ஐயா திரு பழ. நெடுமாறன் அவர்கள் வெளியிட்ட “வள்ளலார் மூட்டிய புரட்சி” என்ற நூலின் ஒரு பகுதி.
செய்குத் தம்பிப் பாவலர்.
மறைமலையடிகளைப் போலவே அருட்பா மருட்பாப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியவர் செய்குதம்பிப் பாவலர். சென்னையில் இட்டா பார்த்தசாரதி நாயுடுவின் அச்சகத்தில் தலைமைப் பார்வைப் பணியாளராகப் பணியாற்றிவந்த பாவலர், நாயுடுவின் ஒத்துழைப்போடே அருட்பா-மறுப்பாளர்களை வென்றார். மருட்பாக் கூட்டத்தார் எழுப்பியிருந்த பல கேள்விகளுக்கு இலக்கண இலக்கிய தர்க்கப் பூர்வமாக விடையளித்தார். ஒரு இஸ்லாமியராக இருந்தபோதும் சமரசப் பாங்கோடு அருட்பாவினது உண்மையைப் பின்வருமாறு அவர் நிலை நாட்டினார்.
“திரு அருட்பா: சமய நூலே ஆயினும், அது தமிழ் நூலாகும். தன்னேரில்லா ஞானப் பூங்காவாகிய அந்நூலின் பெருமை காக்கப்பட்டாக வேண்டும் என ஆணித்தரமாகக் கூறியதோடு அதற்குண்டான விளக்கங்களையும் எடுத்துரைத்தார் பாவலர். வள்ளலார் எழுதியுள்ள பாடல்களில் ஒன்று “இறந்தார் எழுவர் என்று புறத்தாரை ஊது” என்பதாகும். அப்பாடலைச் சுட்டிக் காட்டிய மருட்பா தரப்பினர் பல விதவைப் பெண்கள் தத்தம் கணவர் மீண்டும் கிடைப்பர் என அவர் பின்னே சென்று வந்தே மீண்டனர் எனக் கிண்டல் பேசி வந்ததை அறிந்து அதற்கு மறுப்புரையாக, திரு அருட்பாவில் வள்ளலார் கூறியிருப்பது உயர்ந்த தத்துவமாகும். மனம், புத்தி, அகங்காரம், சித்தம் எனும் நான்கும், ஆணவம், கன்மம், மாயை எனும் மலங்கள் மூன்றும் அப்பாடலில் எழுவர் எனக் கூறப்பட்டுள்ளன. இவை ஏழும் ஒடுங்கி ஆன்ம போதம் முற்படுதலையே இறந்தார் எழுவர் எனக் குறிப்பிட்டுள்ளார் வள்ளலார். இறந்து ஆர் எழுவர் ? இறந்தார் யார்தான் எழுவர் ? எனத் தெளிவாக விளக்கினார் செய்குத் தம்பிப் பாவலர் நா அடக்கினர் எதிர்ப்பாளர்கள்.
“திரு அருட்பா அருட்பாவே ! மருட்பா அல்ல” என எடுத்துரைத்த பாவலருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு யானை மீது அவரை அமர்த்தி காஞ்சீபுரம் வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்று ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்பாள் கோவிலுக்குள் பூரண கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றனர். ஆன்மீகச் சிந்தனையாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் என்பது வரலாற்று நிகழ்வு ஆகும்.

IMG_20160903_145731.jpg
IMG_20160901_143811.jpg
IMG-20151006-WA0000.jpg
அன்பர்களே,வணக்கம்.புறந்தாரை ஊது என்பதன் உண்மையான பொருளை அறிவது நலம். எடுத்த எடுப்பிலேயே,கையற விலாது நடுக் கண்புருவப் பூட்டு என்று வள்ளலார் தொடங்குகிறார்.கண்புருவப் பூட்டு என்பது சுழுமுனையின் மேல் வாசல் கதவாகும்.நடு நாட்டு என்பது வாசியைச் சுழுமுனை நாடியில் செலுத்து என்பதாம்.இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் யோக அனுபவங்களை விளக்குவன. புறத்தாரை என்பது பிழை.புறந்தாரை என்பதுதான் சரி.அகத்தில் அதாவது சுழுமுனை நாடியில் வாசியை மேலேற்றிப் புருவப்பூட்டைத் திறந்தால் தாரை ஒலி ஊதும்.இதனால் தனக்கு ஏற்பட இருக்கும் மரணத்தை நீக்கலாம்.புறந்தாரை என்பது இறைவனால் ஊதப்படும் தாரை ஒலி ஆகும்.இறைவன் தாரை ஒலியை ஊதினால் இறந்தவர்கள் உயிர் பெற்று எழுவார்கள்.
Saturday, September 3, 2016 at 17:26 pm
by Damodaran Raman
Write a comment