Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam and Vallalar Space Training Centre
வள்ளலார் மாபெரும் விஞ்ஞான மேதை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

வள்ளலார் மாபெரும் விஞ்ஞான மேதை

( மெய்யன்பர் திரு. சிவ. ஜெயக்குமார் ஐயா அவர்களின் “Vallalar The Scientist” என்ற கட்டுரையின் தமிழாக்கம்.) தமிழ் மொழிப்பெயர்ப்பு: பேராசிரியர் திரு. வேதபுரி ஐயா அவர்கள்.
உலகில் மிகச்சிறந்த ஆன்மீக சித்தர் எனக்கருதப்பட்ட சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் @ வள்ளலார் உலகத்தில் சிறந்து விளங்கிய விஞ்ஞானிகளுக்கெல்லாம் மேலான தலைச்சிறந்த விஞ்ஞானி ஆவார். இது பலருக்கும் தெரியாது.
’கடவுள் இருக்கிறார்’ என்பதை விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வதில்லை. உலக விஞ்ஞான மேதையான “ஸ்டீபன் ஹாக்கிங்” சிறிது கூட ஏற்றுக்கொண்டதில்லை. அவருக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையும் இல்லை. அவர் விஞ்ஞான அகராதியில் கடவுளுக்கான இடமே இல்லை.

அவர் மேலும் உலகுக்கு அறிவித்த செய்தி “ பௌதீகத்தில் உள்ள உண்மையான ஒருங்கிணைந்த தனித்தன்மை ஆற்றலை“ Unified Force ”பற்றி அறிந்துக்கொண்டால், வேதாந்திகள், விஞ்ஞானிகள், ஏன் உலகில் உள்ள சாதாரண குடிமகன் போன்ற எல்லாருமே “ நாமும், இந்த பிரபஞ்சமும் ஏன் வந்தோம்? ஏன் இருந்துக்கொண்டு இயங்கி வருகிறோம்? என்பவற்றின் காரணத்தைக் கண்டறியும் விவாதத்தில் பங்கு கொண்டு உண்மையை அறிந்துக்கொள்ளலாம்”. இந்த அடிப்படை அம்சத்தைக் கண்டுபிடித்து விட்டால், அதுவே மனித வர்க்கத்தின் மிக உன்னத வெற்றியாக அமையும். இந்த நிலை தெளிவாகும் போது விஞ்ஞான கோணத்தில் கடவுள் இல்லை என்பது விளங்கும். அப்போது கடவுளின் மனம் என்பது பற்றி அறிவார்கள் எனக் கூறி உள்ளார்.

வள்ளல் பெருமான் விஞ்ஞான அரங்கத்தில் கால் வைத்ததே, கடவுள் இருக்கிறார்’ என்பதை நம்புகின்றவர்கள் கூட கடவுளைப்பற்றிய உண்மையான நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் அறியாமையில் உழன்று கொண்டிருக்கின்றார்களே! அவர்களுக்கு புரியும் வகையில் விஞ்ஞான ஆதாரங்களுடன் புரிய வைப்பதுடன், இந்த பிரபஞ்சத்தில் யாருக்கும் புரியாத புதிராக உள்ள அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங்கருணையைப் புகழ்ந்து உரைப்பது தான்.

தன்னுடைய “திருவடிப்பெருமை” பதிகத்தில், 14 வது பாடலில் இதனை:

காற்றுருவோ கனல்உருவோ கடவுள்உரு என்பார்
காற்றுருவும் கனல்உருவும் கண்டுரைப்பீர் என்றால்
வேற்றுருவே புகல்வர்அதை வேறொன்றால் மறுத்தால்
விழித்துவிழித் தெம்போல்வார் மிகவும்மருள் கின்றார்
தோற்றும்அந்தத் தத்துவமும் தோற்றாத்தத் துவமும்
துரிசாக அவைகடந்த சுகசொருபம் ஆகி
மாற்றமனம் உணர்வுசெல்லாத் தலத்தாடும் பெருமான்
வடிவுரைக்க வல்லவரார் வழுத்தாய்என் தோழி

திருவருட்பா: 5638

Affirm they always, form of air or fire, as the form of god
When asked to discover the form of air or fire and apprise,
Assert they yet another form, which if disputed with others
By repeated blinking, people like me, stand too bewildered;
State of manifestation and the opposite of manifestation
Beyond the pain of suffering, becoming the form of bliss
Dancing in space inaccessible to the mind and sensation;
Who can describe the form of my Lord, oh my comrade.

அறிவில் தெளிவில்லாத நிலையில் கடவுளின் உருவத்தை, அம்சத்தை எப்படி நினைத்தார்கள்? காற்றுதான் கடவுள் எனவும், நெருப்பு தான் கடவுளின் உருவம் எனவும் நினைத்தார்கள். ஆனால் கடவுளின் உருவகம் மனித மனத்துக்கும், உள்ளுணர்வுக்கும் எட்டக் கூடியதும் அல்ல, என்ற உண்மையை அவர்கள் அறிய மாட்டார்கள். அவர் உருவத்தை வர்ணிப்பது என்பது எண்ணிப்பார்க்கவே முடியாது எப்பொழுதும் யாராலும் முடியாத காரியம்.
திருவருட்பாவில் உள்ள விஞ்ஞான கருத்துக்கள் பற்றி 1974-ம் ஆண்டிலேயே மதிப்பிற்குரிய சுவாமி.சரவணானந்தா அவர்கள், “Ominigrace and Science” என்ற நூலில் ஓரளவு எடுத்துக்கூறியுள்ளார்.இது ஒரு மாபெரும் புனித முயற்சியே. நாம் அவரை மனதாரப் பாராட்ட வேண்டும், மேலும் பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமத்தைச் சேர்ந்த திருவாளர். T.R. துளசிராம் ஐயா அவர்களும், 1987-ம் ஆண்டு வெளிக்கொணர்ந்த “Vallalar’s Vision Of Nuclear Physics and Nervous System”என்ற புத்தகத்தில் வள்ளல் பெருமானின் விஞ்ஞானக் கருத்துகள் பற்றி எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இருவரும் மக்களுக்கு வள்ளல் பெருமானின் விஞ்ஞான கண்ணோட்டத்தை விளக்கியுள்ளது பாராட்டுதலுக்கும் பெரும் மதிப்பிற்கும் உரியது.
இப்பொழுது நாம் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி, மெய்யென்பர்களின் முன் வைப்பது ஒரு தனித்தன்மை வாய்ந்தது. மேற்கண்ட ஆன்மீக அறிஞர்களின் கண்ணோட்டத்தில் இருந்து வேறுபட்டது. அந்த நாட்களில் விஞ்ஞானம் அடைந்திருந்த மேம்பாட்டு நிலைகள், சூழ்நிலைகள், அவற்றிற்கு ஏற்ப அவர்கள் எழுதி உள்ளார்கள்.
மெய்யன்பர்களுக்கு “நுண் அணு” பௌதிக விஞ்ஞான வளர்ச்சியைப் பற்றி ஒரு உணர்வையும், தெளிவையும் பற்றி மேலும் ஓரளவு விவரிக்க 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றி கீழே புள்ளி விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் முடிவானதும், விரிவானதும் அல்ல, எனினும் 1823- 1874 கால கட்டத்தில் வாழ்ந்த நமது வள்ளல் பெருமான் இதில் காணும் உண்மை விஞ்ஞான நிகழ்ச்சிகளை, அப்பொழுதே விஞ்ஞானிகளின் முயற்சிக்கு முன்னாலேயே தெரிந்து, தெளிவாக இருந்ததை மெய்யென்பர்கள் அறிந்து பெருமைப்பட வேண்டும் என்பதற்காகவே இங்கு குறிப்பிடுகிறோம்.

1803- அணுக்களின் எடைப் பற்றிய அட்டவணை

1808- பலவித அணுக்கள் பலவித எடைகளைக் கொண்டுள்ளது, அவற்றை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

1897- எலக்ட்ரான் பற்றிய கண்டுபிடிப்பு

1910- புரோட்டான் பற்றிய தகவல் கண்டுபிடிப்பு

1911- அணுவின் மையத்தில் கரு இருப்பதையும், நியூட்ரான் இருப்பதையும் கண்டுபிடித்து, அதைச்சுற்றி எலக்ட்ரான் பரவியிருந்ததை கண்டது

1913- அணுவின் மாதிரி அமைக்கப்பட்டது

1920- நியூட்ரான் என்பது இருக்கிஅது என ஏற்றுக்கொள்ளப்பட்டது

1930- நியூக்ளியஸ் என்ற கரு மையத்தில் புரோட்டான்களும், நியூட்ரான்களும் உள்ளடங்கி இருந்தன என்பது கண்டறியப்பட்டது.

1934- பீடா அழிவு, நியூக்ளியான்களின் ஊடே புகுந்து செயல்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது.

1935- புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் அணுவின் கருமையத்தில் உள்ளவைகளின் ஊடே அழுத்தமான பதிவுகளை ஏற்படுத்தியதைக் கண்டனர்.

1956- நியூட்ரினாஸ்’ என்ற அம்சம் இருப்பதைக் கண்டுப்பிடித்தனர்.

1964- எல்லாவற்றிருக்கு அடிப்படையாக குவார்க் என்ற அம்சம் இருப்பது தெளிவாயிற்று.

1975- நான்கு குவார்க் தத்துவம் அமைந்தது.

1977- குவார்க்கின் அடித்தளம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

1984- குவார்க்கின் மேல் தளம் கண்டுபிடிக்கப்பட்டது.

( இப்பட்டியலை, ஆங்கிலத்தில் உள்ள பட்டியலுடன் ஒப்பிட்டுக்கொள்க)

ஒரே சக்தியில் இருந்துதான், பிரபஞ்சத்தில் நடக்கும் நான்கு வகை அடிப்படையான சக்தி பரிமாற்றங்களும் வெளிப்பட்டன என்று எண்ணிக்கொண்டிருந்தனர். பெரும் வெடிப்பு என்ற பிரளயம் உண்டானபோது உஷ்ணம் 1015K. என்று நினைக்க முடியாத அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பிறகு உஷ்ணம் தணிந்து பிரபஞ்சம் குளிர ஆரம்பித்தபோது சக்திகள் தனி தனியாகப் பிரிந்து விரிந்தன. அதில் முதன்மையானது மிகப்பெரிய ஈர்ப்பு சக்தி,

அடுத்தது, மிகச் சக்தி வாய்ந்த அணு சக்தி

அடுத்தது, மின் காந்தச் சக்தி

மேலும் இதன் முக்கிய அம்சங்கள், கண்டுபிடிப்புகள் எப்படி, என்ன அளவில் எந்த காலக்கட்டத்தில் நடந்தேறின? அதன் விளைவுகள் என்ன? என்ற விவரங்களை ஆங்கிலக் கட்டுரையில் கண்டுக் கொள்க.

http://www.vallalarspace.com/UnisoulUniverse/Articles/1891

இவ்வளவும் பிற்காலத்தில் விஞ்ஞானிகள் அதிக அளவில் பிரயாசைப்பட்டு கண்டுபிடித்தனர். ஆனால் வள்ளல் பெருமானார் அவ்வளவையும் துல்லியமாக 1874-ம் ஆண்டுக்கு முன்னரே அறிந்து, தெளிந்து திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், எல்லா விளைவுகளும், தோற்றங்களும், கடவுளிடமிருந்தே வெளிப்பட்டவை என்று திட்டவட்டமாக உறுதியாகக் கூறி உள்ளார். அவர் விஞ்ஞானிகளின் அனுமானப்படி ஏதோ ஒரு கணக்குகளின் அடிப்படையில், ஒரு நாளில் பிரபஞ்சம் உண்டாயிற்று என்ற கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரபஞ்சமே கடவுளின் ஆனந்தத் தாண்டவம், ஆனந்தக்கூற்று, திருவிளையாடல் என்று கூறுகிறார்.

இந்த திருவிளையாடல் ஆரம்பம், முடிவு என்று இல்லாமல் எப்பொழுதுமே இருந்து கொண்டே இருந்தது, இருக்கின்றது, இருக்கப்போகிறது என்று உறுதியாக கூறுகிறார். அவர் தானே கண்டறிந்தவற்றை அப்பட்டமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

வள்ளலார் தான் கண்ட கடவுளை, காட்சிகளை மாயாத் திரைகளில் இருந்து விடுபட்டு, மயக்கம் தெளிந்து, பொய்யற்ற, புனைந்துரையாத, சத்தியத்தினுள்ளே உறைந்து தெளிவாகவும், நிலையாகவும் செயல்படும் மனம் பொருந்தினால் மட்டுமே கடவுளின் உருவம், தன்மை, செயல்பாடு, அவர் எண்ணம் போன்ற சத்தியத்தை, உண்மை நிலையைப் புரிந்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

உலக குடிமகன் ஒவ்வொருவரும் கடவுள் நிலைக்கு செல்லலாம். கடவுளின் அருளை முழுமையாகப் பெறலாம். இதற்கான தகுதி என்ன? முன்பு கண்ட மயக்கநிலையில் இருந்து விடுப்பட்டு, புரைபடா மனமாக மாறினால் கைக்கூடும் என கூறி உள்ளார்.

விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடவுளின் திருவிளையாடல் பற்றி எல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் வள்ளல் பெருமான் அழுத்தம் திருத்தமாக பிரபஞ்சத்தில் நடக்கும் விளைவுகள், தோற்றங்கள் எல்லாம் சொற்களாலும், எண்ணத்தினாலும், நினைத்துப் பார்க்க முடியாத கடவுளின் ஆனந்தத் தாண்டவம் தான் எனக்கூறி உள்ளார்.

வள்ளலார் தன் தவம், தியானம், சத்விசாரம் ஆகியவற்றில் மும்முரமாக ஈடுப்பட்ட காரணத்தினால் பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தையும், தோற்றங்கள் முழுவதையும் தன்னுடைய தவ வலிமையால் துல்லியமாகக் கண்டு ரசித்து உண்மையை விவரித்துள்ளார்.

திருவடிப்பெருமை பதிகத்தில் 17-வது பாட்டில் பிரபஞ்ச ரகசியங்களைத் தெளிவாகக் கூறியுள்ளார். எல்லாமே 10 நிலைகளில் உள்ளடங்கியவை என்று விளக்கி உள்ளார். கடவுளுக்கும், தோற்ற வெளிப்பாட்டிற்கும் இடையே 8 நிலைகள் உள்ளன. அவை எவை என்பதை இந்தப் பாட்டில் எடுத்துச் சொல்கிறார்.

தோற்றம் ஒன்றே வடிவொன்று வண்ணம் ஒன்று விளங்கும்
சோதி ஒன்று மற்றதனில் துலங்கும் இயல் ஒன்று
அற்ற அதில் பரமாய அணு ஒன்று பகுதி
அது ஒன்று பகுதிக்குள் அமைந்த கரு ஒன்று
ஏற்ற மிக்க அக்கருவுள் அமைந்த சக்தி ஒன்று சத்திக்
கிறை ஒன்றாம் இத்தனைக்கும் என் கணவர் அல்லால்
ஆற்ற மற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில்
ஆடும் அவர் பெருந்தகைமை யார் உரைப்பார் தோழி”
( தோற்றம், வடிவு, வண்ணம், சோதி, இயல், அணு, பகுதி, கரு, சக்தி, இறை)

Manifestation one only, form is one and colour one
Light there is one and therein nature is one
Below that there is atom subtle and there is a part
Within that there is nucleus and in it, energy
There is god to that energy; to all these things
There is no one other than my Master
Who is the monarch in the council
Who can praise His glory, my comrade,
Of His dance in the space.

அந்த காலக்கட்டத்தில் எந்த விஞ்ஞானியும் கனவிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது. இப்பாட்டை படித்து புரிந்துக்கொள்ளும் எவரும் வள்ளல் பெருமானின் தெய்வத் தன்மையையும், விஞ்ஞான இரகசியங்கள் மற்றும் நுண் அணு இரகசியங்களை கூர்ந்தறியும் வல்லமையையும், பெற்று இருந்ததையும் கண்டு வியந்து போற்றுவார்கள். உலகிலேயே எல்லா விஞ்ஞானிகளுக்கும் முன்பாகவே, விஞ்ஞான இரகசியங்களையும், இயற்கையில் அடங்கி இருந்த மறைப் பொருட்களை யும் எளிதாகக் கண்டு வெளிப்படுத்தியவர் என்பதை பூரிப்புடன் எண்ணிப் பார்ப்பார்கள்.

வள்ளல் பெருமானார் கூறியது.
இறை - GOD
சக்தி - ENERGY
கரு - NUCLEUS
பகுதி - PART
அணு - ATOM
இயல்- NATURE
சோதி- LIGHT
வண்ணம்- COLOUR
வடிவு - FORM
தோற்றம்- MANIFESTATION

பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் அடிப்படையாக அமைவது “நுண் அணு என்கிற பரம அணு” தான். இதனைப்பற்றிய நுணுக்கங்களை எல்லாம் இப்போதைய விஞ்ஞான அறிவு, விஞ்ஞான கருவிகள் இல்லாமல் சுமார் நூறு வருடங்களுக்கு முன்பாகவே பெருமானார் துல்லியமாக தெள்ளத் தெளிவாக, ஆணித்தரமாக எப்படி கண்டிருப்பார்? நினைத்துப் பாருங்கள்.

அணுக்கள் பற்றி விளக்கியதோடு மட்டுமல்லாமல் பிரபஞ்சத்தில் உள்ள கோடிக்கணக்கான எல்லாப் படைப்புகளுக்கும் இடையே இருந்து, ஒன்றோடு ஒன்றாக இணைத்து இயங்கு தன்மைகளையும் கண்டறிந்து விளக்கி உள்ளார், ஒவ்வொன்றுக்கும் பெயரிட்டுக் கூறியுள்ளார். எல்லாம் அருட்பெருஞ்ஜோதியில் அருள் என்றும் புகழ்ந்து விவரித்து உள்ளார்.
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் கண்டுப்பிடித்த “Relativity Theory” என்ற அடிப்படை உளவு பற்றிய அனைத்தையும் அதற்கு முன்பு விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்புகளை அஸ்திவாரமாக வைத்துதான் வெற்றிக்கண்டதாக கூறியுள்ளார்.
வள்ளல் பெருமானோ தனக்கு“அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே” எல்லா நிலைகளிலும் இரகசியங்களைக் காட்டிக் கொடுத்தார். முதல் அஸ்திவாரமாக எட்டும் இரண்டும் என்ற தத்துவத்தை விளக்கினார். அதன் வழியே மற்ற எல்லா படைப்புகளின் இரகசியங்களையும், நிலைகளையும் தான் கண்டறிந்ததாகக் கூறுகிறார்.
மேலும் தான் கண்டறிந்ததை விளக்கியதோடு மட்டுமல்லாமல் தன்னையும் சோதனைக்குட்படுத்தி தன்னுடைய உடம்பை ஞானதேகமாக்கி பின் நுண் அணுக்களாக மாற்றி பிரபஞ்சத்தின் உள்ள எல்லா படைப்புகளிலும் ஒன்றி கலந்துவிடச் செய்தார். அவர் இவ்வாறான நிலைக்கு தன்னை உட்படுத்தியது மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களும் தெய்வீக அருளுடனும், ஆன்ம நேய உரிமைப்பாட்டுடனும் ஒன்றி, கலந்து எங்கும் அமைதியை நிலைநிறுத்தி பேரானந்தம் அடைவதற்காகத் தான்.
அவர் தம் வாழ்க்கையை சத்தியத்தை நோக்கிய பயணமாக அமைத்து, இந்த நிலையை ஒவ்வொரு குடிமகனும் சத்விசாரத்தை அனுசரித்து அடைய முடியும் எனவும் கூறியுள்ளார்.

எல்லா விஞ்ஞானிகளும் உலகில் நான்கு அடிப்படை ஆற்றல்கள் உள்ளன, அவைதான் எல்லாம் படைப்புகளின் ஊடே இருந்து செயல்படுகின்றன என ஒத்த கருத்தாய் கூறியுள்ளனர். இந்த ஆற்றல்கள் புதியதாய் உண்டாவதில்லை, அவை ஏற்கனவே உள்ளவைதான்.

அந்த நான்கு வகை ஆற்றல்கள்

1.சக்தி வாய்ந்த அணு சக்தி
2.குறைந்த சக்தி வாய்ந்த அணு சக்தி
3.மின் காந்த சக்தி
4.புவி ஈர்ப்பு சக்தி

மெய்யென்பர்கள் வள்ளல் பெருமான் அருளிய திருவடிப் பெருமை பதிகத்தின் 16 வது பாடல்களை பார்க்கவும்.

தோன்றசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத்
தோற்றுசத்தி பலகோடி தொகை உரைக்க முடியா
சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி
தனை விளம்பல் ஆகா அச்சத்திகளைக் கூடி
ஏன்றவகை விடுகின்ற சத்தி பலகோடி
இத்தனைக்கும் அதிகாரி என் கணவர் என்றாய்
ஆன்றமணி மன்றில் இன்ப வடிவாகி நடிக்கும்
அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி

Forces manifesting many more in millions, sprouting

Forces immeasurable in millions, quantum unknown
Galaxies creating forces many more in millions;
Nameless such forces combined and channeled
Into forces of yet another in millions and millions;
To all these forces, My Master, the only monarch
Dancing in the hall of genesis in the form of bliss;
Anyone there who can ever glorify His Greatness?
Beware of this for ever my comrade.

வள்ளல் பெருமான் உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்றுக்கொடுக்கவே வாழ்ந்தார். வடலூரில் சத்திய ஞானசபையை ஏற்படுத்தி எல்லா உயிர்களும் இன்புற்று வாழவே தவம்-தியானம் செய்து வந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
அவர் அருளிய அருள்வாக்கு, “ஆன்ம அனுபவமே இயற்கை உண்மை, அதுவே வாழ்வின் பேரின்பம்”. இதை அடைவதே நமது குறிக்கோள்.
இக்கட்டுரை ஒரு தொடக்கமே........

************

அன்புடன்
சிவ.ஜெயக்குமார்
www.vallalarspace.com/unisouluniverse
கோயம்புத்தூர்

தமிழாக்கம் உதவி:
திரு. வேதபுரி ஐயா அவர்கள்
கோயம்புத்தூர்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
************