Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
சன்மார்க்க உலகத்திற்கு ஒரு சிறு விண்ணப்பம்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

எல்லாமாகிய, எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல் பெருமானிடமும், சுத்த சன்மார்க்க அன்பர்களிடமும் இச்சிறு விண்ணப்பம் சமர்ப்பிக்கப் படுகிறது.

சன்மார்க்க உலகத்திற்கு ஒரு சிறு விண்ணப்பம்

தமிழ் செம்மொழியாக, ஆட்சி மொழியாக இருந்தாலும் அன்னிய மொழியான ஆங்கிலத்திற்கு தமிழ் நாட்டில் தனி மவுசு உண்டு. மேலும் தற்போது உள்ள கல்வி முறையில் பெரும்பாலும் பெற்றோர்கள் ஆங்கில கல்வியை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆகையால் ஒரு குறிப்பிட்ட வருடத்திற்கு அப்பால் “தமிழ்” வாய்மொழியாகத்தான் இருக்கும் என்றால் அது மிகையாகாது.

மேலும் தமிழ் மொழியின் சிறப்பை பிற்கால சமுதாயத்தினர் உணர வாய்ப்புத் தரமால் பெற்றோர்களும் அவர்களுக்கு உலகியலுக்கு ஏற்றவாறு ஆங்கில கல்வியை திணிக்கின்றனர்.

எனவே ஆங்கிலேயராகவே மாறிவிட்ட இளைய சமுதாயத்தினருக்கு பிற்காலத்தில் திருவருட்பா முதலிய தெய்வீக பாடலை படிக்கத்தெரியுமா? என்பதும் சந்தேகத்திற்கு உரியது தான். ஆகவே சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தெய்வீக பாடலான திருவருட்பாவை ஆங்கில மொழி மாற்றம் மற்றும் விளக்கவுரை அளிக்க முன் வர வேண்டும்.

ஏற்கனவே மொழிமாற்றம் செய்யப்பட்ட திருவருட்பா பாடல்கள், www. vallalarspace.com /ThiruArutpaEng, தற்போது செய்வதற்கு உள்ள பாடல்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு புத்தக வடிவம் பெற செய்யலாம்.

எல்லாமாகிய, எல்லாம் வல்ல ஸ்ரீ வள்ளல் பெருமானை தலைவராகக் கொண்டு ஒரு குழு அமைத்து திருவருட்பா பாடல்களை மொழி மாற்றம் செய்யலாம்.

நிறைய தொழில் அதிபர்கள், அன்பர்கள், சன்மார்க்க உலகத்தினருக்கு அவ்வப்போது பல உதவிகளையும், சன்மார்க்க பணிகளையும் செய்து வருகின்றனர். எனவே எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல் பெருமான் அருளோடும், அன்பர்கள் ஒத்துழைப்புடனும் இப்பணியை தொடங்கினால் மிக விரைவில் திருவருட்பா ஆங்கில மொழி மாற்றம் திருவருள் உதவியால் நடந்தேறும்.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

***************

Vallalar Groups
Dear Kumaresan,
Translation work has already started and Gnana Sariyai Completed..
Coimbatore PSG College Prof.Anbar.Vedapuri is leading the work..
Lot of internal discussion keep going... once finalized update will happen...
Thanks
Karthikeyan
Tuesday, July 21, 2009 at 02:24 am by Vallalar Groups