Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
பிரபஞ்சத்தின் மின்காந்த அலைகளும் மனிதனின் எண்ண அலைகளும் பாகம்-III
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பிரபஞ்சத்தின் மின்காந்த அலைகளும் மனிதனின் எண்ண அலைகளும் பாகம்-3

எல்லாம் வல்ல திருவருட் பிரகாச வள்ளல் பெருமானின் அருள்நெறியானது சாதாரண மனித நிலையில் இருக்கும் ஒரு ஆன்மாவை ஆன்மீகத்தின் உயர்ந்த நிலையில், வார்த்தைகளால் விவரிக்க இயலாத மரணமில்லாப் பெருவாழ்விற்கு அழைத்துச் செல்லும் ஞானநெறி என்றால் அது மிகையாகாது.
உதாரணத்திற்கு: அருளியியல் வாழ்வு என்றால் என்ன? என்பதை அவருடைய முதல் திருமுறையில் காணலாம்.
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
இப்பாடலில் உள்ள வரிகளில் உலகியல் வாழ்வில் வாழும் ஒரு சாதாரண மனிதன், அருளியல் வாழ்க்கையில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாகக் கூறுகிறார்,
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் என்று கூறிய வள்ளல் பெருமானார் அந்த நெறி அருள்நெறியே- ஜீவகாருண்ய நெறியே என்று ஆறாம் திருமுறையில் விளக்கம் அளிக்கிறார். இதுமட்டுமல்ல சண்முக மணி என்றாலும் கந்தவேலே என்றாலும், ஆதிசிவம் என்றாலும், வேறு எப்படி அழைத்தாலும் அதுவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே குறிக்கிறதாம்.
பெருகியபேர் அருளுடையார் அம்பலத்தே நடிக்கும்
பெருந்தகை என் கணவர் திருப்பேர் புகல் என்கின்றாய்
அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாரா
யணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவம் என்பேன்
பருகுசதா சிவம் என்பேன் சத்திசிவம் என்பேன்
பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன்
துருவுசுத்தப் பிரமம் என்பேன் துரியநிறை என்பேன்.
ஆகவே சன்மார்க்க அன்பர்கள் வள்ளல் பெருமானார் பாடிய பாடல்களில் உள்ள உண்மை நிலையை நன்கு அறிய வேண்டும். அவருடைய பாடல்கள் ஆரம்ப நிலையையும் முடிவு நிலையையும் ஒருங்கிணைத்துப் பாடிய பாடல்களாகும். இதனை நன்கு உணராமல் வள்ளல் பெருமானார் எழுதியப் பாடல்களைத் தரம் பிரிப்பது, ஆறாம் திருமுறை மட்டுமே உயர்ந்தது என்று சொல்வதெல்லாம் ஆன்மீகத்தின் முழு பக்குவமின்மையைத் தெரிவிப்பதாம்.

நிற்க, எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தன்னுடைய மனதை இணைக்கத் தெரிந்தவர்களுக்கு மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டுவது உறுதி என்பதை சென்ற கட்டுரையில் பார்தோம். ஆனால், இது பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு மட்டுமே பொருந்துவதாம். நான், நீ என்ற பேதங்களை வார்த்தைகளால் மட்டும் இல்லாமல் உணர்வுகளில் கூட பேதமில்லாமல் வாழ்ந்து வரும் ஞானயோகிகளுக்கு மரணமில்லாப் பெருவாழ்வு என்பது ஒரு சாதனத்தின் மூலம் அடையக் கூடிய ஒரு பேறு இல்லையாம். சாதகன் என்ற மனித நிலையில் இருந்து கொண்டு மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டாதாம். சாதனங்கள் மூலம் மரணமில்லாப் பெருவாழ்வை நோக்கி வாழ்ந்து வருவதாலும் மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டாதாம்.
மரணமில்லாப் பெருவாழ்வு என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே தரக்கூடிய இறைநிலையாம். இந்நிலையை அந்நிலையில் இருந்து உணருவதே உபாயமாம். (இறைநிலையறிந்து இறைமயமாதல்) இதனை ஜோதி நிலையை அறிந்து ஜோதி மயமாதல் எனலாம் அல்லது பிரபஞ்ச சக்தியுடன் மனதை இணைத்துக்கொள்ளல் எனவும் கூறலாம்.

உதாரணமாக, பிரபஞ்சத்தின் அதிர்வு அலைகள் அனைத்தும் தாவரங்கள், மிருகங்கள் மற்றும் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்றன. நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ இவைகள் நம்முடைய உலகியல் வாழ்வையும், அருளியல் வாழ்வையும் தீர்மானிக்கின்றன.
ஆனால் இவை அனைத்தையும் நம்முடைய புறக் கண்களால் பார்க்க இயலாது. உதாரணத்திற்கு நாம் வானத்தில் காணும் சிவப்பு வண்ணம் இப்பிரபஞ்சப் பேராற்றலில் ஒரு நொடியில் 400 பில்லியன் அதிர்வுகளால் நிகழ்பவை. இதுபோல எண்ணற்ற நிகழ்வுகள் ஒவ்வொரு நொடியும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆகவே பிரபஞ்சத்தின் மின் காந்த அலைகளுக்கும் நம்முடைய எண்ண அலைகளுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்க முடியாது.
உதாரணத்திற்கு, திருவருட்பாவில் வள்ளல் பெருமானார் இதனை :

உலகநிலை முழுதாகி ஆங்காங்குள்ள
உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகி.... மகாதேவ மாலை
என்ற பாடல் மூலமும்
வித்தாகி முளையாகி விளைவதாகி
விளைவிக்கும் பொருளாகி மேலுமாகி....
என்ற பாடல் மூலமும்
அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்
அளவாகி அளவாத அதீத மாகி.....
விளக்குகிறார்.
பொதுவாக, கோள்களின் மின் காந்த அலைகளுக்கும் மனிதனின் எண்ண அலைகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பது அறிவியல் விஞ்ஞானிகளின் கருத்தாகும். ஆனால் நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும் மற்றும் ஆன்மீகப் பெரியோர்களும் கோள்களுக்கும் மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதைப் பல வழிகளில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.
உதாரணத்திற்கு, சூரியன் மற்று சந்திரன் மூலமாக கிடைக்கும் ஒளிக் கதிர்கள் மற்றும் மின் காந்த அலைகளால் மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் உயிர் வாழ்கின்றன. மேலும் சந்திரனின் மின் காந்த அலைகள் அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் அதிகமாக இருப்பதனால் மனநிலை சரியில்லாதவர்கள் அவதியுறும் நிலையும் ஏற்படுகிறது. இந்த இரண்டு கிரகங்களையும் புறக்கண்களால் பார்க்க முடியும்.
ஆனால் புறக்கண்களால் பார்க்க முடியாத கிரகங்களும் இருக்கின்றன அல்லவா! அவைகளால் நம்முடைய எண்ணங்கள் மாற்றம் அடைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன அல்லவா! மேலும் இந்த ஏழு கிரகங்கள் மூலம் தன்னுடைய ஐம்பெரும் தொழில்களையும் செய்து, பக்குவப்பட்ட மனிதர்களுக்கு தன்னுடைய ஜோதி தரிசனம் மூலம் மரணமில்லாப் பெருவாழ்வையும் அளிக்க முடியும் அல்லவா!
ஏனெனில் மாயையை உண்டாக்குவதும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையே! மாயையை நீக்குவதும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!

இதனை வள்ளல் பெருமானே உணர்த்துகிறார்.

விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
என்றும்
திரை மறைப்பெல்லாம் தீர்த்து ஆங்காங்கே
அரசுறக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி
தோற்றமா மாயைத் தொடர்பறுத்து அருளின்
ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி
சுத்தமா மாயைத் தொடர்பறுத்து அருளை
அத்தகை காட்டும் அருட்பெருஞ்ஜோதி
வெருள்மன மாயை வினைஇருள் நீக்கிஉள்
அருள் விளக்கேற்றிய அருட்பெருஞ்ஜோதி...
ஆகவே அருள் விளக்கேற்றினால், மாயையினால் வரும் துன்பங்களும் வினையும் தீரும் என்பது சத்தியமே.
அருள் விளக்கேற்றினால் கிரகங்களாலும், ஊழ் வினையாலும் ஏற்படும் துன்பங்கள் நீங்கி பிறவிப்பயனை அடையலாம் என்று கூறினால் அது மிகையாகா.
இதனை நன்குணர்ந்த நம்முடைய முன்னோர்கள், சூரிய மண்டலத்தை மையமாக வைத்து நீள வட்டப் பாதையில் பல இலட்சக் கணக்கான நட்சத்திரங்கள் இருப்பதையும் அதனால் புவியில் ஏற்படும் கால மாற்றங்களையும் கண்டுணர்ந்து, அதற்கேற்ப கோள்களின் தன்மையையும் ஆராய்ந்துணர்ந்து, அதனை ராசி மண்டலமாகப் பிரித்து அந்த மண்டலத்திற்கு ஆதிக்கம் செலுத்தும் 27 நட்சத்திரங்களையும் கண்டுணர்ந்து, அவற்றில் ஒரு நட்சத்திற்கு 4 பாதங்களாக 27x 4 = 108 பாதங்களாக அமைத்து, அவற்றில் 12 ராசிக்கும் 9 x 12 = 108 ஆக அமைத்து ஒரு ராசிக்கு 9 பாதங்களாக அமைத்தனர்.
நிற்க, ராசி மண்டலத்தை கவனிக்கவும்.
மீனம்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கும்பம்
இராசி
மண்டலம்
கடகம்
மகரம்
சிம்மம்
தனுசு
விருச்சிகம்
துலாம்
கன்னி
இப்பொழுது பிரபஞ்சத்தின் மின்காந்த அலைகளுக்கு வருவோம். (ராசி மண்டலத்தின் விளக்கங்களை இத்துடன் முடித்துக்கொள்வோம்) ராசி மண்டலத்தைக் கீழ் வருமாறு இரண்டாகப் பிரித்தால் (மேலும், கீழும் உள்ள கட்டங்களை இணைத்தால்) கீழ் வருமாறு அமையும்.
கும்பம்
மீனம்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
மகரம்
தனுசு
விருச்சிகம்
துலாம்
கன்னி
சிம்மம்
இந்த இடங்களுக்கு உள்ள அதிபதிகளைப் பாருங்கள்:
சனி
குரு
செவ்வாய்
சுக்கிரன்
புதன்
சந்திரன்
சனி
குரு
செவ்வாய்
சுக்கிரன்
புதன்
சூரியன்
இதில் புதுமை உள்ளது! சற்று நன்றாக கவனியுங்கள்!....
கடகத்தில் சந்திரனும், மகரத்தில் சூரியனும் வரும் பொழுது தைப்பூசம் , இதிலும் ஒரு ஒற்றுமை உள்ளது. பூச நட்சத்திரத்திற்கு அதிபதி சனி- இங்கு சந்திரன் வரும்பொழுது மகரத்தில் சூரியன் இருக்கிறார். தை மாதம்- மகர மாதம். மகரத்திற்கு அதிபதியும் சனியே. பூசம் சனியின் பாதத்தில் வருகிறது. மகரமும் சனியின் சொந்த வீடாக அமைகிறது. நிற்க, இவ்விடங்களை நேராக இணைத்தால் அங்கு நடப்பது ஜோதி தரிசனம். இதுபோல் அகத்திலும் இவ்விடங்களை நேராக இணைத்தால் அங்கு ஜோதியைக் காணலாம். முதலில் புறத்தில் கவனியுங்கள்.

மீனம்
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கும்பம்
இராசி
கடகம்
(சந்திரன்)
மகரம்
(சூரியன்)
சிம்மம்
தனுசு
விருச்சிகம்
துலாம்
கன்னி
மகரத்திற்கு நேராகக் கடகம் ஏழாவது வீடு. இந்த ஏழு கட்டங்களையும் - மாயைத் திரைகளையும் ஒரே கோட்டில் இணைத்தால் ஜோதி தரிசனம் கிட்டும்.
மூலாதாரம்
சுவாதிஷ்டானம்
மணிபூரகம்
அனாகதம்
விசுக்தி
ஆக்ஞை
சகஸ்த்ரானம்
ஜோதி
சனி
குரு
செவ்வாய்
சுக்கிரன்
புதன்
சூரியன்
சந்திரன்
எனவே சனி, குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் மற்றும் சந்திரனின் மின் காந்த அலைகள் மனிதனின் எண்ண அலைகளில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றின் தாக்கத்தைப் போக்குவதற்கு அருள்ஜோதியைக் காண்பதே சரியான வழியாகும்.

திருமந்திரம் இதனை;

இருவினைஒப் பாகிமல பரிபாகம் பொருந்தல்
எத்தருணம் அத்தருணத் தியல்ஞான ஒளியாம்
உருவினையுற் றுள்ளகத்தும் பிரணவமே வடிவாய்
உற்றுவெளிப் புறத்தும்எழுந் துணர்த்திஉரைத் தருளும்..
இருவினை ஒப்பாகி என்பது தன்னுடைய நலம் போல் பிறரது நலத்தையும்-தீமையையும் உணருதல். மலபரிபாகம் என்பது மலவிருள் ஆணவம், கன்மம், மற்றும் மாயை நீங்குதல். இத்தகைய அவத்தைகள் நீங்கும் போது தான் ஞானஒளி குருவடிவாய் தோன்றி சிவ ஞானத்தைத் தந்தருளும் என்பது இப்பாடலின் பொருள்.
இதனை வள்ளல் பெருமானார்;
வெருள்மன மாயை வினைஇருள் நீக்கிஉள்
அருள் விளக்கேற்றிய அருட்பெருஞ்ஜோதி
ஆகவே வெருள்மன மாயை வினைஇருளினால் ஏற்படுகின்ற காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம், அகங்காரம்-மமங்காரம் நீக்குவதற்கு அருள்- கருணை- தயவு என்கிற விளக்கை ஒவ்வொருவரும் தங்கள் மனதில் ஏற்ற வேண்டும். அருள் விளக்கேற்றினால் இருள் நீங்கும். எனவே அருள் என்கிற விளக்கை- ஜீவ காருண்ய ஒழுக்கத்தை அனைவரும் தங்களுடைய வாழ்வில் ஏற்றினால் அதன் மூலம் அவர்களுடைய அனைத்துச் சக்கரங்களும் தூண்டப்பட்டு வார்த்தைகளால் அளவிட முடியாத அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு களித்து இறைருள் பெறுவார்கள்! இது யான் உரைக்கும் வார்த்தையல்ல! எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய வள்ளல் பெருமானார் உரைக்கின்ற சத்திய வார்த்தை.
மூலாதாரம்
சுவாதிஷ்டானம்
மணிபூரகம்
அனாகதம்
விசுக்தி
ஆக்ஞை
சகஸ்த்ரானம்
ஜோதி
சனி
குரு
செவ்வாய்
சுக்கிரன்
புதன்
சூரியன்
சந்திரன்
தொடரும்..,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தகவல் உதவி:
  1. எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங்கருணை
  2. The Theory Of Every Thing- Stephen W. hawking
  3. திரு. சிவ.ஜெயகுமார், கோயம்புத்தூர்
*****************