DAEIOU - தயவு
கோயம்புத்தூரில் சின்ன வேடம்பட்டியில் ஷ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் கம்பெனியின் புரட்சி.

கோயம்புத்தூரில் தயவுப் பெரு நெறி பரப்பும் அன்பர்கள்

கோயம்புத்தூரில் சரவணம்பட்டி ஏரியாவில் ஷ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் கம்பெனி நடத்திவரும் சன்மார்க்க அன்பர் திரு ராம்தாஸ் அவர்கள், சுத்த சன்மார்க்கம் மற்றும், தயவுப் பெருநெறியினை சிறப்பாகக் கடைப்பிடிப்பவர்.

வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் சத் சங்கம் திரு அருட்பா இசை நிகழ்ச்சி நடத்தி சொற்பொழிவுகள் நடத்துதல் போன்றவற்றை நடத்தி, அந்தப் பகுதியில் சுத்த சன்மார்க்கம் பரவுவதற்கு ஒரு தூண்டுகோலாக உள்ளார்.

http://www.vallalarfiles.com/image/pf1hNSAZTEmgfw,$,2bXlz4a4Q,$,3d,$,3d/sz-tn650/170820085421220000.jpg

வருடந்தோறும் தமது கம்பெனியில், ஊழியர்கள் அனைவரையும் சுத்த சன்மார்க்கப் பயிற்சி கொடுத்து, அவர்கள் தமது குழந்தை குடும்பத்துடன் வந்து ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கேள்வி பதில் முறையிலும், நாடகம், பேச்சுப் போட்டி, திரு அருட்பா பாடல்கள் மனப்பாடம் செய்து குழந்தைகளிடையே போட்டி வைத்தல், சுத்த சன்மார்க்கம் கடைப்பிடித்தால் என்ன மாற்றம் அதனைக் கடைப்பிடிப்பவர் உணர்கிறார் என்பது போன்ற பல கருத்துக்களை உள்ளடக்கி, தனது ஊழியர்களை ஊக்குவித்து, அவர்கள் அனைவரும் சுத்த சன்மார்க்கம் மற்றும், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவு பெரு நெறியினைக் கடைப்பிடிப்பதற்கு செய்யும் முயற்சிக்கு உறுதுணையாக உள்ளார்.

நடப்பு ஆண்டில், கோயம்புத்தூரில் உள்ள கெளமார மடத்தில். 12.10.2008 அன்று ஞாயிற்றுக் கிழமை, இந்த ஆண்டு விழாவினை வெகு சிறப்பாகக் கொண்டாடினார். அனைத்து ஊழியர்களும் பங்கு கொண்டனர். சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை “நச்” எனவும் மிகவும் எளிமையாகவும் விளக்கினர். அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், சுத்த சன்மார்க்கத்தின் சிறப்பினை அறிந்து கொள்வதற்கு, இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மிகவும் பயன்பட்டன. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகள், பாடல்கள், பேச்சுப் போட்டிகள் முதலானவற்றைக் கேட்ட மாத்திரத்தில், அதனை வந்து பார்த்த மக்களில் பலர் வள்ளற் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடிப்பதாக உறுதி எடுத்திக் கொண்டனர்.

அவரது கம்பெனியில் ஒரு ஊழியராக உள்ள திரு சிவக்குமார் என்ற அன்பர் மூலம், கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அன்னதான வினியோகம் தினசரி காலை 8.30 மணி அளவில் செய்து வருகின்றார்.

கோயம்புத்தூரிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள சின்ன வேடம்பட்டியில் வசிக்கும் மக்கள் அனைவரும் மிகவும் வறுமையால் வாடி வருபவர்கள். சொற்பமான வருமானத்தைக் கொண்டு அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

http://www.vallalarfiles.com/image/rtpeQusTDiySwEqk6zj8Qw,$,3d,$,3d/sz-tn650/170820085421260000.jpg

அவர்களுக்கு, அன்பர் திரு சிவக்குமார் மூலம் அன்ன தானம் செய்து வருகிறார். இந்த கிராமத்தில் ஒரு கூரையின் கீழ் விநாயகர் மற்றும் தெய்வங்களின் படங்களை வைத்து வழிபடுவதற்கு ஏதுவாக, ஏற்கனவே இந்தக் குடியிருப்பின் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். முக்கியமான நாட்களில், பூஜை புனஸ்காரம், இங்கு நடைபெறுகிறது.

அன்ன வினியோகம் செய்யும் இந்த சின்ன குடியிருப்பு போன்ற இடத்தில் மேற்படி தெய்வங்களின் படங்களின் தொகுப்பு உள்ள இடத்தில் சென்று பார்க்கையில், அங்கும் திரு அருட்பிரகாச வள்ளலார் படம் ஒன்று இருந்தது.

இவர்கள் அளிக்கும், பயிற்சி, அன்னதானம் முதலியவற்றால் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள் ஆகியோர் சுத்த சன்மார்க்கப் பாதையில் தாம் செல்ல முற்பட்டுள்ளனர். திரு ராம்தாஸ் அவர்கள் நடத்தும் வாராந்திர பிரார்த்தனை, சத் சங்கம் முதலானவைகளில், இக் குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகள், தவறாமல் கலந்து கொள்கின்றனர் என்பது ஒரு சிறப்பான செய்தியாகும்.

அது குறித்த படங்கள், http://www.vallalarspace.com/Ramanujam/Album/463