DAEIOU - தயவு
காஞ்சீபுரம் அஷோக் நகர், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் தெய்வ நிலையத்தில் கண்ட எழிற் காட்சிகள்

காஞ்சீபுரம் அஷோக் நகர், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் தெய்வ நிலையத்தில் கண்ட எழிற் காட்சிகள்

காஞ்சீபுரத்தில் உள்ள அஷோக் நகரில், சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்களில் பேராதரவுடன்,ஒரு சன்மார்க்க சங்கம் கட்டி, அதற்கு, திரு அருட்பிரகாசர் தெய்வ நிலையம் என்ற பெயரினையும் சூட்டி, வந்தனை வழிபாடுகளும், சுத்த சன்மார்க்க நெறியின் கொள்கைப் பிரச்சாரங்களும், தக்க சன்மார்க்க அன்பர்களைக் கொண்டு நிகழ்த்தி வருவது, ஏற்கனவே, சன்மார்க்க அன்பர்கள், இந்த இணைய தளத்தின் மூலம் அறிந்த வொன்றே.

http://www.vallalarfiles.com/image/0dC1MN2kWc3Z2wkPHjpvqg,$,3d,$,3d/sz-tn650/030920088417000000.jpg

கடந்த 3.9.2008 அன்று, அங்கு செல்லும் வாய்ப்பு மதுரை நாராயணபுரம் தயவு அன்பருக்கு ஏற்பட்டது.

ஏற்கனவே, மேற்படி தெய்வ நிலையத்தில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு உருவம், தியானக் கோலத்தில், (மார்பிளில்), குஜராத் மாநிலத்தில் இருந்து செய்து வரப்பெற்று, கடந்த 2007ம் வருடம், பிப்ரவரியில் நிறுவப்பட்டது.

http://www.vallalarfiles.com/image/s3h6,$,2b0gzPMBLDVObomwbhA,$,3d,$,3d/sz-tn650/030920088316940000.jpg

சிலை நிறுவுதல் அதனை வழிபடுதல் என்பது, புறக் காட்சி என்று ஒருவகையில் வைத்துக் கொண்டாலும், சுத்த சன்மார்க்க நெறியில் ஆரம்ப நிலையில் உள்ள அன்பர்கள் உருவ நிலையில் பார்த்துப் பார்த்துப் பழகிப் பழகி பின் அருவ நிலையில், அருட்பெருஞ் ஜோதியினை வழிபடும் அருவ நிலைப் பழக்கத்தினைக் கடைப் பிடிப்பதற்கு, இது போன்ற ஏற்பாடுகள், சில அன்பர்களால் செய்யப்பட்டு வருகின்றன.

http://www.vallalarfiles.com/image/bV3srjW8J3dbSpQpbpVazg,$,3d,$,3d/sz-tn650/030920088416980000.jpg


அந்த வகையில், காஞ்சீபுரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த மார்பிள் சிலை, கிட்டத்தட்ட 150 குடும்பங்களை ஈர்த்து, சுத்த சன்மார்க்க நெறிக்குக் கொண்டு வந்துள்ளதாக, மேற்படி தெய்வ நிலையத்தின் செயலாளர் திரு வெங்கடேசன் தெரிவித்தார்

அங்கு 3.9.2008 அன்று சென்றிருந்தபோது கண்ட வள்ளற் பெருமான் தியானக் கோலம் கொண்ட எழிற் காட்சிகள், இந்த இணைய தளத்தினை நாள் தோறும் கண்டு வரும் சன்மார்க்க அன்பர்களுடன் பகிர்ந்து கொண்டால்தான் ஒரு முழு நிறைவு பெறும் என்பதால், அவை, தற்போது வெளியிடப்படுகின்றன

http://www.vallalarfiles.com/image/v7Vdahtv,$,2bHOWiBBWLF3CKw,$,3d,$,3d/sz-tn650/030920088316960000.jpg

கடந்த 4.9.2008 அன்று வேலூர் மாவட்டத்தில், ஷோளிங்கர் என்ற ஊரில் உள்ள மலையடி வாரத்தில், ஷ்ரிடி சாய் பாபா அவர்களுக்குக் கட்டப்பட்டு வரும் திருக்கோவில் அருகே அக் கோவிலைக் கட்டும் அன்பரே, அதற்கு அருகிலேயே, அற்புதத் திருக் கோவிலான, சத்திய ஞான சபை (Temple of Wisdom) கட்டுவதற்கு வேலூர் மாவட்டத்தில் பூமி பூஜைகள், உள்ளூர் மக்களைக் கொண்டும், ஆன்ம நேய அன்பர்களின் பேருதவியுடனும், நடைபெற்றன.

அங்கு சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் திரு P. விஜயன் என்ற அன்பர், சோளிங்கரில் நிறுவுவதற்கும், காஞ்சீபுரத்தில் உள்ள தியானக் கோலம் கொண்ட வள்ளற் பெருமானின் சிலை (மார்பிள்) தற்போது, (கட்டிடம் கட்டுவதற்கு முன்பே) ராஜஸ்தானில் இருந்து வரப்பெற்று விட்டதாக 18.9.2008ந் தேதி தெரிவித்துள்ளார்

ஆக, இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, தயவின் அடிப்படையில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறியினின்று சற்றும் வழுவாது, முயற்சி செய்து கொண்டே இருந்தால், எம்பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையால், அருளியல் செயல்கள் சற்றும் தடை படாது தொடர்ந்து நடப்பதற்குரிய உதவிகளை, அவரே முன்னின்று செய்து கொடுப்பார் என்பதையே விளக்குவதாக இது அமைந்துள்ளது.