Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
சன்மார்க்கியின் பணி-II

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டும், வாய் வார்த்தைகளால் கூறிக்கொண்டும் மட்டும் இல்லாமல், தன்னுடைய வார்த்தைகளும் பிறர் மனதை புண்படுத்தாமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டுமாம். அப்பொழுது மட்டுமே அனக வாழ்வு வெளிப்படுமாம், சிவ ஞானத்தை பெறும் தகுதியும் உண்டாகுமாம்.
சன்மார்க்கியின் பணி-II
எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு ராமலிங்க சுவாமிகளின் சுத்த சன்மார்க்கம் நாளுக்கு நாள் உலகெங்கும் பரவி வருகிறது. சாதி, சமய கருத்துகள் தோல்வியை சந்தித்து வருகின்றன. சுத்த சன்மார்க்கத்தில் இருந்துக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பக்குவபட்ட ஆன்மாவில் தன்னை புகுத்திக்கொண்டு, அவர்கள் மூலம் சன்மார்க்கத்தை தானே நடத்தி வரும் ஞானகுரு-ராமலிங்க சுவாமிகளின் மரணமிலா பெருவாழ்வையும், இப்பொழுது எங்கும் காண முடிகிறது.
எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு தன்பாதம் பற்றியவர்களுக்கு தானே அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார், சூட்சும வடிவில் தன்னையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். அதற்கான ஆதாரங்களும் தற்போது வள்ளலார் ஸ்பேஷ்-ல் அவரருளால் வந்துக்கொண்டிருக்கிறது.
இவையெல்லாம் பார்க்கும் போது எல்லாம் வல்ல ஞானகுரு மக்களின் நலனுக்காகவும், மண்ணுலகத்தில் வாழும் உயிர்களின் நலனுக்காகவும், பக்குவபட்ட ஆன்மாவில் தன்னை புகுத்திக்கொண்டு அவர்கள் மூலம் இறைஞானத்தை போதித்துக்கொண்டிருக்கிறார் என்பது பட்டப்பகல் வெளிச்சமாக தெரியவருகிறது.
உதாரணத்திற்கு பல அருளாளர்களை சொல்லலாம். சமீபத்தில் வாழ்ந்த அருளாளர்- தயா ஒளி சரவணானந்தா சுவாமிகள் தன்னுடைய வாழ்க்கையை எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல் பெருமானிடம் அர்ப்பணித்து இறைஞானத்தை “தயா விளக்கமாக” போதித்துள்ளார். அவருடைய ஒவ்வொரு விளக்கமும் சுத்த சன்மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு அருளமுதமாக இருக்கிறது. ஆனால் புற விளக்கம் அவரையும் விட்டுவைக்கவில்லை.
அருட்பெருஞ்சோதி தயவு என்று வேற்றுமையாக பார்க்கிறது. எல்லாம் வல்ல ஸ்ரீஞானகுருவின் எண்ணம் தன்னைப்போல் அனைவரும் இறைஞானம் பெற்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ வேண்டும் என்பதாம்.
தன்னை போற்றிக்கொண்டு, மற்றவர்களை அவமதிப்பதையும் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் விரும்பாதவர், விருப்பு வெறுப்பு அற்றவர், அவருடைய எண்ணமெல்லாம் மக்கள் விழிப்புணர்வு பெற்று சாதி, சமய, இன வேற்றுமையின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதேயாம்.
எனவே தான் ஒவ்வொரு காலகட்டத்திலும், வெவ்வேறு நிலையில் இறைஞானத்தை அடையும் வண்ணம், பல அருளாளர்கள் மூலம் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் அவருடைய வெளிப்பாடு தயவாகி மலர்ந்துள்ளது. கருணை எங்கு உள்ளதோ அவ்விடத்தை தேடி அவரே வருவார். இது சத்தியம். எனவே தயவு கருணை இரண்டும் வேறு அல்ல. தயா வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இறைவன் தயா ஜோதியாகவே காட்சி தருகிறார்.
ஆகவே சுத்த சன்மார்க்கத்தில் இருப்பவர்கள் எதனையும் அலட்சியம் செய்யாமலும், மறுக்காமலும், அன்பு-கருணை-தயவு என்பதை சத்திய வார்த்தையாகக் கொண்டு உலகியியல் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளதாம்.
மேலும் எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, வாய் வார்த்தைகளால் கூறிக்கொண்டு மட்டும் இல்லாமல் தன்னுடைய வார்த்தைகளும் பிறர் மனதை புண்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமாம். அப்பொழுது மட்டுமே அனக வாழ்வு வெளிப்படுமாம், சிவ ஞானத்தை பெறும் தகுதியும் உண்டாகுமாம்.
எனவே சன்மார்க்கத்தில் இருப்பவர்கள் கடும் சொற்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தாமல் தன்னுள் ஜோதியை காணும் நிலைக்கு தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டுமாம். விமர்சனங்களை சதா சர்வ காலமும் ஏற்படுத்தி, அதற்கு விடைக்கொடுத்து கால நேரத்தை விரயமாக்காமல், சதா சர்வ காலமும் குரு ராமலிங்கத்தை நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து அவர் உரைத்த சத்திய மார்க்கத்தை செயல்படுத்த தொடங்கினால் அவரருளால் ஏறாத நிலையை அடையலாம்.
மேலும் சத்விசாரம் என்பது அண்டத்தையும், பிண்டத்தையும் உணர்ந்து, அதன் மூலம் மாயை அறுத்து எல்லா செயல்களும் அவரருளாலே நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது, என்பதை உணர செய்வதாம்.
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள்
ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்ட எலாங் கொண்ட எலாங் கொண்டு கொண்டு மேலும்
கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக்
கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம் வல்லவராய்
ஒங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
திருவருட்பா- பதி விளக்கம்
இதனை உணரும் போது மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை அறுந்து விடுகிறதாம். ஆன்மா பக்குவ நிலைக்கு வந்துவிடுகிறதாம்.
எனவே வீண்விவாதங்களும், மொழி அறிவும், புலமையை காண்பிப்பதும், சத்விசாரம் ஆகாது என்பதை சத்தியமாக உணர்ந்து எல்லாம் வல்ல ஸ்ரீ ஞான குரு ராமலிங்க சுவாமிகள் பாதம் பற்றி
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காதென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இச்சிறியேனால் ஆவதென்னே.
(திருவருட்பா-தற்சுதந்திரம் இன்மை)
என்ற இப்பாடலில் உள்ள கருத்துகளை நன்கு உணர வேண்டியுள்ளதாம். அப்பொழுது நானே சுத்த சன்மார்க்கி, நானே சுத்த சன்மார்க்கத்தை திறம்பட நடத்துகிறேன் என்ற எண்ணம் -வார்த்தை கனவில் கூட வராது.
தொடரும்...,
தகவல் உதவி:
1. எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
***********
9 Comments
hariharan_82
காலங்கள் தோறும் அருளாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பார்கள்.
இந்த உலகையும், மனித குல ஜீவ ராசியையும் தமது அருளுரைகளால்
இறை நிலை அடைய வைப்பார்கள் என்பதையே நாம் உணர்ந்து
கொள்வதற்கு இதுபோன்ற அருளாளர்களின் வருகையே சாட்சியாக
அமைந்துள்ளது.
Saturday, December 5, 2009 at 08:38 am by hariharan_82
ssumathi1
Ayya,
In view of Your article, I think that you are wounded by somebody OR you are now wounding somebody.
Swamy Saravanda Avl., is a great man. I call him that he is first citizen of the Sutha Sanmarga World.
Ayya, one rule should be followed by US that whenever we use word and post article only on the basis of Vallalar word and documents. Very important is to be noted by us that Vallalar left Religions and Ordered us 'do not attach with them'. Then only you can reveal My Margam said by Vallalar.
If it is followed, this happaning will not be arised.
Saturday, December 5, 2009 at 19:24 pm by ssumathi1
KUMARESAN KRISHNAMURTHY
Dear all
I am not going to wound some body, even i am afraid of that word" wound or hurt .
My kind request to all is no one should be hurted by any comments.
Our ultimate aim should be realizing the truth and assimilating with the guru- Saint ramalinga.
That is why this article has been written by the aruljothi team with guidance of the supreme grace light.
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காதென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இச்சிறியேனால் ஆவதென்னே
thank you
Saturday, December 5, 2009 at 22:37 pm by KUMARESAN KRISHNAMURTHY
KUMARESAN KRISHNAMURTHY
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
Dear all,
I am not going to wound some body, even i am afraid of that word" wound or hurt .
My kind request to all is no one should be hurt by any comments.
Our ultimate aim should be realizing the truth and assimilating with the guru- Saint ramalinga.
That is why this article has been written by the aruljothi team with guidance of the supreme grace light.
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காதென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இச்சிறியேனால் ஆவதென்னே
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
thank you
Saturday, December 5, 2009 at 23:41 pm by KUMARESAN KRISHNAMURTHY
ssumathi1
Sir, Kindly sorry and bless me.
As you say, all are equal but different is on knowing the truth. All are in learn the truth. My opinion is When say about Vallalar only on his final findings. Is it correct or not ?
From other article in this Spacesite, Vallalar left attachments with Religion and specificall commanded his followers that one to leave likewise to gain the Gnana.And also wherein as follows:
VALLALAR SAID THAT THE RELIGIOUS FAITH IN SAIVA HAD NOT UPLIFTED HIM TO THE PRESENT STAGE BUT ONLY THE COMPASSION HAD UPLIFTED HIM.
From www.vallalar.net, the statement of vallalar is taken and given below:
இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
and also ;
சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. "தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!
"And also available:
"தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்and
further vallalar said that
இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை..
SIR I AM IN THE POINT. KINDLY TELL ABOUT WHAT WAS TELLING LAST 2 I/2 YEARS BY VALLALAR ?
Sunday, December 6, 2009 at 01:10 am by ssumathi1
KUMARESAN KRISHNAMURTHY
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
Please forgive me.
I am not interested to read the word- final findings.
He is not like any other person who got enlightenment after some years or period.
He has learnt all the occult skill and his immortal education by the birth itself, without any external teacher or Guru. Hence I am afraid of the word -final findings.
Please ask my gnana guru Vallalar, He will give better answer than me.
I am just an average human being; i can’t give any answer only by the reference of text.
i am also daily praying him to know my origin of soul and asking the question who am i? i am not knowing it till this period. The saint ramalinga also keeps ward off. How can I answer for all those questions without knowing myself.
I am posting the article by the guidance of the supreme grace light, That is why the author name is mentioned as Arul jodhi, the team leader is saint ramalinga, I am a just subordinate.
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இச்சிறியேனால் ஆவதென்னே.
Thank you
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
Monday, December 7, 2009 at 03:58 am by KUMARESAN KRISHNAMURTHY
ssumathi1
Most Respected Sir,
Sorry for troubling.Rebeatly I contact you only on base of VISARAM which should be made as directed by Vallalar.
IN YOUR REPLY SOME WORDS ARE AS FOLLOWS;
Monday, December 7, 2009 at 18:33 pm by ssumathi1
ssumathi1
RESPECTED SIR,
Sorry sir for troubling you. I continuously contact you only on base of VISSARAM and your good manner.
In your reply as follows:
Please ask my gnana guru Vallalar, He will give better answer than me.
and you also said that as:
I am not interested to read the word- final findings.
Sir please understand my position as wellas new commers. We are not asking Who is GOD? Where is soul in our body?.
We ( I and my friends) only asked What said by Vallalar since we have not correct book.
But to-day I have received more about VALLALAR and VALLAR's MARGAM from audio from this site ie: {DownloadRefr:1987}
Eventhough some doubts are with us.It will be cleared by the team of this space site and noble persons likeyou.THANKYOU SO MUCH.
I always pray your blessings for me.
Monday, December 7, 2009 at 18:50 pm by ssumathi1
hariharan_82
Duties of Sanmargi..not hurting others...always thinking the Lord ... Arutperunjothi...very good information.
Continue ayya.
Monday, December 7, 2009 at 23:00 pm by hariharan_82