இலங்கையில், சத்திய தருமச் சாலையும், சத்திய ஞான கோட்டமும் திறப்பு விழா குறித்த விபரம்.
இலங்கை சாவகச்சேரியில் உள்ள வேம்பிராய் கிராமத்தில் சத்திய தருமச் சாலை திறப்பு விழாவும், பின்னர் 2010ம் ஆவணி மாதப் பூச நாளில், சத்திய ஞான கோட்டமும் திறக்கப்பட்டு அருட்பெருஞ்ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது. எந்தெந்த தேதிகளில் இது குறித்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை திரு கேதீஸ்வரன் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
|
29.6.2010 செவ்வாய் |
மேட்டுக்குப்பத்தில், சித்திவளாகத்தின் பின்புறம் அமைந்துள்ள திருச்சி திருவானைக்கோவில் சன்மார்க்க அன்பர் திரு ஷண்முகம் அவர்களது கட்டிடத்தில் இலங்கை சாவகச் சேரிக்குக் கொண்டு செல்லவுள்ள திருநிலைக் கண்ணாடியின் முன் ஒரு மண்டலம் (48 நாட்கள்) திரு அருட்பா முற்றோதல் நடைபெற உள்ளது. |
|
15.8.2010 ஞாயிறு |
திரு நிலைக் கண்ணாடி வழிபாடு நிறைவுபெறல். |
|
16.8.2010 திங்கள் |
திரு நிலைக் கண்ணாடியுடன், மருதூர், கருங்குழி, தீஞ்சுவை நீரோடை, மேட்டுக்குப்பம், வடலூர் சத்திய தருமச் சாலை, வடலூர் சத்திய ஞான சபை ஆகியவற்றில் வழிபாடு செய்து சுற்றி வரல் |
|
17.8.2010 செவ்வாய் |
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருநிலைக் கண்ணாடியுடன் கொழும்பு அடைதல். திரிகோணமலை சென்று பின்னர் திருக்கோணேஸ்வரத்தில் வழிபாடு செய்தல் |
|
18.8.2010 புதன் |
மன்னார் சென்று திருக்கேத்தீஸ்வரத்தில் வழிபாடு செய்தல்.இரவு – சாவகச்சேரி வந்தடைதல் |
|
19.8.2010 வியாழன் |
ஜீவகாருண்யம்,உயிரிரக்கம் பற்றி 3 இடங்களில் ஊர்வலம் யாழ்ப்பாணம்காலை 8.00 மணிக்கு இந்துசமயப்பேரவையில் துவங்கி, சிவதொண்டன் நிலையத்தில் நிறைவடைதல். |
|
20.8.2010 வெள்ளி |
அளவெட்டி-காலை 8.00 மணிக்கு ஊர்வலம் கேணிக்கரை-வைரவர் கோயிலில்துவங்கி கும்பிளாவளை பிள்ளையார் கோவிலில் நிறைவடைதல் .இரவு – செல்வச் சன்னிதி-திரு அருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம். |
|
21.8.2010 சனி |
சாவகச்சேரி..- ஊர்வலம் சிவன் கோவிலில் துவங்கி வேம்பிராய் பூத விராயர் கோயிலில் நிறைவு. |
|
22.8.2010 ஞாயிறு |
வேம்பிராய்-காலை – குருவணக்கம். எல்லாம் வல்ல அருட்தந்தை ராமலிங்கப் பெருமானை சிங்காதனத்தில் வைத்து..வணங்குதல். திரு அருட்பா பாராயணம் மற்றும் வழிபாடு செய்தல் |
|
23.8.2010 திங்கள் |
வேம்பிராய்-சத்திய தர்மச்சாலை திறப்பு விழா. |
|
24.8.2010 செவ்வாய் |
சத்திய ஞான கோட்டத்தின் திருக்கதவம் திறப்பு விழா பின் ஜோதி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலவறை வழிபாடு.. நாள் ஒன்றுக்கு 6 முறை என்ற வீதத்தில் 8 நாட்கள் வழிபாடு 48 முறை நடைபெறல். |
|
31.8.2010 செவ்வாய் |
நிலவறை வழிபாடு நிறைவு செய்தல் இரவு 8 மணிக்கு-யந்திரப் பிரதிஷ்டை செய்தல் |
|
1.9.2010 புதன் |
காலை 5.00 மணிக்கு திருநிலைக் கண்ணாடி வழிபாடு செய்து ஜோதி பீடத்தில் பொருத்துதல். பகல் 12 மணிக்குஜோதி பீடம், சிற்சபை, பொற்சபை ஆகியவற்றிற்கு நீராட்டி முடிவைத்தல். |
|
2.9.2010- 5.9.2010 |
சத்திய ஞான கோட்டத்தில் உள்ளேயிருந்து வழிபாடு செய்தல் .திரு அருட்பா பாராயணம் செய்தல். |
|
6.9.2010 திங்கள் |
அதிகாலை 2.00 மணிக்கு-விண்ணப்பங்கள் செலுத்தல் காலை 5.00 மணி அருட்பெருஞ் ஜோதி தீபம் ஏற்றுதல் காலை 6.00 மணி – ஜோதி வழிபாடு துவக்கம். 7 திரைகளை நீக்கி ஜாதி மத வேறுபாடின்றி ஜோதி தரிசனம் காண்பித்தல். காலை மணி 10 மதியம் 1 மணி மாலை 7 மணி மற்றும் இரவு 10 மணி- வடலூரில் சத்திய ஞான சபையில் திரை நீக்கி 6 முறை அருட்பெருஞ் ஜோதி தரிசனம் காண்பிப்பது போன்று காண்பித்தல். ஒரு புறம் ஜோதி தரிசனம் மறு புறம் விசேட நிகழ்ச்சிகள்… சொற்பொழிவு..வள்ளலார் வரலாற்று நாடகம் திரு அருட்பா நடனம் மழையூர் சதாசிவம் இசைக் கச்சேரி.மறுநாள் (7.9.2010) காலை 6.00 மணி வரை நடைபெறும் |
|
7.9.2010 செவ்வாய் |
காலை 6.00 மணி-ஜோதி தரிசனம் மதியம் 2.00 மணி முதல் 6.00 மணி வரை-கெளரவிப்பு நிகழ்ச்சி.- மழையூர் சதாசிவம் கச்சேரி நடைபெறும். .பின் நிறைவு விழா.இறை வணக்கம். |
இந்த வைபவம் முடிவடைந்த பின்னர். ஒவ்வொரு மாதப் பூசத்தின் போதும்
வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்திலும் அருட்பெருஞ் ஜோதி வழிபாடு
நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும்
இருந்தும், மற்றும் பல்வேறு நாடுகளிலுமிருந்தும் அனைவரும் கலந்து
கொண்டு இவ்விழாவினைச் சிறப்பித்து, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்
அருள் நலம் பெறும்படி தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
குறிப்பு: இலங்கையில் நடைபெறவுள்ள மேற்படி வைபவத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், தங்களது பெயரினை ஏற்கனவே வெளியிட்டுள்ள நோட்டீஸில் கண்ட கீழ்க்காணும் அன்பர்களிடம் முன் கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பாஸ்போர்ட் முதலானவை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இரவு தங்குமிடங்களில் உபயோகத்திற்கென பெட்ஷீட் முதலானவை கொண்டு வரவேண்டும்.
17.8.2010 அன்று சென்னையில் இருந்து கிளம்பும் விமானம் மூலம், திருநிலைக் கண்ணாடியுடனேயே இலங்கைக்குப் பயணம் செய்ய விரும்புவோர், இலங்கையின் முக்கிய ஸ்தலங்களான திருக்கோணேஸ்வரம், திருக்கேத்தீஸ்வரம், திண்ணியாறு முதலிய இடங்களையெல்லாம் காண வேண்டும். அவர்கள், தொடர்ந்து 17.8.2010 முதல் விசேடம் நிறைவுறும் நாளான 7.9.2010 முடிய இலங்கையில் தங்கும் விதத்தில் தமக்குத் தேவையான உடமைகளையும் எடுத்து வரவேண்டும்.
இலங்கைக்கு வரும் நபர்களின் பெயர்கள் முன் கூட்டியே பதிவு செய்து வைத்துக் கொண்டால், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் அந்த அன்பர்களின் பெயர்களை (allotting duty) பணி ஒதுக்கீட்டில் இடம்பெறச் செய்து, விழா அழைப்பிதழிலும் அவர்களது பெயர் இடம்பெறச் செய்யலாம். எனவே, வருகை தரும் அன்பர்கள், உடனடியாக தமது பெயர்களை மேலே குறிக்கப்பட்ட நபர்களிடம் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இங்ஙனம்,
கனகசபாபதி கேத்தீஸ்வரன், கே, விஜயலக்ஷ்மி, கே.தயானந்தன்.