Maha Mandhirapeedam
மெய்ஞானத்தை அடையும் வழி-பகுதி-31


மெய்ஞானத்தை அடையும் வழி-31

ஞானத்தில் யோகம்


1) "ஜோ" என்று மூச்சை ஆழ்ந்து இழுத்து "தீ" என்று மூச்சை. அடிவயிறு வரை 3 நொடிகள் இழுத்து 3 நொடிகள் வெளியிட வேண்டும் (ஒரு நிமிடம் செய்யவும்)மூலாதாரம்
"ஜோ" என்று மூச்சை ஆழ்ந்து இழுத்து "தீ" என்று மூச்சை. நடுவயிறு வரை 2 நொடிகள் இழுத்து 2 நொடிகள் வெளியிட வேண்டும் (ஒரு நிமிடம் செய்யவும்)சுவாதிட்டானம்
"ஜோ" என்று மூச்சை ஆழ்ந்து இழுத்து "தீ" என்று மூச்சை. மேல்வயிறு வரை 1 நொடிகள் இழுத்து 1 நொடிகள் வெளியிட வேண்டும் (ஒரு நிமிடம் செய்யவும்)மணிப்பூரகம்

2) வலது பெருவிரலால் வலது நாசியையும் மோதிர விரலால் இடது நாசியையும் மூடிக்கொண்டு தாரக மந்திர முதல் இரண்டு வரிகளால் இடது நாசியை திறந்து மூச்சை இழுத்து அடுத்த இரண்டு வரிகளால் மூச்சை அடக்கி பிறகு வலது நாசியை திறந்து மகா மந்திரமாக மூச்சை வெளியிட வேண்டும் அடுத்ததாக வலது நாசி வழியாக மகா மந்திர முதல் இரண்டு வரிகளால் மூச்சை இழுத்து மூச்சை அடக்கி இடது நாசியை திறந்து தாரக மந்திரமாக மூச்சை வெளியிட வேண்டும். எப்போதும் மூச்சு பயிற்சியில் வலது நாசியில் மகா மந்திரமும் இடது நாசியில் தாரக மந்திரமும் மூச்சை இழுப்பதற்கும் வெளியிடுவதற்கும் பயன்படுத்தவும். இவ்வாறாக குறைந்த பட்சம் மூன்று சுற்றுகள் முறையிலிருந்து மூன்று நிமிடம் செய்க. ஒரு வரிக்கு இரண்டு நொடிகள் எடுத்து கொள்க.

3) பிறகு கைகளை மடியில் வைத்து "அருட்பெருஞ்ஜோதி" என்று கூறி மூக்கில் மூச்சை இழுத்து வாயின் மூலமாக "தனிபெருங்கருணை" என்று கூறி காற்றை வெளியேற்ற வேண்டும். மூன்று முறை செய்க எப்போதும் மூச்சை இழுக்கும் போது கற்பனையால் வார்த்தைகளை சொல்லவும்.

4) நீர் அருந்தவும்.(600ml 3 குவளை)

5) "நான் என்னை மன்னித்து விட்டேன்"
"நான் மற்றவர்களை மன்னித்து விட்டேன்"
"ஆண்டவர் என்னை மன்னித்து விட்டார்" என மூன்று முறை கூறவும்.

6) உச்சந்தலை முதல் கால் பெருவிரல் நுனிவரை கற்பனையாக கண்மூடி தியானித்து 10 முதல் 0 வரை கவுண்ட் டவுன் எண்ணவும். உடலை தளர்த்தி பிரபஞசம் தன் எதிரில் இருப்பதாக கற்பனை செய்க.

7) பிரபஞ்சத்தில் தன்னை தவிர அனைத்தும் இருப்பதாகவும் தான் மட்டும் தனியே பிரபஞ்சத்துக்கு வெளியே இருப்பதாகவும் கற்பனை செய்யவும். பிறகு பிரபஞ்சத்தில் இருக்கும் கீழ்கண்டவர்களை முன்னிறுத்தி வணங்கவும்.
தாயாரை தியானிக்கிறேன், வணங்குகிறேன்.
தந்தையாரை தியானிக்கிறேன், வணங்குகிறேன்.
கணவரை (அ) மனைவியை தியானிக்கிறேன், வணங்குகிறேன்.
குருவை தியானிக்கிறேன், வணங்குகிறேன்.
மதிப்புக்குரியவர்களை தியானிக்கிறேன், வணங்குகிறேன்.
வள்ளல்பெருமானை தியானிக்கிறேன், வணங்குகிறேன்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தியானிக்கிறேன், வணங்குகிறே
ன்.

8) நம் எதிரில் இருக்கும் பிரபஞ்சத்தை தலைக்கு மேல் கொணர்ந்து, "ஆண்டவர் தலையில் சஹாஸ்ராகாரத்தில் அருள்சக்தியை, அருளமுதத்தை இறக்குகிறார்" என்று கூறி பத்து முறை யோகதாரக மந்திரம் கூறுக.
(மகாமந்திரத்தால் மூச்சை இழுத்து தாரகமந்திரத்தால் மூச்சை வெளியிடுதல் யோக தாரகமந்திரம்)

பத்து முறை கூறியவுடன் அருள்சக்தி சஹஸ்ராகாரத்தில் நிரம்பி விட்டதாக கற்பனை செய்க.

கீழ்கண்ட ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொருமுறை யோக தாரகமந்திரம் கூறி கீழ்கண்டவாறு கூறி கற்பனை செய்யவும்.
சஹஸ்ராகாரத்திலிருந்து பெருமூளைக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
சஹஸ்ராகாரத்திலிருந்து சிறுமூளைக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
சஹஸ்ராகாரத்திலிருந்து தாலமஸ் சுரப்பிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
சஹஸ்ராகாரத்திலிருந்து ஐப்போ தாலமஸ் சுரப்பிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
சஹஸ்ராகாரத்திலிருந்து பிட்யுட்ரி சுரப்பிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
சஹஸ்ராகாரத்திலிருந்து பீனியல் சுரப்பிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
சஹஸ்ராகாரத்திலிருந்து முகுளத்திற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
சஹஸ்ராகாரத்திலிருந்து தண்டுவடத்திற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.


மீண்டும் பத்து முறை யோக தாரகமந்திரம் கூறி "ஆண்டவர் தலையில் சஹாஸ்ராகாரத்தில் அருள்சக்தியை, அருளமுதத்தை இறக்குகிறார் அங்கிருந்து ஆக்ஞா சக்கரத்திற்கு அருள் சக்தி செலுத்தப்படுகிறது ஆக்ஞா சக்கரம் அருள்சக்தியால் நிரப்பப்படுகிறது" என்று கூறவும். ஆக்ஞா சக்கரம் நிரம்பியதாக கற்பனை செய்யவும்.


கீழ்கண்ட ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொருமுறை யோக தாரகமந்திரம் கூறி கீழ்கண்டவாறு கூறி கற்பனை செய்யவும்.

ஆக்ஞா சக்கரத்திலிருந்து கண்களுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
ஆக்ஞா சக்கரத்திலிருந்து காதுகளுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
ஆக்ஞா சக்கரத்திலிருந்து மூக்குக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது
ஆக்ஞா சக்கரத்திலிருந்து வாய்க்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
ஆக்ஞா சக்கரத்திலிருந்து நாக்குக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
ஆக்ஞா சக்கரத்திலிருந்து உள்நாக்குக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
ஆக்ஞா சக்கரத்திலிருந்து பற்களுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
ஆக்ஞா சக்கரத்திலிருந்து ஈறுகளுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
ஆக்ஞா சக்கரத்திலிருந்து உமிழ் நீர் சுரப்பிகளுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.



மீண்டும் பத்து முறை யோக தாரகமந்திரம் கூறி "ஆண்டவர் தலையில் சஹாஸ்ராகாரத்தில் அருள்சக்தியை, அருளமுதத்தை இறக்குகிறார் அங்கிருந்து ஆக்ஞா சக்கரம் மூலமாக விசுத்தி சக்கரத்திற்கு அருள் சக்தி செலுத்தப்படுகிறது விசுத்தி சக்கரம் அருள்சக்தியால் நிரப்பப்படுகிறது" என்று கூறவும். விசுத்தி சக்கரம் நிரம்பியதாக கற்பனை செய்யவும்.

கீழ்கண்ட ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொருமுறை யோக தாரகமந்திரம் கூறி கீழ்கண்டவாறு கூறி கற்பனை செய்யவும்.

விசுத்தி சக்கரத்திலிருந்து தைராய்டு சுரப்பிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
விசுத்தி சக்கரத்திலிருந்து பாராதைராய்டு சுரப்பிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
விசுத்தி சக்கரத்திலிருந்து தைமஸ் சுரப்பிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது
விசுத்தி சக்கரத்திலிருந்து கழுத்திற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
விசுத்தி சக்கரத்திலிருந்து குரல் வளைக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
விசுத்தி சக்கரத்திலிருந்து குரல் நாணுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
விசுத்தி சக்கரத்திலிருந்து பேச்சு திறனுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
விசுத்தி சக்கரத்திலிருந்து பின்கழுத்திற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.


மீண்டும் பத்து முறை யோக தாரகமந்திரம் கூறி "ஆண்டவர் தலையில் சஹாஸ்ராகாரத்தில் அருள்சக்தியை, அருளமுதத்தை இறக்குகிறார் அங்கிருந்து ஆக்ஞா சக்கரம், விசுத்தி சக்கரம் மூலமாக அநாகத சக்கரத்திற்கு அருள் சக்தி செலுத்தப்படுகிறது அநாகத சக்கரம் அருள்சக்தியால் நிரப்பப்படுகிறது" என்று கூறவும். அநாகத சக்கரம் நிரம்பியதாக கற்பனை செய்யவும்.

கீழ்கண்ட ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொருமுறை யோக தாரகமந்திரம் கூறி கீழ்கண்டவாறு கூறி கற்பனை செய்யவும்


அநாகத சக்கரத்திலிருந்து மூச்சுக்குழலுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
அநாகத சக்கரத்திலிருந்து நுரையீரலுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
அநாகத சக்கரத்திலிருந்து உணவுக்குழலுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது
அநாகத சக்கரத்திலிருந்து இதயத்திற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
அநாகத சக்கரத்திலிருந்து முதுகிற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
அநாகத சக்கரத்திலிருந்து விலாவிற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
அநாகத சக்கரத்திலிருந்து வலது கைக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
அநாகத சக்கரத்திலிருந்து இடது கைக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
அநாகத சக்கரத்திலிருந்து தைமஸ் சுரப்பிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.


(கைகளிலிருந்து விஷம், மந்தம் விரல் நுனிகளில் உள்ள யோக கண்கள் மூலமாக வெளியேறுவதாக கற்பனை செய்க)


மீண்டும் பத்து முறை யோக தாரகமந்திரம் கூறி "ஆண்டவர் தலையில் சஹாஸ்ராகாரத்தில் அருள்சக்தியை, அருளமுதத்தை இறக்குகிறார் அங்கிருந்து ஆக்ஞா சக்கரம், விசுத்தி சக்கரம், அநாகத சக்கரம் மூலமாக மணிப்பூரக சக்கரத்திற்கு அருள் சக்தி செலுத்தப்படுகிறது மணிப்பூரக சக்கரம் அருள்சக்தியால் நிரப்பப்படுகிறது" என்று கூறவும். மணிப்பூரக சக்கரம் நிரம்பியதாக கற்பனை செய்யவும்.

கீழ்கண்ட ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொருமுறை யோக தாரகமந்திரம் கூறி கீழ்கண்டவாறு கூறி கற்பனை செய்யவும்.


மணிப்பூரக சக்கரத்திலிருந்து கல்லிரலுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மணிப்பூரக சக்கரத்திலிருந்து மண்ணீரலுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மணிப்பூரக சக்கரத்திலிருந்து கணையத்திற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது
மணிப்பூரக சக்கரத்திலிருந்து இறைப்பைக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மணிப்பூரக சக்கரத்திலிருந்து இறைப்பை நீர் சுரப்பிகளுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மணிப்பூரக சக்கரத்திலிருந்து முன்சிறுக்குடலுக்க்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மணிப்பூரக சக்கரத்திலிருந்து உதரவிதானத்திற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மணிப்பூரக சக்கரத்திலிருந்து நடுமுதுகிற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.



மீண்டும் பத்து முறை யோக தாரகமந்திரம் கூறி "ஆண்டவர் தலையில் சஹாஸ்ராகாரத்தில் அருள்சக்தியை, அருளமுதத்தை இறக்குகிறார் அங்கிருந்து ஆக்ஞா சக்கரம், விசுத்தி சக்கரம், அநாகத சக்கரம், மணிப்பூரக சக்கரம் மூலமாக சுவாதிட்டான சக்கரத்திற்கு அருள் சக்தி செலுத்தப்படுகிறது சுவாதிட்டான சக்கரம் அருள்சக்தியால் நிரப்பப்படுகிறது" என்று கூறவும். சுவாதிட்டான சக்கரம் நிரம்பியதாக கற்பனை செய்யவும்.

கீழ்கண்ட ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொருமுறை யோக தாரகமந்திரம் கூறி கீழ்கண்டவாறு கூறி கற்பனை செய்யவும்

.
. சுவாதிட்டான சக்கரத்திலிருந்து சிறுங்குடலுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
சுவாதிட்டான சக்கரத்திலிருந்து குடல்வாலிற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது
சுவாதிட்டான சக்கரத்திலிருந்து பெருங்குடலிற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
சுவாதிட்டான சக்கரத்திலிருந்து நாபிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
சுவாதிட்டான சக்கரத்திலிருந்து தொப்புள் பகுதிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
சுவாதிட்டான சக்கரத்திலிருந்து வலது சிறுநீரகத்திற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
சுவாதிட்டான சக்கரத்திலிருந்து இடது சிறுநீரகத்திற்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
சுவாதிட்டான சக்கரத்திலிருந்து நாபி சுக்கில பகுதிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.




மீண்டும் பத்து முறை யோக தாரகமந்திரம் கூறி "ஆண்டவர் தலையில் சஹாஸ்ராகாரத்தில் அருள்சக்தியை, அருளமுதத்தை இறக்குகிறார் அங்கிருந்து ஆக்ஞா சக்கரம், விசுத்தி சக்கரம், அநாகத சக்கரம், மணிப்பூரக சக்கரம் சுவாதிட்டான சக்கரம் மூலமாக மூலாதார சக்கரத்திற்கு அருள் சக்தி செலுத்தப்படுகிறது மூலாதார சக்கரம் அருள்சக்தியால் நிரப்பப்படுகிறது" என்று கூறவும். மூலாதார சக்கரம் நிரம்பியதாக கற்பனை செய்யவும்.

கீழ்கண்ட ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொருமுறை யோக தாரகமந்திரம் கூறி கீழ்கண்டவாறு கூறி கற்பனை செய்யவும்

.
. மூலாதார சக்கரத்திலிருந்து சிறுநீரக குழாய்களுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மூலாதார சக்கரத்திலிருந்து சிறுநீர் பைக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது
மூலாதார சக்கரத்திலிருந்து மலக்குடலுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மூலாதார சக்கரத்திலிருந்து சுக்கில/சுரோணித சுரப்பிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மூலாதார சக்கரத்திலிருந்து சுக்கில/சுரோணித குழாய்க்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மூலாதார சக்கரத்திலிருந்து விந்துப்பைக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மூலாதார சக்கரத்திலிருந்து புரோஸ்டட் சுரப்பிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மூலாதார சக்கரத்திலிருந்து ஆண்/பெண் குறிக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மூலாதார சக்கரத்திலிருந்து வலது காலுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.
மூலாதார சக்கரத்திலிருந்து இடது காலுக்கு அருள்சக்தி பரவுகின்றது, விஷம் மந்தம் வெளியேற்றப் படுகின்றது.


(கால்களிலிருந்து விஷம், மந்தம் விரல் நுனிகளில் உள்ள யோக கண்கள் மூலமாக வெளியேறுவதாக கற்பனை செய்க)

"உடலில் உள்ள விஷம் மந்தம் அனைத்தும் மூச்சுக்காற்று, வியர்வை, சிறுநீர், மலத்தின் மூலமாக வெளியேற வேண்டியது. உச்சி முதல் கால் பெரு விரல் நுனி வரை உள்ள அனைத்து சக்கரங்களும் உப உறுப்புக்களும் அருள் சக்தியால் நிரப்பப்படுகிறது. உடல் சுத்த தேகமாக மாற்றப்படுகிறது." என்று மூன்று முறை கூறவும்.

"உடலில் உள்ள அருள்சக்தி வீணாக வெளியேறாமல் காப்பிடுகிறேன்" என்று மூன்று முறை கூறி உச்சி முதல் உடலை கைகளால் காப்பிடுவது போல் பாவனை செய்யவும்.

9) யாம் பெற்ற அருள்சக்தியை என் தாயாருக்கு அர்ப்பணிக்கிறேன், தியானிக்கிறேன்,வணங்குகிறேன், நன்றி செலுத்துகிறேன்.
யாம் பெற்ற அருள்சக்தியை என் தந்தையாருக்கு அர்ப்பணிக்கிறேன், தியானிக்கிறேன்,வணங்குகிறேன், நன்றி செலுத்துகிறேன்.
யாம் பெற்ற அருள்சக்தியை என் கணவர்/மனைவி அர்ப்பணிக்கிறேன், தியானிக்கிறேன்,வணங்குகிறேன், நன்றி செலுத்துகிறேன்.
யாம் பெற்ற அருள்சக்தியை என் குருவுக்கு அர்ப்பணிக்கிறேன், தியானிக்கிறேன்,வணங்குகிறேன், நன்றி செலுத்துகிறேன்.
யாம் பெற்ற அருள்சக்தியை என் மதிப்புக்குரியவர்களை அர்ப்பணிக்கிறேன், தியானிக்கிறேன்,வணங்குகிறேன், நன்றி செலுத்துகிறேன்.
யாம் பெற்ற அருள்சக்தியை என் வள்ளல்பெருமானுக்கு அர்ப்பணிக்கிறேன், தியானிக்கிறேன்,வணங்குகிறேன், நன்றி செலுத்துகிறேன்.
யாம் பெற்ற அருள்சக்தியை என் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன், தியானிக்கிறேன்,வணங்குகிறேன், நன்றி செலுத்துகிறேன்.


10) சத்திய விண்ணப்பம்.

மேற்கண்ட முறையில் உடலை பக்குவப்படுத்துவது யோக தாரக மந்திரத்தை பிண்டத்தில் பயன்படுத்தும் முறை ஆகும். இது ஞானத்தில் யோகம் வழிபாட்டு முறையில் முதல் பகுதியாகும். இந்த முறையில் செய்யும் போது ஆரம்பத்தில் கற்பனையாக தெரிந்தாலும் 27 நாட்கள் தொடர்ந்த பயிற்சிக்கு பிறகு உடலில் அருள் சக்தி இறங்குவதும் விஷம் மந்தம் வெளியேறுவதும். உணர முடியும்
இந்த முறையில் உடலில் உள்ள வியாதிகளையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இதய வியாதி உள்ளவர்கள் இதயத்திற்கு சக்தி செலுத்தும் போது ஒரு முறைக்கு பதிலாக மூன்று முறை யோக தாரகமந்திரம் கூறி இதய நோய், வால்வு பிரச்சனை, இரத்தக்குழாய் அடைப்பு சரியாக வேண்டும் என்று கட்டளை இடவும். இதை போன்றே சர்க்கரை வியாதியஸ்தர் கணையத்திலும், காமாலைக்கு கல்லீரலிலும், அல்சருக்கு, இறைப்பையிலும் இது போல் மற்ற வியாதிகளுக்கு அந்த அந்த உறுப்புக்களிலும் கட்டளை இடவும். இந்த பயிற்சியை தொடர்ந்து தினசரி ஒருமுறை இடை விடாமல் 108நாட்கள் செய்தால் பலன் கிடைக்கும்.

(தொடரும்)

ஜோதிமைந்தன் சோ.பழநி
மகாமந்திரபீடம்,திரியம்பல விண்ணகர திருமாளிகை
14,எஸ்.ஆர்.பி. நகர்,காரை,இராணிப்பேட்டை,
வேலூர் மாவட்டம்
தமிழ்நாடு
பின் கோடு :632 404
ஈமெயில்: mahamandhirapeedam@yahoo.com
mahamandhirapeedam@gmail.com
jyothimaindhan@gmail.com
செல்:9942062598,
04172-275071.





6 Comments
hariharan_82
A very good explanation. Please continue Jothi maindan ayya.
Monday, November 30, 2009 at 08:19 am by hariharan_82
nandakumar_90
நல்ல கருத்துக்கள் மற்றும் சுவாசப் பயிற்சி முதலானவற்றை இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லியமைக்கு நன்றி.
தொடர்ந்து விரிவான விளக்கம் அளியுங்கள் அய்யா.
நன்றி
Monday, November 30, 2009 at 08:50 am by nandakumar_90
P Sujatha
கருணைமிகு ஜோதி மைந்தன் அய்யா,
உங்களின் சன்மார்க்க பணிக்கு வந்தனம்.அய்யா,தவறாக எண்ண வேண்டாம்.உங்களின்சன்மார்க்க கட்டுரை படைப்புகளில் சில குறைபாடுகள் எனக்கு தோன்றுகிறது.நீங்கள் புற சன்மார்க்க செய்திகளை தான் அதிகமாக சொல்லுவதாக எண்ணுகிறேன்.
புற சன்மார்க்கவழிபாடு பூஜை நீங்கள்செய்வதேன் ?.நிறைய வீடியோ ப்ரோக்ராம் சேதிகளை வெளிபடுத்துவதன் நோக்கம் தான் என்ன?உங்களின் சுத்த சன்மார்க்க பணி தான் என்ன?உங்களின் பணிகள் அனைத்தும் புற வழிபாடு முறை போல இருக்கிறது?
அழகான கோலத்துடன் யாகம் செய்வது போல முன்னால் தீயை வளர்த்து எல்லாம் புற வெளிப்பாடாக தெரிகிறது. தவறா இருந்தால் மன்னிக்கவும்.உங்கள் கருத்து படி அகவழிபாடு தான் என்ன?.கொஞ்சம்
சொல்லுங்க?நீங்கள் செய்யும் புற வழிபாடு தேவையா? என எண்ணுகிறேன்.உங்களுக்கு ஜோதி மைந்தன் என்ற பெயர் வர காரணம்
உங்களின் அக சன்மார்க்கத்தினாலா?இல்லை புற வழிபாடு செயலுக்கா?உங்களின் பல கருத்துகள் சரியாய் இருக்கிறது.எனினும் பல புரியல?கணத்தில் யோகம்னு புதுசா கட்டுரை ஆரம்பித்து இருப்பதாய் தெரிகிறது.மகாமந்திரபீட அன்பர்களுக்கு என ஆரம்பிக்காமல் உங்கள் பெயர சொல்லி ஆரம்பித்துள்ளேன்.சரியான விளக்கத்தை சொல்லிட்டு அடுத்த பகுதி போடுங்கள் அய்யா. என்றும் உங்கள் விரும்பி,வள்ளலார் கருணையுடன்,அருள்ஜோதி.
Wednesday, December 2, 2009 at 03:42 am by P Sujatha
P Sujatha
ஒரு தவறு அய்யா.ஞானத்தில் யோகம்னு அடுத்த கட்டுரை.......
Wednesday, December 2, 2009 at 04:04 am by P Sujatha
S Palani
கருணைமிகு நம்மவீர் வந்தனம்,
தங்களின் சன்மார்க்க ஆர்வத்தை மிகவும் வரவேற்கிறோம். சில முக்கிய உயிர்துடிப்பான கருத்துக்கள்,சந்தேகங்களுக்கு ஒரு வரி அல்லது ஒரு வார்த்தை பதிலாக அமைந்து விடுகின்றது.அது போன்ற கருத்துக்களை படக்காட்சி மூலமாக வெளிப்படுத்துவது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் படக்காட்சி வெளியிடுகிறோம். எமது சுத்த சன்மார்க்க பணி என்பது இல்லறத்தாரின் வாழ்க்கையில் முழுமையாக சன்மார்க்கத்தை பின்பற்றும் தன்மையை ஏற்படுத்துவது.வள்ளல் பெருமான் அவர்கள் இல்லறத்தாரும் மரணமிலாப்பெருவாழ்வு அடையலாம் என்று ஞானசரியையில் வெளிப்படுத்துகிறார்.அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதின் விளக்கமே நமது கட்டுரைகளின் வெளிப்பாடு.பெருமான் அவர்கள் ஒருஜாம நேரத்தில் இறைதரிசனம் பெறலாம் என்றார்.அதற்கான பயிற்சிநிலையே யாம் செய்கின்ற வழிபாட்டுமுறைகள் மற்றும் ஆயத்தங்கள் எனக்கொள்க.எமது வழிகாட்டுதல்கள் அனைத்தும் தினசரி அதிகபட்சமாக ஒருஜாம நேரமும்(மூன்றுமணிநேரம்)குறைந்த பட்சம் ஒரு நாழிகைநேரமும்(24 நிமிடங்கள்)மட்டும் வழிப்பாட்டுக்கு ஒதுக்கும் வாய்ப்பு பெற்ற ஆன்மீக ஆர்வலர்களுக்கு மட்டுமே ஏற்புடைத்து எனக்கொள்க.தமது வாழ்க்கையையே சன்மார்க்கத்திற்கு அர்ப்பணித்த சாதுக்களுக்கு எமது மூலமாக வள்ளல் பெருமான் யாதும் வெளிப்படுத்தவில்லை.பெருமான் அவர்கள் இல்லறத்தார்க்கு தனியாகவும் துறவறத்தார்க்கு தனியாகவும் நித்திய கரும விதி வகுத்தவர்.எனவேஅனைத்தையும் ஒன்றாக நினைத்து மனசஞ்சலம் அடைய வேண்டாம்.
வள்ளல் பெருமான் அவர்கள் ஒரு ஜாமநேரத்திற்கு அதிகமாக மகாமந்திரம் கூறினால் நமது ஸ்தூல உடல் தாங்காது என்கிறார்.அதையே அடிப்படையாகக் கொண்டு யாம் எமது வாழ்க்கையில் செய்த முயற்சியின் பலனாக. கடந்த 10-12-1995ல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எம்மை தமது அன்புமகனாக அன்பர்கள் சூழ்ந்திருக்கையில் அங்கிகரித்து தமது நேரடி அருள்சக்தியை வழங்கினார். வள்ளல் பெருமான் அவர்கள் அனுபவங்களை வாரி வழங்கி அனுபவ வெளிப்பாடுகளின் சாராம்சங்களை வெளிப்படுத்த அனுமதியும் வழங்கி அதை ஜோதிமைந்தன் என்ற பெயரால் வெளீயிட ஆசியும் அனுமதியும் ஜூன் 2000ல் வழங்கி பணித்தார்.இந்த பெயருக்கு எம்மை முழுத்தகுதியுடையவனாக உருவாக்கிக் கொள்ள வள்ளல் பெருமான் கருணையால் முயற்ச்சித்துக் கொண்டு இருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் புதுப்புது அன்பர்கள் சன்மார்க்கத்தை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் படிநிலை உயரும்பொருட்டு தினசரி ஞானத்தில் சரியை வழிபாட்டுமுறையும், பூச தினத்தில் ஞானத்தில் கிரியைவழிபாட்டு முறையும் செய்து அவர்களுக்கு நேரடி அனுபவத்தை ஏற்படுத்தி வருகிறோம். ஞானத்தில் யோகம் வழிபாட்டு முறையை பக்குவ நிலை வந்தவர்களுக்கு தனித்தனியாக வழங்கி வருகிறோம். அகவழிபாடாக கருதும் ஞானத்தில் யோகம் பயிற்சியில் கிடக்கும் அனுபவத்தில் ஒரு நொடி அனுபவத்தை ஓராயிரம் பக்கங்கள் எழுதினாலும் முழுமையாக விவரிக்க இயலாது. எனவே ஸ்தூல உடலை காப்பாற்றும் முறையை மட்டும் வள்ளல் பெருமானின் அனுமதி பெற்று கட்டுரையாக வெளியிட்டோம்.
அன்புகூர்ந்து இந்த கருத்துக்களை மனதில் இருத்தி அனைத்து கட்டுரைகளையும் மீண்டும் ஒருமுறை வரிசைக்கிரமமாக படித்து பார்க்கவும். சரியான விளக்கம் கிடைக்கும் என நம்புகிறோம். அப்போதும் குழப்பமாக இருப்பின் மீண்டும் சந்தேகங்களை தெரிவிக்கவும். அதன் விளக்கமே அடுத்த கட்டுரையாக அமையும்.
என்றென்றும் சன்மார்க்கப்பணியில்
ஜோதிமைந்தன் சோ. பழநி.
Thursday, December 3, 2009 at 20:17 pm by S Palani
P Sujatha
கருணைமிகு ஜோதிமைந்தன் அய்யா,
உங்கள் படைப்பை தொடருங்கள்.
Saturday, December 5, 2009 at 22:36 pm by P Sujatha