Vallalar Universal Mission Trust   ramnad......
உன்சித்தம் எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை
முந்தை வினைதொலைத்துன் மொய்கழற்காள் ஆக்காதே
நிந்தைஉறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ
எந்தைநீ ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
 மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிணிகொள்
பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை
முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க
எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே.
நன்னெறிசேர் அன்பர்தமை நாடிடவும் நின்புகழின்
சென்னெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்குனக்கு
முன்அறியேன் பின்அறியேன் மூடனேன் கைம்மாறிங்
கென்அறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
மைப்படியும் கண்ணார் மயல்உழக்கச் செய்வாயோ
கைப்படிய உன்றன் கழல்கருதச் செய்வாயோ
இப்படிஎன் றப்படிஎன் றென்னறிவேன் உன்சித்தம்
எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே.