உயிர் இரக்கம்
உயிர் இரக்கமே வடிவமாக அமைந்தவர் வள்ளலார். கருணையின் திரு உருவம் என்று சொல்லத் தகுந்தவர் வள்ளலார். அவர் சொல்லவதைக் கேளுங்கள்.
“ உயிர்களிடத்தில் நான் காட்டும் உயிர் இரக்கமும் என் உயிரும் வேறல்ல. உயிர் இரக்கம் என்னை விட்டு விலகினால் என் உயிரும் உடம்பை விட்டுப் பிரிந்து விடும் . உயிர்கள் படுந்துன்பத்தைப் பார்த்து உம்மிடம் அடிக்கடி விண்ணப்பம் செய்தேன் இப்போதும் செய்து கொண்டிருக்கிறேன். என்கிறார்.
வருமுயிர் இரக்கம் பற்றியே உலக
வழக்கில் என் மனஞ்சென்ற தோறும்
வெறுவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன்
விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும்
உருவ என் உயிர்தான் உயிர் இரக் கந்தான்
ஒன்றதே இரண்டிலை இரக்கம்
ஒருவில் என் உயிரும் ஒருவும் என் உள்ளத்து
ஒருவனே நின்பதத்தாணை
பிள்ளைப்பெருவிண்ணப்பம்…3506-6-13
வள்ளலார் மனிதர்களிடமும், பறவைகளிடமும் விலங்குகளிடமும் , தாவரங்களிடமும் ஒரே மாதிரியாகவே இரக்கம் காட்டுகிறார். அவ்வளவு புனிதமான உன்னத மனப்பாங்கு கொண்டு தயவே வடிவமாக விளங்குகிறார். இதனால் கடினமான இரக்கமற்ற எண்ண அலைகளையும் சொற்களையும் செயல்களையும் மற்றவர்கள் பிரயோகித்தபோது அவர் உளம் கரைந்து நெகிழ்ந்து விடுகிறது.
ஜோதி வழியில் வள்ளலார்…
