக்கோட்டை கடியாப்பட்டி வள்ளல் தி.நா.முத்தையா கு.சு.ளு.யு. அவர்கள் மூலம் திருவருட்பா ஆறு திருமுறைகள் முழுவதையும் 5000 பிரதிகள் அச்சிட்டு சுற்றுவட்டார கிராமங்கள், நகரங்களில் எல்லாம் இலவசமாக வழங்கினார்.

1930-களில் வள்ளலார் இரண்டாவது அண்ணனான பரசுராமர் அவர்களின் மரபு வழிவந்த சென்னை ராஜமாணிக்கனார் அவர்கள் அருட்பெருஞ்சோதி அச்சகம் நிறுவி திருவருட்பா திருவாயிரம் 100 புத்தகங்கள் ரூபாய் ஒன்றுக்கு கொடுத்தார். இச்செயல் அருட்பாவின் புகழை பட்டி தொட்டிகளெங்கும் பரவச் .செய்தது. இது போன்ற பணிகளால் வள்ளலாரின் சன்மார்க்க சங்கங்கள் நாடெங்கும் பரவியது.

இது போன்ற சன்மார்க்க சங்கங்களை எல்லாம் ஒன்றுபடுத்தி வடலூரில் ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவர வேண்டுமென்ற உணர்வு 1930-ம்ஆண்டு

முதல் திருவருளால் காரியப்பட்டுவருகிறது. அது பற்றிய விவரங்களை வரலாற்று வரிசைப்படிபார்ப்போம்.


வடலூரில் சன்மார்க்க சங்கங்களை ஒன்றுபடுத்துகிற முயற்சி ஆண்டுவாரியாக கால வரிசைப்பட்டியல்


1. 1928 ஆம் ஆண்டு சிதம்பரம் பு.அண்ணாமலை, பட்டுக்கோட்டை ளு. நாரயணசாமி (போஸ்ட் மாஸ்டர்) இருவர் முயற்சியால் வடலூரில் சடாந்த சமரச சுத்த சன்மார்க்க தலைமைச்சங்கம் நிறுவப்பட்டது. 1928, 1929 ஆம் ஆண்டுகளில் முதல் இரு சன்மார்க்க மாநாடுகள் நடத்தி, அதில் தமிழ்த்தென்றல் திரு.வி.க.அவர்கள் வள்ளலாரைப் பற்றிய சிறந்ததொரு சொற்பொழிவாற்றினார். இதன் விளைவால் 1930-ம் ஆண்டு முதல் திருவாரூரை அடுத்த தில்லையாடி என்னும் ஊரைச் சேர்ந்த பெரியவர் வரதராஜனார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு அருட்பிரகாசம் என்னும் முதல் சன்மார்க்க திங்களிதழ் வடலூர் தருமச்சாலையிலிருந்து சில ஆண்டுகள் வெளிவந்தது.

2. 1946 ஆம் ஆண்டு விருத்தாசலத்தை அடுத்த கோலியனூர் என்னும் ஊரைச் சேர்ந்த இராமச்சந்திரன் என்னும் சன்மார்க்க அன்பரால் சன்மார்க்க தலைமைச்சங்கம் வடலூரில் பதிவு செய்யப்பட்டு 1960 வரை சிறப்பாக நடத்தப்பட்டது.

3. 1964 ஆம் ஆண்டு வடலூர் துறவி கந்தசாமி அவர்களால் அகில உலக சன்மார்க்க சங்கம் நிறுவப்பட்டு, சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.அருட்சுடர் என்னும் சன்மார்க்க மாத இதழ் தொடர்ந்து நடத்தப்படுகிறது.வடலூரில் மணிமாடம் கட்டப்பட்டது.

4. 1965 ஆம் ஆண்டு பெருந்தொழில் அதிபரும், பொள்ளாச்சி சட்டமன்ற காங்கிரஸ் கட்சி, உறுப்பினருமான நா.மகாலிங்கம் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சன்மார்க்க சங்கம் நிறுவப்பட்டது.வேலூர் ஊ.வ.தெட்சிணமூர்த்தி துணைத் தலைவராகவும், வடலூர் துறவி கந்தசாமி செயலாளராகவும், சேலம் தியாகி முத்தையா துணைச் செயலாளராகவும் செயல்பட்டனர். அருட்பா பாராயணத்திரட்டுகள் அடக்க விலைக்கு வெளியிடப்பட்டது.

5. 1978-ல் தஞ்சை தியாகி பழனிவேலு அவர்கள் முயற்சியால் வடலூரில் மீண்டும் சன்மார்க்க சத்திய சன்மார்க்க சங்கம் என்ற பெயரில் ஒரு தலைமைச் சங்கம் நிறுவப்பட்டது. இரு ஆண்டுகள் நடைபெற்றது.

6. 1983-ம் ஆண்டு வடலூரில் குங்கிலியம் பழ.சண்முகனார், பட்டுக்கோட்டை நர்.முத்துக்குமாரசாமி, சென்னை மு.ளு.மணி உயிர் உறவு சங்கரய்யா, பொறியாளர் மு.சுந்தர்ராஜன், முயற்சியால் சன்மார்க்க சங்கம், உலக மையம் நிறுவப்பட்டது. பல மாநாடுகளை நடத்தியது. விருந்தினர் இல்லம், முதியோர் இல்லம் நடத்துகிறது.சன்மார்க்க மணி, வள்ளலார் உலகம் முதலிய மாத இதழ்களை நடத்தியது.அலுவலகம் வடலூரில் சொந்த கட்டிடத்தில் இயங்குகிறது.

7. 05.05.1991-ல் கும்பகோணம் கீழ்க்கொட்டையூர், அப்போதைய சன்மார்க்க மும்மூர்த்திகளாக திகழ்ந்த குங்கிலியம் பழ.சண்முகனார், துறவி.கந்தசாமி, ஊரன் அடிகளார்-இவர்களை ஒருங்கிணைத்து, சன்மார்க்க சங்கம் கூட்டமைப்பு மத்திய ஜனநாயக முறைப்படி நிறுவப்பட்டது. முயற்சி இராம.பாண்டுரெங்கன், P. உமாகாந்தன், நுச. மு. சுந்தர்ராஜன் டீ.நு.இ இது சிறிது காலம் செயல்பட்டது.

8. தற்சமயம் இச்சங்கத்துக்கு வடலூர் ஏ.குழந்தைவேலு அவர்கள் தலைவராக உள்ளார்.
துலைமை சன்மார்க்க சங்கம் வடலூர் துறவி கந்தசாமி தலைமையில் நிறுவப்பட்டு 1997-ம் ஆண்டு துறவி கந்தசாமி உயிரடக்கம் கொள்ளும்வரை அவரது தலைமையிலேயே செயல்பட்டது.1997-ம் ஆண்டு துறவி கந்தசாமி உயிரடக்கம் கொண்டபின் கீழ்கொட்டையூர் N. இராமதாஸ் அண்ணா தலைவராகவும், நன்னிலம் பொறியாளர் மு. சுந்தர்ராஜன் பொதுசெயலாளராகவும் கொண்டு செயல்பட்டது. தற்சமயம் இச்சங்பத்துக்கு வடலூர் ஏ. குழந்தைவேலு அவர்கள் தலைவராக உள்ளார்.

9. 2005-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த மு.ளு. சுப்புராமன் என்பவரும் தஞ்சை மருத்துவர் னுச. பி.கி.சிவராமன் என்பவரும் பன்னாட்டு சன்மார்க்கச் சங்கம் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகின்றனர்.

இம் முயற்சிகள் எல்லாம் முழுமையாக வெற்றியடையவில்லை என்றாலும், சன்மார்க்க சங்க ஒற்றுமை முயற்சி என்னும் பொன்னேட்டில் வைர வரிகளாக பொறிக்கப்படவேண்டிய தகவல்கள் இவையாகும் என்பதை மறுக்க முடியாது.

இந்நிகழ்வுகளோடு ஓத்த நிகழ்வுகளாக கீழ்க்கண்ட நான்கு சிறப்பு நிகழ்வுகளையும் குறிப்பிடலாம்

1. கீழ் தஞ்சை மாவட்டம் பொறையாரில் 1906-ல்; சன்மார்க்க சாதக சங்கம் நிறுவப்பட்டு 1919-ல் நாகைக்கு மாற்றப்பட்டது. பின்னாளில் நாகை சன்மார்க்க சாதக சங்கம் என்ற பெயரே பிரபலமானது. இச்சங்கம் வடலூர் நிறுவன வரலாற்றில் ½ நூற்றாண்டு காலம் அரும்பெரும் பணிகளை செய்தது. 1927, 1966-ம் ஆண்டுகளில் தருமச்சாலைக்கு இரு திருப்பணிகள் செய்தது இச்சங்கமே.

நாகை முருகேசன், அருட்பா அட்டவணை ரத்தினம், நீலகிரி அருணாசலம், இவர்களை சன்மார்க்கத்துக்கு வழங்கியது இச்சங்கமே. மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் எண்ணெய் போட்டு 24 மணிநேரமும் விளக்கு எரிய பொறையாறு நளச்சக்கரவர்த்தி-ஐ ஏற்பாடு செய்தது இச்சங்கமே.
பொறையாறு சிதம்பர சுவாமிகள், யு.ஆ.P. சுப்புராயர், போன்ற அடியார்களை சன்மார்க்கத்துக்கு வழங்கியது இச்சங்கமே. மேட்டுக்குப்பம் சித்தவளாகத்தில் எண்ணெய் போட்டு 24 மணிநேரமும் விளக்கு எரிய பொறையாறு நளச்சக்கரவர்த்தியை ஏற்பாடு செய்தது இச்சங்கமே.

2. முந்நாள் தமிழக முதல்வர், வடலூர் ழு.P.சு. குருகுல நிறுவனர், சுதந்திர போராட்ட வீரர் ழு.P. ராமசாமி பெரியவர். அவர்களால், வடலூரில் அன்றைக்கு தமிழ்நாட்டில் 12 வருவாய் மாவட்டங்களுக்கும், மாவட்ட சன்மார்க்க சங்கங்களுக்கும், கட்டிடம் கட்டிக் கொள்ள தனி, தனியே மனைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இது சன்மார்க்க உலகம் என்றும் நன்றியுடன் நினைவுகூறத்தக்க ஒரு நிகழ்வாகும்.

3. தவத்திரு ஊரன் அடிகளார் 1967 ஆம் ஆண்டு அரசு பணியை துறந்து முழுநேர சன்மார்க்க பணிக்கு வடலூரில் நிரந்தரமாக குடியேறிய பின், அவரது எளிமைபடுத்தப்பட்ட அருட்பா, உரைநடை பகுதி, வள்ளலார் வரலாறு, வடலூர் வரலாறு முதலான நூல் வெளியீடுகளும், தெய்வநிலைய அறங்காவலர் குழுவில் அவர் 30 ஆண்டுகள் இடம் பெற்று நிதி ஆதாரங்களை வலுப்படுத்தி (குiயெnஉந சுநளழரசஉந னுநஎநடழிஅநவெ)- வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு ஒரு வலுவான நிரந்தர வைப்புநிதி இன்று இருப்பதற்கும் (குiஒநன னுநிழளளைவள) ஊரனடிகளார் பணியே காரணமாகும்.

4. 1988-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், வடலூர் கொண்டா ரெட்டியா அறநிலைய வழக்கில், கனம் நீதிபதி சாமிக்கண்ணு அவர்கள், வடலூர் வள்ளலார் தெய்வநிலையம் சமயம் கடந்த ஒன்று என்று சிறப்பாக தீர்ப்பு வழங்கினார்.
இந்நிகழ்வுகள் எல்லா சன்மார்க்க சங்கங்களும் ஒன்றுபடவேண்டும் என்ற உணர்வை சன்மார்க்க அன்பர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய வரலாற்று ஆவணங்கள் ஆகும்.

நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்னும் வள்ளலாரின் அருட்பாவரிகளுக்கு, மிக சமீப சாட்சியாக 100 ஆண்டுகளாக, வடலூர் சத்திய ஞானசபையிலே, வள்ளலார் கொள்கைக்கு மாறாக நடைபெற்ற சடங்கு பூசைகள் சட்ட ரீதியாக, அப்புறப்படுத்தப்பட்டு, 17.05.2007 முதல் வள்ளலார் கொள்கைப்படி வழிபாடு நடைபெற்ற வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அங்கு சன்மார்க்க முறைப்படி வழிபாடு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தொண்டர் குல வெ. பெருமாள் மற்றும் குறிஞ்சிப்பாடி சன்மார்க்க சீலர் சுப்பிரமணியம் அவர்களின் நெஞ்சுறுதி பாராட்டத்தக்கது.

நம் வேண்டுதல்
எல்லா சன்மார்க்க கிளைச்சங்கங்;களும் ஒன்றிணைந்து வலிமையான ஒரே தலைமை சங்கத்தை வடலூரில் ஏற்ப்படுத்த வேண்டும்.

வள்ளலார் தெய்வநிலையங்களை இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து பிரித்துஇ ஒன்றுபட்ட தலைமைச் சங்கமே வடலூர் தெய்வநிலையங்களை ஏற்று ஜனநாயக முறைப்படிநடத்தவேண்டும்.

உலக நாடுகளிலெல்லாம் இதற்கு கிளைகள் ஏற்படவேண்டும் இதன் சார்பாக வள்ளலார் வரலாறு, திருவருட்பா பதிப்புகள், எல்லா உலகமொழிகளிலும் வெளிவரவேண்டும்.

வள்ளலார் பெயரில் உலகமெங்கும் பயிற்சி மையம், கருணை இல்லங்கள், உடற்பணி நீக்கும் மருத்துவமனைகள் ஏற்படவேண்டும். மனித சமுதாயம் முழூமைக்குமே புலால் மறுக்கச் செய்கின்ற புனிதப்பணியை இச்சங்கம் மேற்கொள்ள வேண்டும். வள்ளலார் வசித்த சென்னை ஏழூகிணறு, வீராச்சாமி தெரு இல்லம் முதலியவை வள்ளலார் தெய்வ நிலையத்துடன் இணைக்கப்பெறவேண்டும்.

சென்னையில் இச்சங்கம் சார்பாக “வள்ளலார் கோட்டம்” அமைவதற்கு அரசிடம் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்

இவையெல்லாம் திருவருளால் பூரண நிறைவு பெற சன்மார்க்க சங்க அன்பர்கள் உலக நலன் கருதி, வள்ளலாரின் குருவருளையும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருளையும் மன ஒருமையுடன் பிரார்த்திப்போமாக!

சிந்தனை தொகுப்பு நாள் : 16.07.2007

திருவருட்பா
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவரவர்
உள்ளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் திருநடம்
புரியும் இடம் என தெரிந்தேன், அந்த வித்தகர்
தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ
- வள்ளலார்

தொகுப்பு:-
மு.வேதரெத்தினம் சி.செல்லத்துரை
க.செந்தில்குமார் மு.திருவள்ளுவன்