Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
தியான மண்டபம்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி

தியான மண்டபம்

சித்தர்கள் அனைவரும் எல்லாம் வல்ல இறையருளால் நெற்றிக்கண் திறக்கப்பட்டு சமுதாயத்திற்கு பல நன்மைகளை செய்துள்ளனர். பல் வேறு கால கட்டங்களில் அவர்கள் ஆற்றிய பெரும் பணி போற்றுதலுக்குரியது. 18ம் நூற்றாண்டும் 19 ம் நூற்றாண்டிலும் தோன்றிய மகான்கள் மற்றும் சித்தர்கள் நாட்டின் பெரும் வளர்ச்சிக்கு அடிகோளாக இருந்திருக்கின்றனர்.

ஸ்ரீ ராக வேந்திரர், ஸ்ரீ தாயுமானவர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள், ஸ்ரீரமணர், மற்றும் ஸ்ரீ குமார தேவர் போன்றவர்களின் சமுதாய பார்வை போற்றுதலுக்கு உரியது. இத்தகைய சித்தர்களின் ஒருவர்தான் 18-ம் நூற்றாண்டில் காட்டுச்சேரியில் பிறந்து ஆலத்தூரில் தங்கி அஷ்டமா சித்துகள் பல செய்து மக்களின் துயரங்களை நீக்கியவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ மலைப்பெருமாள் சித்தர் சுவாமிகள். இவர் ஜீவகாருண்யத்தை பெரிதும் வலியுறுத்தினார். அகப் பூஜையே சிறந்தது என்றார். இவருடைய கருத்துகள் ஆற்றிய பணிகள் எல்லாம் ஜீவகாருண்யத்தை வலியுறுத்துகின்றன. சாதி, மத வேறுபாடு வேண்டாம், தன்னையறிந்தவன் கோயிலுக்கு செல்ல வேண்டாம் , ”நான்” என்ற சொல் அகன்றால் இறை உண்மை விளங்கும், என்று மிக எளிய முறையில் சீர்திருத்தம் செய்துள்ளார்.

நிர்விகல்ப சமாதி-ஜீவ சமாதி மூலம் தன்னை பரிதாபி வருடம் 1852 ஆகஸ்டு 11ம் நாள் புதன் கிழமை பூர்வ பட்சம் ஏகாதசி திதி மூல நட்சத்திர நன்னாளில் இரவு மணி 12 க்கு எல்லாம் வல்ல பரம்பொருளோடு ஐக்கியப் படுத்திக் கொண்டு இன்றும் மக்களின் பல துயரங்களை போக்கி கொண்டிருக்கிறார்.

இவ்வாலயத்தில் தியான மண்டபம் (ரூ.6 இலட்ச மதிப்பில்) தயவுத்திரு சிவ.ஜெயக்குமார், பரம்பரை அறங்காவலர், ஸ்ரீமலைப்பெருமாள் சித்தர் பீடம் -அவர்களால் கட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் , காரைக்கால் மாவட்டங்களில் இதுபோல் ஒரு தியான மண்டபம் இல்லையெனலாம். மிக ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் இவரை தரிசிக்கும் போது வாழையடி வாழையென என்று தொடங்கும் திருவருட்பா பாடல் ஞாபகம் வருகிறது.

காரைக்காலில் இருந்து ஆலத்தூர் மலைப்பெருமாள் சுவாமி சித்தர்பீடம் சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

வள்ளல் பெருமானின் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கோயில் நிர்வாகம் சுமார் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்குகிறது.

*************************


3 Comments
ramesh_div66
I want to Know exact address and landmark.
Thursday, February 5, 2009 at 04:33 am by ramesh_div66
KUMARESAN KRISHNAMURTHY
Karaikal town, which is under the administrative jurisdiction of U.T. of Pondicherry, is 130 km from Pondicherry and 18 km from Nagapattinam of Tamil Nadu. The nearest railway station is Nagore (15 km) & Mayiladuthurai (45 kms), while the airport is at Trichy (150 km).
There is no direct bus service to this place. It is to be reached through Car, Auto, and Two wheelers from Karaikal or from Vizhithiyur.(about 15 km from Karaikal)
Vizhithiyur to Alathur is about 3 km.
Thank you
Thursday, February 5, 2009 at 20:06 pm by KUMARESAN KRISHNAMURTHY
Muthukumaaraswamy Balasubramanian
ஸ்ரீ. மலைப் பெருமாள் சுவாமியைப் பற்றி அறிந்துகொண்டேன் . நன்றி வள்ளலார் ஞானதேகம் பெற்று இன்றும் இருக்கின்றவர்.'மற்றவர்கள் எவ்வளவு பெரியவர்களாய் இருந்தாலும் தயவு செய்து வள்ளலாருடன் எவரையும்
இ ணைத்துப் பேசாதீர்கள் .எவருக்கும் ஈடு இணையற்றவர் வள்ளலார்.
நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் என்ஜான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும்
தேவா நின் பேரருளை எனைப்போல் பெற்றவரும்
எவ்வுலகில் யார் உளர் நீ சற்றே அறை
Thursday, April 21, 2011 at 05:45 am by Muthukumaaraswamy Balasubramanian