அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
சமரச சுத்த சன்மார்க்க சங்கம்
நல்லமாங்குடி
நன்னிலம்.
நல்லமாங்குடி என்கிற அழகிய கிராமம், நாகப்பட்டினம் - கும்பகோணம் பிரதான சாலையில் நன்னிலத்திற்கு அருகில் இருக்கிறது. அப்பிரதான சாலையில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் வருடம் -2005 ல் எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை யினால் தொடங்கப்பட்டிருக்கிறது.
எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அருளால் அதனை நிர்வாகித்து வரும் திரு K. வைத்தியலிங்கம் அவர்கள் இந்த சங்கத்தைப் பற்றி கூறும் போது , ஐயா இது அவருடைய அருளால் 2005 தொடங்கப் பெற்று இன்று வரைக்கும் எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்றாக நடந்து வருகிறது” எல்லாமே அவர் செயல் என்றார்.
மேலும் சங்கத்திற்கு வந்த ஒரு அன்பர் 5000 ரூபாய் கொடுத்ததாகவும் அதனை வங்கியில் டெபாசிட் செய்திருப்பதாகவும் கூறினார். மேலும் நாகப்பட்டினம் சிவ சக்தி குழுவினர் அந்த சங்கத்திற்கு தகர கண்ணாடி கூண்டு வாங்கி தந்ததாகவும் கூறினார்.
சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அகவல் பாராயணம் செய்து அன்னதானம் அளிக்கப்படுவதாகவும், மேலும் ஒவ்வொரு மாத பூசத்தில் காலை 10 மணி அளவில் சத் சங்கமும் அதனை தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் அன்னதானம் அளிக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும் வள்ளல் பெருமானுடைய கொள்கைகள் காகித அட்டையில் கீழ்கண்டவாறு எழுதி சங்க கொட்டகையில் வைத்திருந்தனர்.
1. புலால் உணவை உட்கொண்டால் அவ்வுயிர்கள் எவ்வாறு அவஸ்தை படுகிறதோ அவ்வாறு நாமும் நோய்வாய் பட நேரிடும்.
2. எவ்வுயிரையும் தம்முயிராக பார்க்கும் எண்ணமே உயர்ந்த எண்ணம்.
3. சாதி மதம் தவிர்த்து எல்லோரிடத்தும் அன்பாக பழகுங்கள், அன்பே சிவம்.
4. கொல்லா நெறியே குருவருள் நெறி.
இவற்றை எல்லாம் எளிய முறையில் சங்கத்திற்கு வரும் மாணவ மாணவிகளுக்கும், உள்ளூர் கிராம வாசிகளுக்கும் புரியும் வண்ணமாக எழுதி வைத்துள்ளோம் என்று கூறினார்.
இதனை கேட்கும் போது சன்மார்க்கத்தை வள்ளலார் எவ்வாறு நடத்துகிறார் என்பதை எங்களால் உணர முடிந்தது.
***************