Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
உலகியியல்-அருளியியலில் ஏழு சக்கரங்களின் பங்கு-III

சகஸ்த்ரானம்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

உலகியியல்

வாழ்க்கை என்னும் பெரிய கடலில் நீந்தி கடக்க நினைப்பவர்கள் இறைத்தன்மை கொண்ட சான்றோர்களின்-மூத்தோர்களின் வழியை பின்பற்ற வேண்டும்.

அருளியியல்

அன்புடனும்-தயவுடனும் உலகியலை எல்லா உயிர்களும் இன்புற நடத்தினால் மட்டுமே தன்னை இயற்கையோடு கலக்கலாம்-இறையடி சேரலாம். வேறு எந்த உபாயத்தாலும் இறையடியை சேர முடியாது.

இதுவே பிறவியொழிந்தவர்களின் நிலையாகும் -சாகா நிலையாகும்- வள்ளலார் நிலையும் இதுவே.

எல்லாம் கடந்த நிலை. தன்னிலை மறந்து தேகத்தோடு இறையனுபவத்தில் தன்னை கலக்கும் நிலை. தேகமில்லாத நிலை- ஞான தேக நிலை.

முடிவுரை:

இதற்கு முடிவுரை வழங்குவதற்கு முன் இதே கருத்துடன் ஒரு சன்மார்க்க அன்பர் முடிவுரை வழங்கியுள்ளார். நாங்கள் அதையும் வரவேற்கிறோம். மேலே குறிப்பிட்ட சக்கரங்களை யோக முறையில் மட்டுமே அனுபவிக்க முடியும் என்று அனைத்து வித தியான மையங்கள் பறை சாற்றுகின்றன. ஆனால் அது எந்த வித பயனும் தராது. அது வாழ்க்கையைப் பயனற்றதாகிவிடும். ஆண்டவனின் அருளை எளிதாக ப்பெறலாம் என்பதை கீழ் கண்டவாறு கூறுகிறார்.

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர்-வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங்கு

என் மார்க்கமும் ஒன்றாமே. -திருவருட்பா

வள்ளல் பெருமான் ஏழு சக்கரங்களை யோக முறையில் அணுகாமல் சகஜ முறையில் அணுக மிக எளிமையாக விளக்கம் அளித்துள்ளார். இதற்கு ஆதாரமாகதான் தேவர் குறளை எடுத்துரைக்கிறார். அன்புடனும் தயவுடனும்-ஜீவகாருண்ய வழியில் வாழ்ந்தால் இறையடியை சேரலாம்.

வள்ளலார் இதை அகவல்,அட்டகம் மற்றும் அனுபவ பாடல்கள் மூலம் எவ்வாறு விளக்கமாக கூறுகிறார் என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்?

தொடரும்..,

**************