DAEIOU - தயவு
11.10.2008 - பழனியில் வள்ளலார் வருவிக்கவுற்ற திருவிழா நிகழ்ச்சிகள்.

பழனியில் வள்ளலாரின் 186வது அவதார விழா கொண்டாடப்பட்டது.

பழனி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பில் திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் 186-வது திரு அவதார விழா கொண்டாடப்பட்டது.

பழனி அடிவாரம் சித்தனாதன் திருமண மண்டபத்தில் 11.10.2008 & 12.10.2008 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந் நிகழ்ச்சி நடைபெற்றது.

சனிக்கிழமை பெரிய நாயகியம்மன் கோயிலில் இருந்து வள்ளலாரின் உருவப்படம் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்தியில் வைக்கப்பட்டு நகர்வலம் வந்தது. ஞாயிற்றுக் கிழமை அகவல் பாராயணம் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

இதில் பழனி நகர், பாப்பம்பட்டி, கணியூர், கடத்தூர் காரத்தொழுவு மற்றும் கீரனூர் சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திண்டுக்கல் சரவ வருமான அதிகாரி கந்தசாமி சன்மார்க்கக் கொடியேற்றினார். நிகழ்ச்சியில், பல்வேறு சன்மார்க்கப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு சொற்பொழிவு அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன். டாக்டர் வித்யாசாகர், சன்மார்க்க சங்க துணைச் செயலாளர் சுப்பிரமணியன். துணைத் தலைவர் சுந்தரேசன். சென்னி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி தினமணி நாளிதழ்-13.10.2008