DAEIOU - தயவு
கல்பட்டு ஐயாவின் வாழ்க்கை குறித்து சுவற்றில் வரைபடங்கள்.

கல்பட்டு ஐயாவின் வாழ்க்கை குறித்த வரைபடங்கள்.

வள்ளற் பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட கல்பட்டு ஐயா பெருமானாரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்தவர். தர்மச்சாலைப் பணிகளை பொறுப்பேற்று அற்றார் அழி பசி தீர்த்து, பெருமானாரின் மனதிற்கொப்ப, எவ்வித பிரச்னைகளுக்கும் இடமளிக்கா வண்ணம் தர்மச்சாலையினைத் திறம்பட நிர்வகித்தவர்.


http://www.vallalarfiles.com/image/l2IjBzhPDu0DyqBl,$,2fqVrMA,$,3d,$,3d/sz-tn650/240920089719060000.jpg
அவர் வசித்த இடம், தர்மச்சாலைக்கு அருகாமையில் உள்ள கேணிக்கு அருகே தீபச் சுடர் ஒளி விளங்க அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய அறையாக அது இன்றைய தேதியிலும் உள்ளது.
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக, கல்பட்டு ஐயாவிற்கென அவர்களை ஜீவ சமாதி செய்த இடத்தில் அருமையான கட்டிடம் கட்டப்பட்டு, தெய்வ நிலையங்களால் இந்த இடம் காம்பவுண்டுச் சுவர் முதலானவை எழுப்பப் பட்டு, அன்பர்களின் தரிசனத்திற்காக நல்ல விதமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
http://www.vallalarfiles.com/image/wx6SPGOxFVoTJoo3Mmdm,$,2bw,$,3d,$,3d/sz-tn650/240920089719080000.jpg
வள்ளற் பெருமானின் வாழ்க்கை வரலாறு, தெய்வ நிலையங்கள் அலுவலகம் இயங்கும் இடத்தின் அருகில் சுவற்றில், அங்கு வரும் அனைவரும் அறியும் வண்ணம் சுவர் சித்திரமாகப் பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது.
அதே போல கல்பட்டு ஐயாவின் வாழ்க்கை வரலாறும், அவர் வள்ளற் பெருமானாருடன் ஏற்பட்ட தொடர்புடன் துவங்கப்பட்டு சுவர் சித்திரமாக வரையப்பட்டு, ஒவ்வொரு சித்திரத்தின் மேலும், அதற்கான விளக்கமும் தமிழில் எழுதப் பட்டுள்ளது. இதனைப் பார்க்கும் பார்வையாளர்கள், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் வகையில் இந்த சுவர் வரைபடங்கள் உள்ள திறத்தினை வியந்து, வள்ளற் பெருமானிடம் கல்பட்டு ஐயா அவர்கள் கொண்டிருந்த மாறாக் காதலைத் தெரிந்து உளமகிழ்ந்து செல்கின்றனர்.