Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
தீட்சை-V
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


தீட்சை-V

பட்டினத்தார்

பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி . இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர்.

குழந்தை பாக்கியமில்லாமல் மனம் வருந்தியப்போது இறைவன் திருவருளால் ஒரு பிராமணன் மூலம் ஆண் குழந்தை கிடைத்தது அதற்கு மருதவாணன் என பெயர் சூட்டி வளர்த்து வந்தார், பின்னர் மகன் மூலம் பெரும் பொருள் ஈட்ட எண்ணி மருதவாணனை வெளிநாடு செல்ல பணித்தார். பரம்பொருள் மூலம்( மருதவாணன் என்ற குழந்தையால்) காதற்ற ஊசியும் வராது காண்கடை வழிக்கே என்று உணர்த்தப் பட அது முதல் பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தத் துறந்து இவர் பூண்ட துறவு கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாடலை இன்று கேட்டாலும் கண்ணீர் வரும்.

இவர் பரம்பொருளை தொழுது வட இந்திய பயணங்கொண்டார். அங்கு பத்ரகிரியார் நட்பு கிடைத்தது. அவருடைய நட்பும், உஜ்ஜையினி பயணமும் திருப்புமுனையாக அமைய பின்னர் இருவரும் தென் தமிழ்நாடு வந்து இறையை தொழுதனர். திருவிடைமருதூர் தலத்தில் பத்ரகிரியாருக்கு மோட்சம் கிடைத்தது. பின்னர் பட்டினத்தார் திருவொற்றியூர் கடற்கரையில் பேய் கரும்பு இனிக்க இதுவே தனக்கு இறையுடம் கலக்கும் நிலை என்று உணர்ந்தார். கடற்கரையில் விளையாடிய சிறுவர்களிடம் தன்னை சால் வைத்து மூட சொல்லி பின்னர் வேறுவழியில் வெளியே வந்தார். சிறுவர்கள் அதிசயத்தில் மூல்கினர். பின்னர் ஒரு குழியில் மூடசொன்னார். சிறுவர்கள் அவர் சொன்னப்படி செய்து பின்னர் திறந்து பார்க்க சிவலிங்கமாக மாறியிருந்தார்.

பட்டினத்தாரின் பாடல்கள் சைவ திருமுறைகளில்11 ஆவது வைத்துப் போற்றப்படுகின்றது.

இவருக்கு குரு பரம்பொருள்; காதரற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்ற சொல் இவருடைய ஆன்மிக பயணத்திற்கு வழிவகுத்தது. இவருடைய வரலாற்றை பார்க்கும் போது இவர் தேக சுதந்திரம், போக சுதந்திரம்,மற்றும் ஜீவ சுதந்திரம் ஆகிய அற்ப சுதந்திரங்களை பரம்பொருளுடன் ஒப்படைத்து இறையனுபவம் பெற்றதாக தெரிகிறது.

பட்டினத்தடிகள் இயற்றிய நூல்கள்

  • கோயில் நான்மணி மாலை
  • திருக்கழுமலை முமணிக்கோவை
  • திருவிடைமருதூர் திருவந்தாதி
  • திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது

தகவல் உதவி:

அபிதான சிந்தாமணி


குறிப்பு: இக்கட்டுரை சைவ சமயத்தை ஆதரித்து எழுதப்படவில்லை. பரம்பொருள் (அனைத்து மதத்தினருக்கும் ஒன்றான ஆண்டவர்) குருவாக இருந்தால் சாகாகலை முதல் அனைத்து வித ஆற்றல்களையும் இறைவனிடமே கற்கலாம் என்ற நோக்கில் எழுதப்படுகிறது. வள்ளலார் அவ்வழியை எவ்வாறு கடைப்பிடித்தார் என்பது ஆய்வுக்காக பின்னர் எடுத்துக்கொள்ளப்படுகிறது.


************