வடலூருக்கு மற்றொரு பெயர் உத்தர ஞான சிதம்பரம் என்பதாகும். அதன் சிறப்பினை விளக்கும் வகையில் பெருமானார் அவர்கள், உத்தர ஞான சிதம்பர மான்மியம்” என திரு அருட்பாவில் பாடி வைத்தார்கள். சத்திய ஞான சபையில், இப் பாடல்கள், அருமையான கல் வெட்டுக்களில் செதுக்கி அன்பர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த முறை (24.9.2008) வடலூருக்குச் சென்ற அன்பர்களுக்கு உத்தர ஞான சிதம்பர மான்மியம், போர்டில் பெயின்டிங் செய்யப்பட்டு, தர்மச்சாலை செல்லும் வழியிலேயே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை உத்தர ஞான சிதம்பரம் அலுவலகம் வைத்து நடத்தி வரும் சில அன்பர்கள் செய்து வைத்துள்ளனர்.
Write a comment