வேலூர் ராணிப்பேட்டை அருகே காரை நகரில், மகாமந்திர
பீடம் மற்றும் கண்ணாடி மாளிகை.
அமைப்பு திரு பழனி சோ. ஜோதி மைந்தன் அவர்கள்.
ராணிப்பேட்டை அருகே உள்ள காரையில், பழனி சோ. ஜோதி மைந்தன் என்ற சன்மார்க்க அன்பர், மகாமந்திர பீடம் என்ற ஒரு அமைப்பினை நிறுவியுள்ளார்.
http://www.vallalarfiles.com/image/HPncVGAG6J,$,2ftJmrzKhVi4A,$,3d,$,3d/sz-tn650/040920088817260000.jpg
திரு அருட் பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க கொள்கைகளைப் பரப்பி அவர் தொண்டு செய்து வருகிறார். வாராந்திர வழிபாடுகள், மாத பூச நாள் வழிபாடு, மற்றும் ஜோதி மூலம் ஏற்படும் விளக்கங்கள் ஆகியவற்றை, பொது மக்கள் அறியும் வண்ணம் செய்து வருகிறார். அன்னதானப் பணியிலும் அவர் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதனைப் பற்றிய செய்திகள் ஏற்கனவே இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
http://www.vallalarfiles.com/image/mUi,$,2b,$,2frK3tU6LF3enslZyUQ,$,3d,$,3d/sz-tn650/040920088917400000.jpg
இருப்பினும், அவர் எழுப்பியுள்ள மகாமந்திரப் பீடம், கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ள “தியான மண்டபக் காட்சி” முதலானவைகளை, இந்த இணைய தளத்தின் அன்பர்கள் காண வேண்டும்.
வள்ளற் பெருமான், ஆணிப் பொன்னம்பலக் காட்சியைக் கண்டு விட்டு, அதனை, திரு அருட்பாவிலே, கீழ்க்கண்டவாறு விவரித்து, ஆனந்தக் கூத்தாடுகின்றார்.
ஆணிப் பொன்னம்பலத் தேகண்ட காட்சிகள்
அற்புதக் காட்சிய டி அம்மா அற்புதக் காட்சிய டி
ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
வீதிஉண் டாச்சுத டி அம்மா வீதிஉண் டாச்சுத டி
வீதியில் சென்றேன் அவ்வீதி நடுஒரு
மேடை இருந்தத டி அம்மா மேடை இருந்தத டி
மேடைமேல் ஏறினேன் மேடைமேல் அங்கொரு
கூடம் இருந்தத டி அம்மா கூடம் இருந்தத டி
கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை
மாடம் இருந்தத டி அம்மா மாடம் இருந்தத டி
ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்
என்என்று சொல்வனடி அம்மா என்னென்று சொல்வனடி
ஓர்நிலை தன்னில் ஒளிர்முத்து வெண்மணி
சீர்நீலம் ஆச்சுத டி அம்மா சீர்நீலம் ஆச்சுத டி
பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
பவளம தாச்சுத டி அம்மா பவளம தாச்சுத டி
மற்றோர் நிலையில் மரகதப் பச்சைசெம்
மாணிக்கம் ஆச்சுதடி அம்மா மாணிக்கம் ஆச்சுத டி
பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப்
பேர்மணி ஆச்சுத டி அம்மா பேர்மணி ஆச்சுத டி
வேறோர் நிலையில் மிகும்பவ ளத்திரள்
வெண்மணி ஆச்சுத டி அம்மா வெண்மணி ஆச்சுத டி
புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி
பொன்மணி ஆச்சுத டி அம்மா பொன்மணி ஆச்சுத டி ஒ..
பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம்
படிகம தாச்சுத டி அம்மா படிகம தாச்சுத டி
ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம்
இசைந்தபொற் தம்பமடி அம்மா இசைந்தபொற் தம்பமடி
வல்லபத் தால்அந்த மா தம்பத் தேறி
மணிமுடி கண்டேன டி அம்மா மணிமுடி கண்டேனடி
மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
மற்றது கண்டேன டி அம்மா மற்றது கண்டேன டி
கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற்
கோயில் இருந்தத டி அம்மா கோயில் இருந்தத டி
கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில்
கூசாது சென்றேன டி அம்மா கூசாது சென்றேன டி
அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன்
அமுதமும் உண்டேன டி அம்மா அமுதமும் உண்டேனடி
தாங்கும் அவளரு ளாலே நடராஜர்
சந்நிதி கண்டேன டி அம்மா சந்நிதி கண்டேன டி
சந்நிதி யில்சென்று நான்பெற்ற பேறது
சாமி அறிவார டி அம்மா சாமி அறிவார டி.
, திரு பழனி @ ஜோதிமைந்தன் அவர்கள், அருட்பெருஞ்ஜோதி வழிபாடு மற்றும் தரிசனம் காண்பிப்பதற்கு கட்டியுள்ள மகாமந்திரப் பீடம் அவரது வீட்டின் முன்புறம் உள்ளது,
அதற்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள தியானக் கண்ணாடி மாளிகை முதலானவை, மிகவும் அற்புதமானவை. அக் கண்ணாடி தியான மாளிகைக்குள் செல்வதற்கு அவர் சில நிபந்தனைகளை நிர்ணயித்துள்ளார். அவை ஏற்கனவே, இந்த இணைய தளத்தில் வெளிவந்துள்ளன.
தியானக் கண்ணாடி மாளிகை மற்றும் மகா மந்திர பீடம் ஆகியவை மற்றும் சில படங்கள் அன்பர்களின் பார்வைக்கு இந்த இணைய தளத்தில் அவரது அனுமதியுடன் வெளியிடப்படுகின்றன.
For More Photos :-
Write a comment