Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
ஒரு யோகியின் தீபஒளித் திருநாள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

ஒரு யோகியின் தீபஒளித் திருநாள்
ஈசன் அரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்
-திருவருட்பா

ஈசன் திருவருளால் எனக்கொரு ஓடம் வாய்த்தது. அதன் வழியாக ஏறிக் கரையேறினேன். அங்கே ஒரு மாடம் இருந்தது. அம்மாடத்தின் நடுவே தெய்வ மணி பீடமும், தீப ஒளியும் கண்டேன்; கண்டவுடன் சந்தோடம் – மகிழ்ச்சி சேர்ந்தது.
இதுவல்லவா சந்தோடம்- மகிழ்ச்சி! இதனை வார்த்தையால் அளவிட முடியாதே!
அகத்தில் காணும் இந்த நாளே ஒவ்வொருவருக்கும் தீபஒளித் திருநாள். தீபஒளியைக் காண்போம். எந்நாளும் சந்தோடத்தில் இருப்போம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

நன்றி:

திரு.செந்தில் மருதப்பன்
நியூஜெர்சி