அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
பிரபஞ்சத்தின் மின்காந்த அலைகளும் மனிதனின் எண்ண அலைகளும் – பாகம்-II
கிரகங்களின் மின்காந்த அலைகளும் மனிதனின் எண்ண அலைகளும்
இதுமட்டுமல்ல மனிதர்கள் வாழ்வதற்காகவே இறையால் உருவாக்கப்பட்ட இந்தப் பூமிக்கிரகத்தில் மனிதர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அவனருளாலே உருவாக்கப்பட்டிருக்கின்றன. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயமும் இறையால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கின்றன. அகவல் வரிகளில் ( 338 – 512) இதனைக் காணலாம். விரிவஞ்சி இங்கு குறிப்பிடவில்லை.
நாள் என் செய்யும்: வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும்கொடுங்கூற்று என் செயும்- குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும்தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
கோளறு பதிகம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
என்று திருஞான சம்பந்த சுவாமிகள் கூறுவதையும் கோளறு பதிகத்தின் மூலம் காணலாம்.
உதாரணத்திற்கு ஒருவன் தன்னுடைய எண்ண அலைகளை உலகியல் சார்ந்தப் பகுதிகளில் மிக அதிக அளவில் செலவிடும் பொழுது அவனுக்குக் கிரகங்களின் மின்காந்த அலைகள் மிக அதிகமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே மனதை புருவமத்தியில் குவிப்பதன் மூலம் எதிர்மறையான சிந்தனைகளின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
பிரபஞ்சத்தின் மின்காந்த அலைகளும் மனிதனின் எண்ண அலைகளும் – பாகம்-II
கிரகங்களின் மின்காந்த அலைகளும் மனிதனின் எண்ண அலைகளும்
பிரபஞ்சத்தில் இருக்கும் அண்ட கோடிகள் அனைத்தும் மின் துகள்களால் ஆன அணுக்கூட்டங்களே ஆகும். இவ்வுலகத்தில் மட்டுமல்லாது அனைத்து அண்டகோடிகளிலும் மின் துகள்களான அணுக் கூட்டங்களே நிறைந்துள்ளன. எனவே மனித உடம்பில் இருக்கும் அணுக்களுக்கும் இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அணுக்களுக்கும் சம்பந்தம் உண்டு என்பதே நமது மெய்ஞ்ஞானம்.
விளக்கமாகக் கூறினால்: இப்பிரபஞ்சத்தில் கண்களால் பார்க்க முடியாத பல ஒளிக்கதிர்கள் உள்ளன. அல்ட்ரா வயலட்,( Ultra violet ) இன்ப்ரா ரெட் ( Infra red), எக்ஸ்ரே, (X-ray) காமா, ( Gamma) ரேடியோ மற்றும் பல ஒளிக்கதிர்கள் இருப்பதாக அறிவியல் கூறுகிறது. இவ்வளவு ஒளிக் கதிர்களையும் நாம், புறக் கண்களால் பார்க்க முடியாது. இது மட்டுமல்ல எதனையும் கண்களால் பார்த்தால் மட்டுமே நம்பும் பகுத்தறிவுவாதிகள் கூட ஒரு உண்மையை உணர வேண்டும்.
நாம் ஒவ்வொரு நாளும் 25000 மைல் தொலைவு அண்ட வெளியில் சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறோம். இவ்வுலகம் ஒரு மணிக்கு 64800 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. நம்முடைய அண்ட வெளி ஒரு நொடிக்கு 15 கோடி மைல் வேகத்தில் சுழன்று கொண்டு இருக்கிறது. ஆனால் எதுவுமே நம்முடைய புறக்கண்களுக்கும், நம்முடைய உணர்வுகளுக்கும் தெரிவதில்லை. பிரபஞ்ச அண்டத்தில் அசுர வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் இந்த அண்ட வெளியும் நமது புறக் கண்களுக்குத் தெரிவதில்லை. எவ்வளவு மாயை தோற்றத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் பாருங்கள்!
எனவே இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. காரணமில்லாத எவ்விதக் காரியமும் இல்லை எனலாம். அதிகமான மழையும், புயலும், சூறாவளியும் மற்றும் ஏனைய இயற்கைச் சீற்றங்களும் கூட கால நியதிக்கு உட்பட்டே நடக்கின்றன. ஐந்தொழில்கள் செய்யும் இறைவன் இவற்றையெல்லாம் கால நியதிக்கு ஏற்றவாறு செய்கிறார்.
படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ்ஜோதி காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ்ஜோதி அடக்கும் தலைவர்கள் அளவிலர் தம்மையும் அடர்ப்பற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி மறைக்கும் தலைவர்கள் வகைபல கோடியை அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை அருள்திறம் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி
அண்டகோடிகள் அனைத்தையும் படைத்த இறைவனுக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசைந்திடாது.
அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால் அருள்நலம் பரவுகென்று அறைந்த மெய்ச்சிவமே
இதுமட்டுமல்ல மனிதர்கள் வாழ்வதற்காகவே இறையால் உருவாக்கப்பட்ட இந்தப் பூமிக்கிரகத்தில் மனிதர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அவனருளாலே உருவாக்கப்பட்டிருக்கின்றன. பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயமும் இறையால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கின்றன. அகவல் வரிகளில் ( 338 – 512) இதனைக் காணலாம். விரிவஞ்சி இங்கு குறிப்பிடவில்லை.
மேலும் இன்றைய அறிவியல்- விஞ்ஞானத்தில் எட்ட முடியாத மரணமில்லாப் பெருவாழ்வையும் நம்முடைய சித்தர்கள், ஞானிகள் மற்றும் யோகிகள் பலரும் பெற்றிருந்தனர். உதாரணத்திற்கு மகான் சுப்ரமண்யர், மகான் அகஸ்தியர், மகான் நந்தி, மகான் திருமூலர், மகான் மாணிக்கவாசகர், மகான் பாபாஜி மற்றும் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் முதலானோர்களைக் கூறலாம். ஆனால் மரணமில்லாப் பெருவாழ்வை அருள்நெறி மூலம் அனைவரும் அடையலாம் என்று உரைத்தவர் வள்ளல் பெருமானார் ஒருவர் மட்டுமே என்றால் அது மிகையாகாது. இதனை ஞானசரியை பாடல்கள் மூலம் உணரலாம்.
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்.. இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே.. ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும் உத்தமசித்தியைப் பெறுவீர் சத்தியம் சொன்னேனே. அகமறியீர் அனகமறிந்தழியாத ஞான அமுத வடிவம் பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே... மரணம் என்றால் சமம் என்றும் ஓர் திரணமும் சம்மதியா சார்ந்திடும் அம்மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்.. பிறந்தபிறப்பிதில் தானே நித்தியமெய் வாழ்வு பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.. என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே. என்ற வரிகள் எல்லாம் மரணமில்லாப் பெருவாழ்வை அனைத்து மக்களும் பெறலாம். இதற்கு எவ்வித தடையுமில்லை என்பதை மிக ஆழமாக உணர்த்துகிறது. எனவே அருளியல் வாழ்வில் பக்குவம் பெற்ற அனைத்து ஆன்மாக்களுக்கும் மரணமில்லாப் பெருவாழ்வை எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்கிக்கொண்டிருக்கிறார் என்பது சத்தியமே. பக்குவம் வருவிக்கவே காலமும் நியதியும் இறையால் தோற்றுவிக்கப்பட்டன. வள்ளல் பெருமானார் இதனை:
காலமும் நியதியும் காட்டி எவ்வுயிரையும் ஆலுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி காலமே முதலிய கருவிகள் கலைவெளி ஆலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி -அகவல் இதனை வள்ளவர்: ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின். ( 484)
ஆகவே காலத்திற்கும், பிரபஞ்சத்திற்கும், மனித உயிர்களுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையே. உதாரணம்: சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சந்திரனின் மின் காந்த அலைகள் பௌர்ணமி, அமாவாசை நாள்களில் அதிகமாக இருப்பதையும் காண முடிகிறது. கடல் அலைகள் உயரத்திற்கு எழும்புகின்றன. மனிதனின் எண்ண அலைகளும் அவ்வித நாட்களில் மாறுதல் அடைகின்றன. மனநிலை சரியில்லாதவர்கள் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாள்களில் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகின்றனர். எனவே கோள்களின் மின்காந்த அலைகள் நம்முடைய எண்ண ஆற்றல்களை மாற்றும் வல்லமை கொண்டது என்றால் அது மிகையாகாது.
இதனை நமது பழங்கால முனிவர்கள், யோகிகள், சித்தர்கள் மற்றும் மகான்கள் கண்டுணர்ந்து மனிதனின் எண்ண அலைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவன் அருளியல் வாழ்விலும், உலகியல் வாழ்விலும் சிறக்க முடியும் என்று உலகிற்கு உணர்த்தினார்கள். இன்றைய நவீன விஞ்ஞானமும் இதனை ஏற்றுக்கொள்கிறது. இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு முதலிய நோய்கள் தியானம் மற்றும் யோகா செய்வதன் மூலம் குறைந்து வருவதையும் இப்பொழுது காண முடிகிறது.
இதுபோல மனிதனின் எண்ண அலைகள் மூலம் கிரகங்களின் மின்காந்த அலைகளைக் கூட மாற்றி அமைக்க முடியும். உதாரணத்திற்கு: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி போன்ற கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் ஒரு தனி மனிதனையும், அவனைச் சார்ந்து வாழ்கிற சமுதாயத்தையும் கூட மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டதாம். அதனால் தான் அருளாளர்களும் இதனை மாற்றி அமைக்க எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நாடினார்கள்.
கந்தர் அலங்காரம்:
நாள் என் செய்யும்: வினை தான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும்கொடுங்கூற்று என் செயும்- குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும்தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
( கந்தர் அலங்காரம் -38) என்று கூறுகிறார்.
கோளறு பதிகம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
என்று திருஞான சம்பந்த சுவாமிகள் கூறுவதையும் கோளறு பதிகத்தின் மூலம் காணலாம்.
ஆகவே கிரகங்கள், எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் ஐந்தொழில்கள் செய்வதற்குச் சாதகமாக கீழ்கண்டப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறதாம்.
சூரியன் -ஆன்மாவிற்கும், ( ஜீவாத்மா- பரமாத்மா)
சந்திரன்- அறிவுநிலைகள்- உலகியல் மற்றும் அருளியல்
புதன் - புத்தி மற்றும் எண்ண நிலைகளையும், - உலகியல் மற்றும் அருளியல் வாழ்வு
செவ்வாய் – இரத்தம், ஆற்றல் மற்றும் வீரிய நிலையையும்,
குரு - பக்தி மற்றும் உலக உயிர்கள் பற்றிய எண்ணத்தையும்,
சுக்கிரன் – உலகியல் ஆசையையும்/ அருளியல் வாழ்வு
சனி – சாந்த குணம், ஜீவகாருண்ய ஒழுக்கம்/ ராட்சச குணம், ஜீவகாருண்ய ஒழுக்கமின்மை
ஆகவே உயிர்கள் அனைத்தும் இறையை நோக்கி – ஜோதியை நோக்கி பயணத்தைத் தொடங்கும் பொழுது அவரவர்களின் பக்குவத்திற்கு ஏற்ப இறைவனே குருவாக வந்து அந்தந்த ஆன்மாவின் இருளை நீக்குவார். இதனை கீழ்வருமாறு காணலாம்.
நாடியின் உள்ளே நாதத் தொனியுடன் தேடியுடன் சென்றத் திருவினைக் கைக்கொண்டு பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு மாடி ஒருகை மணிவிளக் கானதே. - திருமந்திரம் மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தைசொல்லச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே! - தாயுமானவர் மருட்பகை தவிர்த்துஎனை வாழ்வித்து எனக்கே அருட்குரு ஆகிய அருபெருஞ்ஜோதி வெருள்மன மாயை வினைஇருள் நீக்கிஉள் அருள் விளக்கேற்றிய அருட்பெருஞ்ஜோதி ` -வள்ளலார் எனவே உலகியல் வாழ்வில் இருக்கும் நம்மவர்கள் இருளை நீக்கி அருள்விளக்கேற்ற எல்லாம் வல்ல ஜோதியை சரணடைய வேண்டியிருக்கிறதாம்.
பொதுவாகக் கிரகங்கள் ஒவ்வொருவரையும் பிடிப்பதில்லை, மனிதர்களின் எண்ண அலைகளுக்குத் தக்கவாறு கிரகங்களின் மின்காந்த அலைகள் அவர்களை ஆட்கொள்கிறது. சுருங்கக்கூறின் நம்மில் இருக்கும் அதிசூட்ம ஆன்மா நம்முடைய கரும விதியின் பயனாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு எண்ண அலைகளை ஏற்படுத்துகிறது.
உதாரணத்திற்கு ஒருவன் தன்னுடைய எண்ண அலைகளை உலகியல் சார்ந்தப் பகுதிகளில் மிக அதிக அளவில் செலவிடும் பொழுது அவனுக்குக் கிரகங்களின் மின்காந்த அலைகள் மிக அதிகமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே மனதை புருவமத்தியில் குவிப்பதன் மூலம் எதிர்மறையான சிந்தனைகளின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.
ஓடுங்குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்........ திருமந்திரம்.
எதிர்மறையான சிந்தனையைக் குறைத்தால் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் எழத்தொடங்கும். இதன் மூலம் மனிதனின் எண்ண சக்தியானது மெல்ல அதிகரித்து பிரபஞ்ச சக்தியுடன் தன்னைத் தொடர்புக்கொள்ள தயாராகும்.
எல்லையில்லா பிரபஞ்ச சக்தியுடன் தன்னுடைய மனதை இணைத்துக் கொண்டால் மாயையை வென்று மரணமில்லாப் பெருவாழ்வையும் மிக எளிதாகப் பெறலாம். இதனை விளக்குவதற்காகவே ஸ்ரீராமலிங்க சுவாமிகள் வடலூரில் ஜோதி தரிசனத்தைக் காண்பித்தார். புறத்தில் இதனைப் பார்த்து பிறகு அகத்தில் அருட்பெருஞ்ஜோதியைக் காண்பதே உண்மையான தைப்பூசமாகும். இந்த ஜோதி இருக்குமிடத்தை அறிதலே ஜோதிடம் எனலாம்.
தொடரும்..,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தகவல் உதவி:
- அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை
- திருமந்திரம் பாடல்கள்
- திருஅருட்பா பாடல்கள்
- தாயுமானவர் பாடல்கள்
- கந்தரலங்காரம்- அருணகிரிநாதர்
- திருஞானசம்பந்தர் பாடல்கள்
Write a comment