திரு அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வாழ்க்கை வரலாறு.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினை இதுவரை பலர் நூல்களாக எழுதி வெளியிட்டுள்ளனர்.
சென்னை, பிரேமா பிரசுரம் - குறிஞ்சிப்பாடி திரு ஞான வைத்திய நாதன் என்ற நூலாசிரியர் மூலம் கடந்த டிசம்பர் 2007-ல் வெளியிட்டுள்ள புத்தகம், வள்ளற் பெருமானைப் பற்றிய முழுமையான தகவல்களையும் உள்ளடக்கியதாக ஒரு நாவல் போன்று வெளிவரப்பெற்றுள்ளது.
குழந்தைகள் வள்ளற் பெருமானைப் பற்றி இலகுவாக, அறிந்து கொள்ளும் வகையில் வெகு எளிமையான நடையில் வெளி வந்துள்ளது.
அவரது வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளையும், கொள்கைகளையும் உள்ளடக்கியதாக இந்த நூல் வெளி வந்துள்ளது. பல அருட்பா பாடல்களும் இந் நூலில் இடம்பெற்றுள்ளன.
பைன்டிங் செய்யப்பட்டுள்ள இந்த நூலின் அடக்க விலை ரூ.100.(416 பக்கங்கள் கொண்டது)
வள்ளற் பெருமானார் வாழ்க்கையுடன் தொடர்புடைய
பல படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல் இதுவாகும்.
கடந்த 14.4.2008 முதல் 24.4.2008 அன்று வரை, கோயம்புத்தூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், இந்த புத்தகம், பல சன்மார்க்க அன்பர்களின் கவனத்தைக் கவர்ந்தது.
அதன் பேரில், வரும் 24.9.2008 மாதப் பூச நாளில், இந்த புத்தகத்தினை, விற்பனைக்குக் கொண்டு வரும்படி, சென்னை பிரேமா பிரசுரத்தினர் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.
அந்த புத்தகம் வடலூரில், சத்திய தருமச்சாலை செல்லும் வழியில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத் தங்கல் மனையில் அன்றைய நாளில், கிடைக்கும்.
அனைவரும் வாங்கிப் பயன் பெறும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகிறது.
2 Comments
பிரேமா பிரசுர வெளியீடு
பிரேமா பிரசுரம் வெளியீடு செய்த ஜோதிவழியில் திரு அருட்பிரகாச வள்ளலார் என்ற புத்தகம், வடலூரில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத் தங்கல் மனையில் மேற்படி பிரசுரத்தில் பணிபுரியும் திரு பிள்ளை என்ற அன்பரால், 24.9.2008 (மாதப் பூச நாள் அன்று), வடலூரில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட சன்மார்க்க சங்கக் கட்டிடத்தில் கிடைக்கப் பெறுகின்றன.
இதன் நேர்த்தி, மற்றும் பெருமானாரின் வரலாற்றினை, புத்தக ஆசிரியர் கொண்டு செல்லும் பாங்கு மற்று நடை ஆகியவற்றைப் பார்த்த மட்டிலேயே தூத்துக்குடி மற்றும் சில அன்பர்கள் விலைக்குப் பெற்றுச் சென்றனர்.
தேவைப்படுவோர், வடலூரில் உள்ள இராமநாதபுரம் மாவட்டத் தங்கல் மனையில் பெற்றுக் கொள்ளலாம்.
அடக்க விலை ரூ.100/- ஆகும்.