8/26/2008 1:42:17 AM by Vallalar Karthikeyan
வள்ளலார் கூறும் யோகி, ஞானி யார் ?
யோகி - ஆகாராம் கொடுக்க நினைத்தவர்
ஞானி - ஆகாரம் கொடுத்தவர்
உள்ளபடி பசியால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தபோது, நினைத்த புண்ணியரது மனம் வேறு பற்றுக்களை விட்டுச் சுத்தக் கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.
ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும்போது, அவருண்ணுவது தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால், ஞானிகளென்றே உண்மையாக அறியவேண்டும்.
ஜீவகாருண்ய ஒழுக்கம் (Part-1)
Subscribe