பரிகாரம்
பரிகாரம் என்றால் பொதுவாக ஞாபகத்திற்கு வருவது அபிஷேக ஆராதனைகள் தான். பரிகாரத்தினால் மட்டுமே எதிர் மறையான பலன்களை குறைக்க முடியும் என்று மக்கள் ஆயிர கணக்கில் பணத்தை செலவு செய்து அதில் நிம்மதியை தேடுகிறார்கள். ஒரு சிலர் போலி சாமியார்களிடம் சென்று ஏமாறுகின்றனர்.
மக்களின் நலனுக்காக வள்ளலார் மிக தெளிவாக தன்னுடைய பாடல்களில் இறையைப் பற்றியும், இறை வழிபாடு பற்றியும் தெரிவித்திற்கிறார்கள். அக வழிபாடும், பிற உயிர்களிடத்தில் காண்பிக்கும் கருணையால் மட்டுமே இறையை உணரமுடியும். ஆரவாரமான பூஜைகள் மூலமும், சிறு தெய்வ வழிபாடு மூலமும், உயிர் வதை செய்வதன் மூலமும் இறையை உணர முடியாது என்று. இதனை பல இடங்களில் வள்ளலார் வழியுறுத்துகிறார்.
திருமூலர்:
குடுடும் குருடும் குருட்டுட்டம் டி
குருடும் குருடும் குழிவிழு மாறே -
திருமந்திரம் 1652.
" வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்றும் கருத்து வேதமும் கூறுவது இங்கு நோக்கத்தக்கது.
உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு மக்கள் உள்ளார்கள். ஆதியிலே அதனை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இன்னும் பலர் விடை காணவில்லை.
நாமும் உண்மையை உணராது - உணர முயலாது சாதிலும், மதங்களிலும் சமய நெறிகளிலும்,சாத்திர சந்தடிகளிலும், கோத்திரச் சண்டையிலும் அலைந்தலைந்து வீண் போகின்றோம்.
தோன்றிய வேதாகமத்தைச் சாலமென வுரைத்தேம்
சொற்பொருளும் இலக்கியமும் பொய்யெனக் கண்டறியேல்
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்காகும்
உலகறி வேதாகமத்தைப் பொய்யெனக் கண்டுணர்வாய்
ஆன்ற திருவருட் செங்கோல் நினக்களித்தோம் நீயே
ஆள்க அருளொளினால் என்றளித்த தனிச் சிவமே
ஏன்ற திருவமுதெனக்கும் ஈந்த பெரும் பொருளே
இலங்கு நடத்தரசே என் இசையுமணிந்தருளே
திருவருட்பா
சித்தர் சிவவாக்கியர் பாடலும்
கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே.
பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே! -சிவ வாக்கியர்
இந்த ஒருமையை(எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் பேணுதல் ) புரிந்து கொள்ளாமல் மக்கள் இன்னமும் வாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பிற உயிர்களிடத்து அன்பு பூண்டு அதன் மூலம் நன்மை பெறுங்கள்-இறையை உணருங்கள் என்று வள்ளல் பெருமான் கூறுகிறார். ஆனால் மாயைவசப்பட்ட மக்கள் மாயையை வேண்டி இறையை தேடுகிறார்கள். சொகுசுகார், பங்களா, கை நிறைய சம்பளம் என்று அவர்கள் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.
ஒரு சில கோயில்களில் இறையை வணங்க செல்லும் அன்பர்கள் தாங்கள் மட்டுமே இறையை நெருக்கத்தில் பார்க்க வேண்டும் என்று அருகில் இருக்கும் நபர்களை தள்ளிக் கொண்டும் , உரத்த குரலில் சப்தமிட்டும் இறையை வணங்குகிறார்கள்.
ஒரு சிலர் வயோதிக பிச்சை எடுப்பவர்களுக்கு ஒரு அடி உயரத்திலிருந்து (தட்டுக்கு மேல்) பிச்சை இடுகிறார்கள், இல்லையெனில் அதிர்ஷ்டம் போய்விடுமாம்.
மற்றும் சிலர், தன்னுடைய உறவினர்களுக்கோ , அல்லது சகோதர சகோதரிகளுக்கோ உதவி செய்ய முன் வர மாட்டார்கள். ஆனால் கடவுள் தயவு மட்டும் அவர்களுக்கு எப்போதும் வேண்டுமாம். அதற்காக அவர்கள் பெரும் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள்.
பரிகாரம் என்பதே பிற உயிர்களிடத்து தயவாக-அன்பாக-கருணையாக -விசுவாசமாக இருப்பதுதான்.
இந்த நிலை மட்டுமே ஏறாத நிலையையும் ஏற்றி வைக்கும். விதியை மதியால் வெல்ல முடியும் என்றால் இங்கு மதி என்பது கருணை குணம் தான். வேறு குறுக்கு வழி மூலம் ஊழை வெல்ல முடியாது. அதனால் தான் வள்ளல் பெருமான், ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமல், ஞானம், யோகம், விரதம், ஜபம், தியானம் முதலியவைகளை செய்கின்றவர்கள் கடவுள் அருளுக்கு சிறிதும் பாத்திரமாகார்கள். அவர்களை ஆன்ம விளக்கம் உள்ளவர்களாகவும் நினைக்கப்படாது. ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகிற செய்கைகள் எல்லாம் பிரயோஜனம் இல்லாத மாயா ஜால செய்கைகளாகும்,என குறிப்பிடுகிறார்கள்.
மேலும் ஜீவகாருண்யத்தை பின்பற்றினால் எந்த ஒரு ஆபத்தும், இன்னலும் அஜாக்கிரதையினாலும், ஊழ் வகையினாலும் வராது என்பதை சத்திய வார்த்தையாக நினைக்க வேண்டும் என்று வள்ளலார் வழியுறுத்திள்ளார்கள்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும். – குறள் 260
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க புலால் உண்பதை தவிர்த்தும், பெரும் பொருள் செலவு செய்து பரிகாரம் தேடாமல் அருகில் இருக்கும் வறியவர்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்தும், அன்பாக , கர்வம் கொள்ளாமல், மத, இனவேறுபாடில்லாமல் எல்லோரிடத்தும் ஆன்ம நேய ஒருமைபாடு கடைப்பிடித்தும், எதிலும் பொது நோக்கு முதலிய சன்மார்க்க கொள்கைகளில் நம்பிக்கை வைத்தும், ஒருமையோடு இறையை நினைத்தால் நியாயமான முறையில் உங்களுக்கு எது தேவையோ அது இறையருளால் கிடைக்கும்.
கருணை-அன்பு-தயவு-விசுவாசம் அதிகமாக அதிகமாக உள்ளம் உருகி ஊண் உருகி உள்ளொளி பெருகும். உள்ளொளி பெருகினால் உடம்பினுள் இருக்கும் இறை வெளிப்படுமாம்.
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே
-திருமந்திரம்
எனவே பரிகாரம் என்பது பிற உயிர்களிடத்து கருணையாக -தயவாக-அன்பாக- -விசுவாசமாக இருப்பதுதான் என்பதை சத்தியமாக உணர்ந்து வள்ளலார் வழியை கடைப்பிடித்து முதலில் ஒரு உத்தம மனிதனாக வாழ முயற்சி செய்வோமாக.
*******************
being in the the sanmarga path, i have stopped going to thirupathi now. i m sending money every month to vadalur for annathanam. i feel god being so close to me now. my life is better. many of problems gets sorted out by itself. others should try this. it works. this is the best parikaram. excellent article arut jodhi team. thank you.
Thank u so much to your good message.karunai,anbu,deiou,arul matters are only Importances.other matters are really waste.This matter is very importance.Thank u for Kumaresan Avl. With Vallalar Loving,
Aruljothisujatha