அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி
”என்மார்க்கம் இறப்பொழிக்கும்
சன்மார்க்கம் தானே”
தைப்பூசப் பெருவிழா
ஆறாம் ஆண்டு அன்னதான விழா அழைப்பிதழ்
ஆன்ம நேய அன்புடையீர்! வணக்கம்,
வடலூர் நற்கருங்குழியில் அமைந்துள்ள நமது ஏகஜோதி ஞான சபையில் எதிர்வரும் வள்ளலார் ஆண்டு 186 தை மாதம் 25, 26, 27 ( பிப்ரவரி 8,9,10-2009) ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களில் தைப்பூசம் மற்றும் திருவறை தரிசன விழாக்களை முன்னிட்டு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், அன்னதானம், சன்மார்க்கக் கருத்தரங்கம், திருஅருட்பாப் பாடல்கள் இசைத்தல் நடைபெறும். அருளன்பர்கள் அனைவரும் இப்பணியில் பங்கு பெற்று ஆன்ம லாபம் பெற அன்புடன் அழைக்கிறோம்.
இவண்,
நிறுவனர்-தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினர்
ஏகஜோதி ஞான சபை
23, ஞான சபை வீதி, நேரு நகர், காரைக்கால்.