31.8.2012, 1.9.2012, 2.9.2012 மலேசியா பிரிக் பீல்டில், வள்ளலாரின் 5வது மாநாடு நடைபெறல்.
=0=0=0=
மலேசியாவில், வள்ளற்பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளைப் பரப்புவதில் டாக்டர் லலிதா வீரையா மற்றும் திரு என்.சி.ஆர். நாதன் ஆகியோர் மிகுந்த பங்கெடுத்து வருகின்றனர். வருடந்தோறும் இதற்கென வள்ளலார் மாநாடு நடத்தி, சுத்த சன்மார்க்க நெறியில் சன்மார்க்க சான்றோர்களை வரவழைத்து, சொற்பொழிவு செய்து, பெருமானாரின் கொள்கைகள் மலேசியாவில் பரவுவதற்கு அருந்தொண்டாற்றி வருகின்றனர். அந்த வகையில், இது வரை 4 ஆண்டுகளாக அவர்கள் இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்து வந்தனர்.
நடப்பு (2012) ஆம் ஆண்டில், மலேசியாவில் பிரிக் பீல்டு என்ற இடத்தில் உள்ள டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் உள்ள சந்தானந்தா ஆடிட்டோரியத்தில் 5வது வள்ளலார் மாநாடு நடத்து வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
பாரிஸ், இந்தியா (தமிழ்நாடு) பாண்டிச்சேரி, வடலூர், மலேசியா, சிங்கப்பூர் முதலான இடங்களில் இருந்து மூத்த சன்மார்க்க அன்பர்களை அழைத்து வந்து சொற்பொழிவு நிகழ்த்துவதற்குண்டான முயற்சிகளை அவர்கள் எடுத்து வருகின்றனர்.
வள்ளற் பெருமானின் சாகாக்கலையினை அனைத்துப் பெருமக்களும் தெரிந்து கொண்டு தமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த ஏற்பாட்டினை வருடந்தோறும் அவர்கள் செய்து வருகின்றனர்.
வரும் 31.8.2012, 1.9.2012, 2.9.2012 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும்படி, அனைவரையும் அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
SAM_6657
SAM_6664
SAM_6699
SAM_6661
SAM_6559
SAM_6670
SAM_6671