DAEIOU - தயவு
திரு அருட்பா திருமுறைகள் கலைஞன் பதிப்பக வெளியீடு விவரம்.

சென்னை கலைஞன் பதிப்பகத்திலும் திரு அருட்பா திருமுறைகள் வெளியீடு.

திரு அருட்பா திருமுறைகள் இதுவரை பலபிரசுரங்கள் மூலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன.

எடுத்துக்காட்டாக சென்னை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் முயற்சியில் 11.10.1942 ம் நாள் சென்னை

கிருஷ்ணாங்குளம் சமீபம் அம்மன் கோயில் தெருவில் இயங்கி வந்த அருட்பெருஞ்ஜோதி அச்ச்கத்தின்

மூலம் திரு அருட்பா திருமுறைகள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன.

அடுத்து பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அது தற்போது சென்னையில் திருவல்லிக்கேணி தோப்பு வெங்கடாசமல் தெருவில் உள்ள சாரதா

பதிப்பகத்தின் மூலம்மறுபதிப்பு செய்யப்பட்டு 2006 டிசம்பர் முதல் விற்பனை செய்ய்ப்பட்டு வருகிறது.

ஊரன் அடிகளார் அவர்கள் மூலம் 6 திருமுறைகளும் பதிப்பு செய்யப்பட்டு இதுவரை பல பிரதிகள்

வெளிவந்துள்ளன.சென்னையில் கீழ்க்காணும் விலாசத்திலும் திரு அருட்பா திருமுறைகள்

2003ஆம் ஆண்டு மறு பதிப்பு செய்யப்பட்டு வெளிவந்துள்ளன.

அவற்றின் முதற் பதிப்புகள் 1867-லும், இரண்டாம் பதிப்பு 1885லும் வெளி வந்துள்ளன. அதன் பின்னர்,

அதன் அச்சுக் கோர்வை மாறாதவண்ணம், 2003ஆம் ஆண்டில், கலைஞன் பதிப்பகத்தின் மூலம்

இவை வெளிவந்துள்ளன. கோயம்புத்தூர் புத்தக கண்காட்சியில் இந்த திருமுறை

பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.



விலாசம்.

கலைஞன் பதிப்பகம்,

19, கண்ணதாசன் சாலை,

தியாகராய நகர், சென்னை 600 017.

Printed at Goodwill Graphics, Chennai. 600 001.



7 Comments
P Sujatha
Karunaimughu Ramanujam Avl,
Thank you for information.Thankyou for Good service to Kannathasam Pathipagam.Wish you Vallalar blessings to your Sanmarga Printing services&Pathipaga Members. With Vallalar Loving,
Aruljothisujatha
Wednesday, October 29, 2008 at 04:33 am by P Sujatha
P Sujatha
Karunaimughu Ramanujam Avl,
Thank you for information.Thankyou for Good service to Kannathasan Pathipagam.Wish you Vallalar blessings to your Sanmarga Printing services&Pathipaga Members. With Vallalar Loving,
Aruljothisujatha
Wednesday, October 29, 2008 at 04:35 am by P Sujatha
P Sujatha
Karunaimughu Ramanujam Avl,
In Previous Command Message is Wrongly Careless Mistakes.Very sorry for my mistakes.
Wish you Vallalar blessings to Kalainan Pathipagam&Thank you for good Services& Wish
you Vallalar blessings to Pathipaga members.Thank you for Ramanujam Avl.
Wednesday, October 29, 2008 at 04:59 am by P Sujatha
Vallalar Groups
Dear Sir,
If you know the price details , contact number , please let us know...
thanks
Wednesday, October 29, 2008 at 05:22 am by Vallalar Groups
Ramanujam jam
இந்த திரு அருட்பா பதிப்பின் விலையினை குறிக்கவில்லை.
இந்த ப்திலை சொல்வதற்கு வருத்தமாகத்தான் உள்ளது.
ஒரே ஒரு புத்தகம்தான் அந்த ஸ்டாலில் இருந்தது.
இவ்விதம் ஒரு திருஅருட்பா பதிப்பு இருக்கிறது என்ற விவரத்தை
கோயம்புத்தூரில் புத்தக ஸ்டால் 103ல், இந்த அன்பருடன் - புத்தக விற்பனையில் உடன் பணிபுரிந்த
கோயம்புத்தூர் மசக்காளி பாளையம் தய்வு அன்பர் திரு பிரபாகரனிடம்
சொல்லி, அவர், அந்த ஸ்டாலுக்குச் சென்று அந்த பதிப்பை வாங்குமுன்னரே, யாரோ அந்தப் பதிப்பை
கொத்திக் கொண்டு சென்று விட்டார்.
எனவே அந்த விலை விபரம் சேகரிக்க இயலவில்லை.
எனினும் விலாசம் உள்ளது. அந்தப் பதிப்பகத்தாருக்கே நேரடியாக
கடிதத் தொட்ர்பு ஏற்படுத்தி தெரிந்து கொள்வதுதான் ஒரே வழி.
Wednesday, October 29, 2008 at 11:38 am by Ramanujam jam
Ramanujam jam
கலைஞன் பதிப்பு பற்றிய தகவல்.
சென்னை அருகே பாடிய் நல்லூரில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்க
சத்திய சங்கத்தின் செயலாளராக உள்ள திரு வி. ஜெகநாதன் இன்று 12.45 மணி அளவில் பேசினார்.
சங்க செயல்பாடுகள், வள்ளல் பெரு நெறியில் இளைஞர்களின் தீவிர ஈடுபாடு முதலியவை குறித்து
அவர் பேசிவிட்டு. வள்ளலார் குரூப்ஸ் அன்பர்கள் தேடும் திரூ அருட்பா கலைஞன் பதிப்பு
தமது சன்மார்க்க சங்கத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.
அதன் விலை ரூ.400/- எனவும் தெரிவித்தார்.
திரு கார்த்திகேயன், இந்த தகவலை, தேவைப்படும் அன்பர்களுக்கு தெரிவிக்கலாம்.
Thursday, October 30, 2008 at 00:56 am by Ramanujam jam
Ramanujam jam
விடுபட்ட தகவல் ஒன்று.. ..
பாடியநல்லூர் சன்மார்க்க சங்க செயலாளர் திரு வி.ஜெகநாதனின் செல் எண். 98847 95362.
அவர் மேலும் தெரிவித்த தகவல்கள்.
கலைஞன் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட ஆறாம் திரு முறை திரு அருட்பாவில்
கீழ்க்கண்ட பகுதிகள் அடங்கியுள்ளன.
1. திரு அருட்பா 6-ஆம் திருமுறை
2. உரை நடைப்பகுதி
3. ஜீவகாருண்ய ஒழுக்கம்
4. அன்பர்களுக்கு வள்ளற் பெருமான் எழுதிய திருமுகங்கள்.
இவை அனைத்தையும் ஒருங்கே அடக்கிய அந்த திரு அருட்பாதான்
தற்போது கலைஞன் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது.
தேவைப்படும் அன்பர்கள், பாடிய நல்லூர் அனபரை தொடர்பு கொள்ளலாம்.
Thursday, October 30, 2008 at 01:10 am by Ramanujam jam