DAEIOU - தயவு
வாழ்வில் தயவு நெறி கடைப்பிடித்ததால் திண்டுக்கல் தயவு அன்பர் 100-ல் முதலாமவரானார்.

தயவு நெறி கடைப்பிடித்ததால், திண்டுக்கல் தயவு அன்பர் 100-ல் முதலாமவரானார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அன்பர் திரு சாயி கணேஷ் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க நெறியிலும், திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகளிடமும் தமது இளமைக் காலம் முதலே தயவுப் பெரு நெறியினையும் கற்றவர். வாழ்விலும் கடைப்பிடித்து வருபவர்.
தற்போது, மருத்துவப் பொருட்கள் விற்பனை நிமித்தம் சென்னையில் வசித்து வருகிறார். அவர், வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தில், ஒரு அலுவல் சார் உறுப்பினராகவும் உள்ளார்.அவரது மனைவியார் பெயர், சுகன்யா என்பதாகும்
சுத்த சன்மார்க்க நெறியில் உள்ள ஈடுபாடு காரணமாக, ஏற்கனவே, இவர், வள்ளற் பெருமானின் (1) அருள் விளக்க உரை (உரை நடைப் பகுதி) 1999ஆம் ஆண்டிலும், தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் (2) முதலாமாண்டு மஹா குருபூஜா மலர் 2007ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும், (3) முக்கிய நாட்களின் தத்துவ விளக்கம் என்ற நூலினை 2007 நவம்பர் மாதத்திலும் வெளியிட்டு, 2008 தைப்பூச நாளின்போது, வடலூரில் உள்ள உலக மையத்திலும் வெளியிட்டவர்.
இவர், மதுரை கூடல் நகரில், உள்ள ஒரு பகுதியில் வீடு புதிதாகக் கட்டி, கிரஹப்பிரவேச வைபவத்தினை கடந்த 1.9.2008 அன்று காலை 7.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடத்தினார்.
ஒரு ஆரவாரமில்லை. ஒரு ஆடம்பரமில்லை.
தனது குடும்ப அங்கத்தினர்கள், உற்றார், உறவினர், மற்றும் சன்மார்க்க பெருநெறி கடைப்பிடித்து ஒழுகும் அன்பர்கள், தயவுப் பெருநெறியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தயவு அன்பர்கள் ஆகியோருக்கு மட்டும் தகவல் கொடுத்தார்.
கோயம்புத்தூரில் இருந்து தயாவொளி இயக்க அன்பர்கள் திரு சிவக்குமார், அவரது மனைவியார், தமிழரசி, அந்த மாவட்டத்தில் உள்ள மசக்காளி பாளையத்தைச் சேர்ந்த இஞ்சினியரிங் தொழில் நடத்தி வரும் தொழில் அதிபர் மற்றும் தயவு அன்பர் திரு பிரபாகரன், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு T.R. ஜவஹர்லால், B.Sc., F.C.A, (Managing Trustee, AURO-MA-RAMALINGAM TRUST, Trustee, AUMRA TRUST, An International Scientific Spiritual Research Institute for Supramental Evolution and Deathless Body)(having website www.auro-ma-ramalingam.org-His email mdu_trj@sanchar.net.in), திண்டுக்கல் ராஜேந்திரன், மதுரை நாராயணபுரம் தயவுக் குழு உறுப்பினர், திரு சாய் கணேஷ் அவர்களின் மாமா தயவுப் பெருநெறி கொண்டு ஒழுகும் திரு சுதர்ஸன். கொடைக்கானல் (Working as Superintendent, Observatory, Kodaikanal) ஆகியோர், காலை 7.30 மணிக்கு, அருட்பெருஞ்ஜோதி தீபத்தினை ஏற்றி வைத்து, திருப்பள்ளி எழுச்சி, திருவடிப் புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி அகவல் மற்றும் அட்டகம் ஆகியவற்றைப் பாராயணம் செய்தனர். பாராயணம் சுமார் 9.40 மணி அளவில் முடிவடைந்தது.
பின்னர், திரு அருட்பாவிலிருந்து, அன்பர்கள், பாடல்களைப் பக்திப் பரவசத்துடன் பாடினர்.
இறுதியில், ஜோதி வணக்கத்துடன் இவ் வைபவம் முடிவடைந்தது.
அங்கு விசாரித்த வகையில்,. இந்தக் குடியிருப்புக்கள், இந்தப் பகுதியில், புதிதாகக் கட்டப்பட்டு வருவதாகத் தெரிந்தது.
இக் குடியிருப்புக்குப் பெயர் “நூறு வீடு” என்று சுற்றிலும் உள்ள பொதுமக்கள் பெயர் வைத்துள்ளனர். காரணம், இங்கு, 100 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதே ஆகும். கட்டுமானப் பணி. எந்த வீட்டிற்கும் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை.
அதில், வள்ளற் பெருமானின் வழியில் நடக்கும் அன்பர் திரு சாயி கணேஷ், ஏனைய வீடுகள் எதுவுமே கட்டி முடிக்கப் படாத நிலையில், பெருமானின் பெருங்கருணையினால், முதலில் வீடு கட்டி முடித்து, இந்தக் குடியிருப்புக்கே முதலில் குடி வந்தவர் என்ற நற்பெயரினை ஈட்டினார்.
திரு சாயி கணேஷ் சன்மார்க்க அன்பர் என்ற முறையில், தமது வீட்டின் கிரஹப் பிரவேச வைபவத்தின் போது, வேறு சடங்கு ஆசாரங்கள் எதனையும் கடைப்பிடிக்கவில்லை.
வள்ளற் பெருமானின் வழியிலும், திண்டுக்கல் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் வழிகாட்டுதலின்படியும், சன்மார்க்க அன்பர்களைக் கொண்டு, தனது வீடு கிரஹப் பிரவேச நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார்.
அவருக்கு, திண்டுக்கல் சுவாமிகள் இயற்றிய தயவுப் பாக்களின் ஆடியோ சி.டி. அன்றைய தேதியில் தயவுப் பரிசாக வழங்கப்பட்டது.
உறவினர்கள், சன்மார்க்க அன்பர்கள் தவிர, அண்டை அயலில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் அவர் அன்னதானம் செய்து, இந் நிகழ்ச்சியினை நிறைவு செய்தார்.
அவ் வைபவத்தில் பங்கேற்ற சன்மார்க்க அன்பர்கள், வள்ளல் பெருமானின் வழி நிற்கும் அன்பர்கள், எதிலும் முதன்மை அடையும் நிலையினை பெருமானே முன்னின்று நடத்தி வைப்பதாகக் கூறி அவரது அருள் திறத்தினை வியந்தவாறே சென்றனர்.