எல்லா உயிரையும் தன்னுயிர் போலப் பார்க்கும் உணர்வே, சன்மார்க்கதிற்கான சாதனம் - வள்ளலார்.
இவ்வாறான சன்மார்க்கத்தின் வழியே, 70 வயதான திரு. கோவை சிவபிரகாச சுவாமிகள், ஆதரவற்ற மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு சேவை செய்யும் பொருட்டு "இராமலிங்க வள்ளலார் சர்வதேச தர்மபரிபாலன அறக்கட்டளை " என்ற தன்னார்வ (அரசின் உதவி பெறாத) தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை -யின் முதன்மை குறிக்கோள், 'அன்னதானம்'!
இதன் கீழ் இயங்கும் 'சுத்த சன்மார்க்க பயிற்சி நிலையம்' என்ற இல்லம், 70 ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் 40 அநாதரவற்ற பெரியோர்களுக்கு, உணவு, இருப்பிடம் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கி வருகிறது. வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் அமைந்துள்ளது.
தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற சுவாமிகள்,
தற்போது முதுகுத் தண்டு மற்றும் கால்கள் முற்றிலும் செயலிழந்த நிலையிலும், ஒரு சிறு வாகனத்தில் படுத்தவாறே, பல இடங்களுக்கும், குறிப்பாக கிராமங்களுக்கு, பிரயாணம் செய்து, இனிய, எளிய கொங்கு தமிழில், ஊக்கமான குரலில், பாடல்களும், சொற்பொழிவுகளும் நிகழ்த்தி வருகிறார்.
சிறப்பான தமிழ் இலக்கியங்களான திருக்குறள், பெரிய புராணம் மற்றும் திருவருட்பா ஆகியவற்றை படிப்பறிவில்லாத மக்களும் சுவைக்கும் வகையில் கிராமங்களையும் எட்ட வைத்துக்கொண்டிருப்பது, இவரின் மிக சிறந்த சேவையாகும்.
'செவி உணவும், அவி உணவும்' குறைவற்று வழங்குவதே சுவாமிகள் அவர்களின், வாழ்க்கை குறிக்கோளாம்.
ஆசிரமம்தொடர்பு முகவரி:
கோவை தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகளின்
இராமலிங்க வள்ளலார் சர்வதேச தர்மபரிபாலன அறக்கட்டளை
மேட்டுக்குப்பம் (வடலூர்), நெய்வேலி வழி,
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு: 9443359245