மெய்ஞானத்தை அடையும் வழி-32
மெய்ஞான தகவல் தொடர்பு
ஞானத்தில் யோகம் முதல் நிலையை அதாவது "யோக தாரக மந்திரம் பிண்டத்தில் செயல் படுத்தும் முறையை" கடந்த 31வது
பகுதியில் விளக்கினோம்.
அடுத்த கட்டமாக எழுத்து வடிவில் வர அனுமதிக்கப்பட்ட "ஞானத்தில் ஞானம்" பற்றிய விளக்கங்களுக்கு முன்னதாக சில
விஷயங்களை விவரிக்க கடமை பட்டுள்ளோம்.
நாம் சில ஆய்வு விஷயங்களை எழுதும்போது வள்ளலார் காலத்தின் சூழ்நிலைகளையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும்
மனதில் கொண்டு தற்கால சூழ்நிலைகளையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும், விஞ்ஞான வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள
வேண்டும்.
எந்த ஒரு கருத்தையும் முன் வைக்கும் போது உபமானம்,உபமேயம் என்ற இலக்கிய உத்தியை கைகொண்டால்தான் சுலபமாக
கருத்துக்களை பிறர் மனதில் பதிப்பிக்க முடியும்.
வள்ளல் பெருமான் 19ம் நூற்றாண்டில் இருக்கும்போதே 21ம்நூற்றாண்டின் வெளிப்பாடுகளையும் அறிந்திருந்தார் என்பதின்
சாட்சியம்,மனிதன் தினசரி ஒரு மணி நேரம் தூங்க பழகினால் 1000 ஆண்டுகள் வாழலாம் என்றதை, மனிதன் ஜீன்களில் சில
மாற்றங்களை ஏற்படுத்தினால் 1200 ஆண்டுகள் வாழலாம் என்பதை இப்போதுதான் தற்போதைய விஞ்ஞானிகள் ஏற்றுகொள்கிறார்கள்.
விஞ்ஞானிகள் எதை ஏற்றுக்கொண்டாலும் அதை மனித சமுதாயம் அங்கீகரித்ததாக கருதலாம். மேலும் இனிவரும் நூற்றாண்டுகளில்
வெளிப்படக்கூடிய கருத்துக்களான ஆன்ம வேகம், ஆன்ம பெருக்கம் ஆகியவையும் வருங்காலத்தில் விஞ்ஞானிகளால் ஏற்றுக்
கொள்ளப்படும்போது அன்றைய காலகட்டத்தில் உள்ள மெய்ஞானிகளாகிய சன்மார்க்கிகள் மூலமாக வள்ளல் பெருமான் அவர்கள்
விளக்கமளிப்பார்கள். எனவே அதைப்பற்றிய கருத்துக்களை கடந்த அத்தியாயங்களில் வெளிப்படுத்தியது போதுமானது.
இன்றைய சூழலில் சன்மார்க்க உலகம் எதிர்கொள்ள வேண்டிய செயல்பாடுகளையும், வள்ளல் பெருமான் அவர்களும்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் சன்மார்க்கிகளுக்கு வழங்கியுள்ள கடமைகளையும்,எதிர்பார்க்கின்ற அனுபவங்களையும் கருத்தில்
கொள்வோம்.
வள்ளல் பெருமான் அவர்கள் அனைத்தையும் பற்றி சத்விசாரம் செய்யுங்கள் என்றார். அந்தந்த காலகட்டத்தின் சூழ்நிலையை
அடிப்படையாகக் கொண்டு சத்விசாரம் செய்வதே உண்மையான சத்விசாரமாக அமையும்.
வள்ளல் பெருமான் காலத்தில் அவரைத்தவிர மற்றைய மனிதர்கள் எதிர்கால வளர்ச்சியை பற்றி எடுத்துக் கூறினாலும்
புரிந்துகொள்ள இயலாத சூழ்நிலையில், வாழ்க்கை இயல்பில் இருந்தார்கள்.வள்ளல் பெருமான் அவர்கள் ஞானதேகம் பெற்று
அருளரசாட்சி நடத்தி வருகின்ற இந்த இரண்டு நூற்றாண்டுகளில்தான் விஞ்ஞானம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றது. மின்சக்தி
பயன்பாட்டுக்குரியதாக அறியப்பட்டு, மின்சார சாதனங்களான விளக்குகள்,கருவிகள் ஆகியவை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு
மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இன்று உலகம் முழுக்க ஒரு நிமிடம் மின்சாரம் இல்லையென்று கற்பனை செய்தால் அதன்
விளைவுகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. மேலும் தொலைபேசி,அலைபேசி,நிழற்படம்,தொலைக்காட்சி,ஆகாயவிமானம்,
விண்வெளி ஓடங்கள், செயற்கை கோள்கள் ஆகியவைகளும் மனித சமுதாயத்திற்கு கிடைத்திருக்கின்றன.
மெய்ஞானத்தின் சாராம்சங்களை உபமேயமாகக் கொண்டு விஞ்ஞான வெளிப்பாடுகளை உபமானமாகக் கொண்டு எடுத்து
விளக்குவது எளிதாகின்றது.
சன்மார்க்க செயல்பாட்டில் அருள்சக்தி நம்மை அடையும் வழிமுறையை பார்ப்போம். அருள்சக்தியை உபமேயமாகக்கொண்டு
தொலைபேசி அல்லது தொலைக்காட்சி செயல்படும் முறையை உபமானமாகக் கொண்டு ஒப்புநோக்கினால் மிக எளிமையாக புரிந்து
கொள்ளலாம்.
பிரபஞ்சத்திலுள்ள வள்ளலாரின் கேந்திரம் என்பது சாட்டிலைட் எனும் செயற்கைகோள் போன்றது. வடலூர் ஞானசபையானது
தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் போன்றது. சித்தி வளாகத்திருமாளிகையானது அருட்பெருவெளியின் வாயிலாக விளங்கும் முதல்
திரியம்பல வாயிலாகும். இது செயற்கைகோளிலிருந்து அருள்சக்தியை கிரகித்து கேபிள் மூலம் வழங்கும் ரிசீவர் அல்லது டி.டி.எச்
உபகரணம் போன்றது. ஒவ்வொரு சன்மார்க்க சாத்தியர்களான மெய்ஞானிகளும் தொலைக்காட்சி பெட்டி போன்றவர்கள்.
யாம் சன்மார்க்க கருத்துக்களை வெளியிடும்போது திருமுறை பாடல்களை மேற்கோள் காட்டுவதில்லை என்பதின் காரணம்
அனைத்து சன்மார்க்க அன்பர்களும் திருவருட்பாவை உள்வாங்கியிருப்பதால் கருத்துக்களை படிக்கும்போதே பாடல் நினைவுக்கு வரும் என்பதாலும்,பாடல்களையும் சேர்த்து எடுத்து இயம்பினால் கட்டுரை அளவுக்கு மீறிய பெருக்கமாய் அமையும் என்பதாலும் பாடலை
சாட்சியமாக்கும் உத்தியை கடைபிடிக்கும் தன்மையை கொண்டிருக்கவில்லை.
இருப்பினும் இங்கு ஒரு திருவருட்பா பாடலை மேற்கோளாக எடுத்துக்கொள்வோம்.
தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும், சங்கம் சார் திருக்கோயில் கண்டிடவும்
துங்கமே பெறுஞ் சற்சங்கம் நீடூழி துலங்கவும், சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிற நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.
என்பதின் அடிப்படையில் வள்ளல் பெருமான் எம்மிடம் ஒவ்வொரு நூறு கிலோமீட்டருக்கும் திரியம்பல வாயிலின்
தன்மையுடைய மகாமந்திரபீடம் வருங்காலத்தில் அமைக்கபட வேண்டும் என்றார். இவ்வாறு சங்கம் சார்திருக்கோயிலாக அமையும்
மகாமந்திர பீடங்களிலிருந்து அன்பர்களின் கோரிக்கைகளும் வள்ளல்பெருமானின் கேந்திரத்தை சென்றடையும்.வள்ளல் பெருமான்
வழங்கும் அருள்சக்தியும் கிரகிக்கப்பட்டு அன்பர்களுக்கு வழங்கக் கூடிய தன்மையுடையதாய் அமையும்.
வடலூர் ஞானசபையானது "நிலைத்த சக்தி" என்றால் மகாமந்திர பீடங்கள் "இயங்கு சக்தி"யாக செயல்படும். ஞானசபை
பல்கலை கழகம் என்றால், பீடங்கள் அதிலடங்கிய கல்லூரிகள் போன்று செயல்படும்.
மகாமந்திரபீடம் போன்ற சங்கம் சார் திருக்கோயில்கள் தொலைபேசிநிலையங்கள் என்றால் சன்மார்க்க சாதகர்கள் அனைவரும்
அங்கு சென்று வழிபடுவதின் மூலம் தொலைபேசிவைத்துள்ள பயனாளர்கள் போன்றவர்கள்.
ஆயிரம் முறை அகவல் படித்து லட்சம் முறைக்குமேல் மகாமந்திரம் கூறி அனுபவரீதியாக பக்குவப் பட்ட சன்மார்க்க
சாத்தியராகும் அன்பர்கள் செல்போன் எனும் அலைபேசி வைத்துள்ள பயனாளர்கள் போன்றவர்கள். அவர்கள் தொலைபேசி நிலைய
தொடர்பு இல்லாமலேயே நேரடியாக செயற்கை கோளாகிய பிரபஞ்சத்திலுள்ள வள்ளலாரின் கேந்திரத்தில் தொடர்புக் கொண்டு
செயல்படும் தன்மை பெற்றவர்கள்.
வள்ளல் பெருமான் அருளரசாட்சியில் மெய்ஞானத்திலும் அருளரசாட்சி தன்மையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரம்ம சக்தி முதலாக பஞ்சகிருத்தியங்கள் செய்யும் அனைத்து பஞ்சகிருத்தி கர்த்தாக்களுக்கும் தனித்தனி
சுயகேந்திரங்களூக்கு பிரபஞ்சத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுமதியளித்திருந்தார். வள்ளல் பெருமானுக்கு முற்பட்ட கால
கட்டங்களில் பஞ்சகிருதிகர்த்தாக்கள் தமது சுயகேந்திரங்களை தமது சுயசக்திபெருக பக்தி மார்க்கத்தை பயன்படுத்தி உபயோகித்து
வந்தனர்.இயற்கையுண்மை தெய்வத்தின் பெருமைகளை தமது பெருமைகளாக காண்பித்து மாயையால் மறைத்தனர். அதனால்
சமயங்கள், மதங்கள் பல்கி பெருகி உபயோகமாக இருக்க வேண்டிய செயல்பாடுகள் அனைத்தும் உபத்திரவ செயல்பாடுகளாக ஜீவ
ராசிகளுக்கு துன்பத்தையே வழங்கின.
வள்ளல் பெருமான் அருளரசாட்சி ஏற்பட்டபின் கருணை வடிவாக உள்ள ஆன்மாக்களே பஞ்சகிருத்தியம் அடைந்து, அதையும்
கடந்து ஞானத்தில் ஞானியாக மாறி சத்தி சத்தர்களாக செயல்பட இயலும்.
இன்றைய காலகட்டத்தில் சத்தி சத்தர்களுக்கு மட்டுமே சுயகேந்திரம் அமைக்க அனுமதியுண்டு. பஞ்சகிருதிகர்த்தாக்கள்
கருணை வடிவாக இயற்கைநியதி கோட்பாட்டை பின்பற்றினால்,சத்தி சத்தர்கள் தமதுகேந்திரத்தை பயன்படுத்திக்கொள்ள
கர்த்தாக்களுக்கு அனுமதியளிப்பார்கள். நியதிகளை தவறும் பட்சத்தில் கேந்திரங்களை பயன்படுத்தும் அனுமதியை இழந்து
பஞ்சகிருத்தியங்களை சரியாக நடத்த முடியாமல் விரைவில் சக்தி இழப்பார்கள்.
அருட்பெருவெளியிலுள்ள வள்ளலாரின் கேந்திரத்தில் அண்டத்தில் அண்டமாய் அருள் சக்தி காரியப்படும்.
ஞானசபையில், சித்திவளாகத்தில்,மகாமந்திரபீடத்தில்,உரியவகையில் செயல்படும் சங்கம் சார்திருக்கோயில்களில் அண்டத்தில்
பிண்டமாய் அருள்சக்தி காரியப்படும்.
சன்மார்க்கசாத்தியர்,சாதகர்,உண்மைஞானிகள் ஆகியவரிடம் பிண்டத்தில் அண்டமாய் அருள்சக்தி காரியப்படும். கருணை
வடிவான அன்பர்களிடம் பிண்டத்தில் பிண்டமாய் அருள்சக்தி காரியப்படும்.
வள்ளல் பெருமான் அவர்கள் ஞானதேகம் பெற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் தான்வேறு இறைவன்வேறு என்று
பாகுபாடின்றி இரண்டற கலந்திருந்தாலும்,தம்மை குருவாக மட்டுமே கருதி இறைவனை மட்டுமே தொழுபவர்களுக்கெ
உயர்நிலையடைய ஞானத்தை உரைப்பார்.எனவே வள்ளல் பெருமானை தெய்வமாய் கருத வைக்கும் உருவ வழிபாட்டை
மேற்கொள்வது அவ்வாறு செய்வோரின் முயற்சிக்கு தடைக்கல்லாய் அமையும்.
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினோடும் கேட்பீர்
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே
புந்திமயக்கடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்
தன்மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே
தன் ஆணை என் ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.
என்பது வள்ளலார் அன்பு கட்டளை.
சன்மார்க்கம் என்பது ஒன்பது வகையான வழிகளில் பூவுலகில் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும். அந்த ஒன்பது வழிகளில்
ஒன்றுதான் எம்மை கருவியாகக் கொண்டு வள்ளல் பெருமான் அவர்கள் மகாமந்திரபீடத்தில் வெளிப்படுத்திய அனைத்து விஷயங்களின்
சாராம்சம் ஆகும்.
இது முழுமையாக இந்த தொடர்க்கட்டுரையில் இரண்டாம் பகுதியில் வெளியிட்ட சாதக நிலையிலிருந்து சாத்திய
நிலைக்கு உயரும் பொருட்டு செய்யும் முயற்சியில் ஏற்படும் அனுபவ ரீதியிலான சந்தேகங்களுக்கு வழங்கப்படும் அனுபவ ரீதியிலான
பதிலாக கொள்க. இன்னும் வரும்.
ஜோதிமைந்தன் சோ.பழநி
மகாமந்திரபீடம்,திரியம்பல விண்ணகர திருமாளிகை
14,எஸ்.ஆர்.பி. நகர்,காரை,இராணிப்பேட்டை,
வேலூர் மாவட்டம்
தமிழ்நாடு
பின் கோடு :632 404
ஈமெயில்: mahamandhirapeedam@yahoo.com
mahamandhirapeedam@gmail.com
jyothimaindhan@gmail.com
செல்:9942062598,
04172-275071.
Wish u all the best of your Mahamanthirapeeda Illara sanmarga services.Vallalar blessings.
Thank u very much to Arulperumjothi Aadavar&Vallal Ramalingar.-With Vallalar Loving,Aruljothi.
What are the other eight ways?
Villakkam thara Iyaluma?
ஞானத்தில் யோகம் என்பது நிராசை என்ற நிலை ஆகும். நீங்கள் கூறும் அனைத்தும் சரியை நிலை ஆகும். ஞானத்தில் யோக அனுபவம் ஒருவருக்கு வாய்க்கும் போது உலக தோற்றம் மறைந்து விடும். தவறான கருத்துக்களை சன்மார்க்கத்தில் புகுதாதிர்கள்.
நக்கினம் சிவம்
நீங்கள் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்து உள்ளீர்கள்.ஞானத்தில் யோகத்தில் நிராசை நிலை உண்டாகும் என சொல்வது எப்படி? பிறர் சொல்லும் கருத்துகளில் உள்ள தவறுகளை உறுதியாக சுட்டி காட்டுவது உங்கள் சன்மார்க்க அறிவை காட்டுகிறது.தயவு செய்து தெளிவாக யோக,ஞான வார்த்தைகளை விளக்கினால்நலம் பயக்கும்.உங்களை போல சரி,தவறுகளை சுட்டி காட்டும் சன்மார்க்க அன்பரை பார்த்தது இல்லை.
ஞானத்தில் யோகம் என்ற நிலை தற்போதம் அற்ற நிலை அதாவது தத்துவங்கள் 36 ம் கடந்த நிலை ஆகும். தத்துவங்கள் கடந்தால் நான் என்கின்ற உணர்வு கடந்த நிலை வாய்க்கும். அப்போது எந்த பொருளையும் பற்றுகின்ற குணம் கொண்ட நமது மனம் பற்றுகளை நீக்கி சுத்தம் பெரும். அதுவே நிராசை நிலை ஆகும். அதன் பயனாய் நம்மை பற்றிய ராக துவேஷங்கள் நீங்கும். ஒருமை நிலையை நாம் அடைந்து விடுவோம். அடுத்து இறை தரிசனம் கிடைக்கும்.
அன்புடன்
நக்கினம் சிவம்
அன்பு கூர்ந்து பேருபதேசம் படித்து அதன் வழி நடக்க விரும்பும் சன்மார்க்க அன்பர்கள் சைவ சித்தாந்தத்தில் வள்ளல் பெருமான் அருளுரைத்த சன்மார்க்கத்தை தேடாதீர்கள். சமயங்கடந்த தனிப்பொருள் வெளியாய் அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளல் பெருமானின் வார்த்தைகளில் நம்பிக்கையுள்ளவர்கள் பேருபதேசக் கருத்துக்களை உள்வாங்கி தயவு செய்து சன்மார்க்க கருத்தை வெளிப்படுத்துங்கள்.
சைவ சித்தாந்த தாக்கத்திலிருந்து விடுபட இயலாதவர்கள் சன்மார்க்க கருத்துகளை மட்டும் பின்பற்ற விரும்பும் அன்பர்களை தனிப்பட்ட முறையில் குறை சொல்வதை கைவிடுவதுடன் அவர்கள் எடுத்தியம்பும் சன்மார்க்க கருத்துக்களை தக்க ஆதரமில்லாமல் மறுத்துரைக்காதீர்கள் சன்மார்க்க அன்பர்களை குழப்பாதீர்கள். சன்மார்க்கத்தை பொறுத்தவரை ஆடுறு சித்து நிலையை கடந்து கூட்டுறு சித்து நிலையடையும் போதே சுயதரிசனம் பெற்று அதன் பின்னரே மற்ற அனுபவங்கள்கிட்டும் மேலும் ஞானத்தில் யோகம் முடிவில் சாத்தியர்தான் மறைவாரே அன்றி உலகம் மறையாது. உலகம் மறையும், நிராசை நிலை, தற்போதம் அற்ற நிலை, 36 தத்துவங்கள் இவையெல்லாம் சித்தாந்த சொத்துகள். சன்மார்க்க நம்பிக்கையை பற்றிய விவரங்களுக்கு இந்த தொடரை ஆரம்பத்திலிருந்து முழுமையாக படிக்கவும். இறை தரிசனம் பற்றிய விவரங்களுக்கு இந்த தொடரில் 12 & 13 பகுதியை பார்க்கவும்.
என்றென்றும் சன்மார்க்க பணியில்
ஜோதிமைந்தன்
யோக,ஞான சொற்களுக்கு விளக்கம் கேட்டால் முப்பத்தாறு தத்துவகளை சொல்லி உங்கள் சைவ சித்தார்ந்த அறிவை பதிலில் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
முப்பத்தாறு தத்துவங்கள் மேலான உண்மையை வள்ளலார் சொல்லி இருப்பதைஅறிய வில்லையா நீங்கள்?ஒருமை எப்படி வரும்?நினைந்து,நினைந்து,உணர்ந்து,உணர்ந்து,நெகிழ்ந்து,நெகிழ்ந்து,அன்பே நிறைந்து,நிறைந்து ஒருமை உள்ளத்தோடுகருணையில்,தயவில்,அருளில் அல்லவா ஒருமை வருகிறது.உலகத்துக்கு அப்பாற்பட்டது இல்லை யோகமும்,ஞானமும்.ஜோதி மைந்தன் அவர்கள் வெளிபடுத்திய கருத்துகளை நன்றாக படித்து பாருங்கள்.
யாரை பற்றியும் தெரியாமல் அவர்கள் கருத்துகளை குறை சொல்லுவது எப்படி?.பிறரின் உண்மை கருத்துகளை,அனுபவங்களை பற்றி தெரியாமல் எதையும் தவறு என சொல்லுவது சன்மார்க்கத்துக்கு எதிரானது.இது வள்ளலார் நமக்கு சொல்லும் அறி உரை. -நாகர்கோயில் அருள்ஜோதி சுஜாதா சன்மார்க்க மாணவர்கள் கோமதி&ஜெயா பிரதீபா.
வள்ளல் பெருமானின் கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ள வில்லை என்பதை உங்களது பதிலில் வெளிப்படுத்தி இருககிறீர்கள்.
புருஷார்த்தம் நான்கு பற்றி நமது வள்ளல் பெருமான்
ஏம சித்தி, சாகா கல்வி, தத்துவ நிக்கிரகம், கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல். என்பது பற்றி அறிந்து இருக்கிறீர்களா ?
தத்துவ நிக்கிரகம் என்றால் என்ன?
ஒருமை கல்வி என்றால் என்ன என்று தெரியுமா ?
தத்துவம் முழுவதும் தனி தனி கடந்தேன் என்று நமது வள்ளல் பெருமான் பாடியுள்ளதை படித்து இருக்கிறீர்களா ?
உண்மையை புரிந்து கொள்ளாமல்
சுத்த சன்மார்க்கத்தையும் புரிந்து கொள்ளாமல்
சைவ சமயத்தின் கருத்துகள் என்ன என்று தெரியாமல்
ஏனோ தானோ என்று எழுதாதீர்கள்.
அன்புடன்
நக்கினம் சிவம்
வள்ளல் பெருமானின் பெருபதேசத்தை சரியாக படித்து பாருங்கள்.
பிரபஞ்ச போகத்தின் கண் அலட்சியம் தோன்றினால் நிராசை உண்டாம்.
ஆதலால் சரியை முதலிய சாதகம் நான்கினில் நான்காவது ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை என்னும் படி உண்டாகிறது. என்று நமது வள்ளல் பெருமானார் மலர்ந்தருளி இருக்கிறார்கள்.
மேலும்
அருட்பெரும்ஜோதி அகவலில்
அறிவுரு அனைத்தும் ஆனந்தம் ஆயிட
பொறியுரும் ஆன்ம தற்போதமும் போயிட
தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கு ஒழிந்திட
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட
உலகெலாம் விடயம் உளவெலாம் மறைந்திட
அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட
ஆக நமது வள்ளல் பெருமான்
ஞானத்தில் யோக நிலையில் தற்போதம் போய் தத்துவங்கள் அனைத்தும் ஒழிந்து சத்துவ நிலை அடைந்து அனுபவம் வாய்க்கும் போது உலக விடயம் அதாவது தோற்றம் மறைந்து விடும் என்று கூறி இருக்கிறார்கள் என்பதை உணரவும்.
இனியாவது அகவலை படிக்கும் போது பொருள் உணர்ந்து படிக்கவும்..
அன்புடன்
நகினம் சிவம்
நீங்கள் சொல்லுவது போல சன்மார்க்கம் தத்துவங்கள் கடந்த நிலை தான்.அந்த தத்துவங்களை எல்லாம்கண்டிப்பாக அறிய வேண்டும் என்பது இல்லை.வள்ளலார் தத்துவங்களை உடைத்து உண்மை ஜோதியை
காட்டிய பிறகு அதற்கு அவசியம் இல்லை. சமயங்கள் எல்லாம் தத்துவங்களை சொல்லுமே தவிர உண்மையை வெளியில் யடுத்து உரைக்காது.சுத்த சன்மார்க்கம் என்பதோ தத்துவங்கள் கிடையாது.அது உண்மை நடைமுறை செயல்பாடு.சுத்த சன்மார்கத்தை அறிவதற்கு தத்துவங்களை படிக்க வேண்டும் என்பது இல்லை.தயவு ஒன்று நம்மிடம் இருந்தால் எல்லா உண்மைகளும் தெரிந்து விட போகிறது.ஒருவரிடம் கருணை ஒன்று இருந்தால் போதும்.அப்போது அறிவும்,அன்பும் உடனாக நின்று விளங்கும்.வள்ளலார் சொல்லி இருப்பதை பாருங்கள். "சைவ சமயம் என்னை மேல் ஏற்ற வில்லை.தயவு என்னும் கருணை தான் என்னை ஏறா நிலமிசைக்கு ஏற்றியது என்றார்.".நீங்கள் சைவ சமயத்தில் வைத்திருக்கும் பற்றை விடவும் அதிகமாக வைத்தவர் தான் நம் வள்ளலார்.நீங்கள் சொன்ன வள்ளலார் கருத்துகள் சரி தான்.ஆனால்,அதை நீங்கள் சரியாக புரிய வில்லை. நீங்கள் உங்கள் கருத்துகளில் அறிவை வெளி படுத்துவது போல கருணையை வெளி படுத்த வில்லை.தான் எனும் நிலை ஞானத்தில் யோக நிலையில் நீங்க வேண்டும் என சொன்னீர்கள்.ஆனால் நீங்கள் உங்கள் பதில்களில் உங்கள் கருத்து சரி.மற்றவர்கள் சொல்லுவது தவறு என சொல்லுவது உங்கள் பற்றை குறிக்கிறது.இனி நீங்கள் என்ன பதில் அளித்தாலும் பதில் கொடுப்பதை நிறுத்தி விடுவது தான் நல்லது.நாங்கள் பணிந்து போகிறோம்.ஒன்றை பற்றி வீணாக விவாதம் செய்வதால் உண்மை சன்மார்க்க அனுபவத்தை அறிய முடியாமல் போய் விடும்.கால விரயத்தை விரும்ப வில்லை.காலம் முழுதும் நீங்கள் பிறர் கருத்துகளை குறை சொல்லி கொண்டு வாழுங்கள்.தயவு.
Nakinam Sivam told the truth but most of us are not ready to take like those who were around our Vallalar while our Vallalar was alive.
Ganesan