அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
தீட்சை
முன்னுரை
சாகாக் கலையை பல சித்தர்கள் கற்றிருந்தாலும் தன்னுடைய உடலோடு மறைந்து இறையோடு ஐக்கியமானவர்கள் ஒரு சிலரே. அவர்களே வாழையடி வாழையடியாகத் தோன்றிய மகா சித்தர்கள் என்று சொல்லலாம்.
திருவள்ளுவர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்க வாசகர், சுந்தரர், திருமூலர்,பட்டினத்தார், பத்ரகிரியார், அருணகிரி நாதர்(கிளி ரூபமாக இன்றும் வாழ்கிறார் என்பது சைவ நம்பிக்கை)மற்றும் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் போன்றவர்கள் உடலுடன் பரம்பொருளோடு ஐக்கியமானவர்கள்.
எனவே சாகாக்கலை என்பது அருளியியல் வாழ்வின் ஒரு அங்கமாகிறது. சாகாக்கலை என்பது இறைனிலையறிந்து இறைமயமாதல். இவ்வாறு சாகாக்கலையைப் பயில குருவின் திருவடியை எப்பொழுதும் மறக்காமல் இருப்பது மிகவும் அவசியம் என்று வள்ளலார் கூறியுள்ளார்.
அப்படியென்றால் குரு என்பவர் சாகாக் கலையைப் பற்றி தெரிந்திருந்தால் மட்டுமே தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு -தகுதியானவர்களுக்கு சாகாக்கலையைப்பற்றி சொல்லித் தர இயலும்.
எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள சித்தர்களை நோக்குங்கால் அவர்கள் இறைவனைத் தவிர வேறு எந்த ஒரு புற குருவிடமும் சாகாக் கலையைப் பயிலவில்லை என்பது புலனாகிறது. அவர்கள் கற்றக் கல்வி சாதாரண சந்தைக் கல்வி இல்லை. பரம்பொருளைப் பற்றி அறிந்துக்கொள்கிற –சாகாக் கல்வி. இவர்களுக்கு பரம்பொருள் ஆசானாக இருந்திருக்கிறார் மற்றும் அவர்களுக்குத் தீட்சை அளித்திருக்கிறார்.
திருவள்ளுவர்:-
ஒளிதேகம் பெற்றிருக்கலாம் என்பது பல மூத்த அறிஞர்களுடைய கருத்து.வள்ளல் பெருமானும் இதனை உறுதி செய்வதுப் போலத் திருக்குறளை சாகாக்கலைக்கு உதாரணமாகக் காண்பித்துள்ளார். அவர் கி.மு முதல் நூற்றாண்டில், சென்னை நகருக்கருகில் வாழ்ந்து வந்தார் என்றும் அவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் நம்பப்படுகிறது.
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஔவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர்,பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார். இவருக்கு குரு பரம்பொருள்-இறைவன் என்பது பலருடைய கருத்து.
அற்புதங்கள்
•திருக்குறள் மூலம் தமிழ்த் தொண்டு ஆற்றியது.
•சாதி சமய இன வேறுபாடு இன்றி இறையறிய ஞான வெட்டியான் என்ற நூலை இயற்றினார் என்று மூத்த அறிஞர்கள் கருதுகிறார்கள். ( ஞானவெட்டியான் எழுதிய திருவள்ளவநாயனார் வேறு என்ற கருத்தும் உள்ளது)
திருநாவுக்கரசர்.
திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ்நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவர். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் மருணீக்கியார். மருணீக்கியார் தற்போதைய வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள திருவாமூரில் ஒரு சைவக் குடும்பத்தில் வேளாண் குலத்தில் தந்தையார் புகழனாருக்கும் தாயார் மாதினியாருக்கும் மகனாகப் பிறந்தவர். தனது இளமைப் பருவத்தில் சைவத்தை விட்டு சமண சமயத்தில் சேர்ந்தார். சமண நூல்களைக் கற்று அச் சமயத்தின் தலைவர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.
இவரது தமக்கையார் திலகவதியார். சிறந்த சிவபக்தராக இருந்தார். தம்பியார் சமணத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டு வந்தார். அக்காலத்தில் மருணீக்கியாருக்குக் கடுமையான சூலை நோய் ஏற்பட்டதாம். சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது போகவே திலகவதியாரின் ஆலோசனைப்படி சிவனிடம் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடி முறையிட்டதில் நோய் தீர்ந்ததாம். இதனால் மருணீக்கியார் சைவத்துக்கு மீண்டார். இதன் பின்னர் இவர் நாவுக்கரசர் என அழைக்கப்பட்டார்.
இவர் தொண்டு வழியில் இறைவனை வழிப்பட்டவர் . பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்து, தேவாரப் பதிகங்களைப் பாடி சைவப் பணியில் ஈடுபட்டார். கோயில்களின் சுற்றாடலை உழவாரங் கொண்டு தூய்மைப் படுத்தியும் வந்தார். இதனால் இவர் உழவாரத் தொண்டர் எனவும் அழைக்கப்பட்டார். சமணத்தைச் சார்ந்திருந்த பல்லவப் பேரரசனான மகேந்திர பல்லவனைச் சைவனாக்கினார்.
தனது முதிர்ந்த வயதில் சிறுவனாயிருந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சரியைத் தொண்டு புரிந்த சுவாமிகள் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரை சதயத்தில் சிவலிங்கத்துடன் கலந்தார் என்று அறியப்படுகிறது. இவருக்கு குரு பரம்பொருள்- சிவம்
அற்புதங்கள்
சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்
சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்
சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது. போகாதுகரையேறியது
சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது
சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது
விடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது
காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது.
தொடரும்...,
(தகவல் உதவி-அபிதான சிந்தாமணி)

குறிப்பு: இக்கட்டுரை எந்த சமயத்தையும் ஆதரித்தோ அல்லது ஒப்பீடு செய்தோ எழுதப்படவில்லை. பரம்பொருள் குருவாக இருந்தால் சாகாக்கலை முதல் அனைத்து வித ஆற்றல்களையும் இறைவனிடமே எவ்வாறு கற்கலாம் என்ற நோக்கில் எழுதப்படுகிறது. அதற்கு வள்ளலார் எவ்வழியை பின்பற்றினார் என்பதை பிறகுப் பார்ப்போம்.
2 Comments
ஐயா வந்தனம், வள்ளலார் இறைவனிடம்தான் சாதனை பயின்றார் என்பதை அவரே பல பல பாடல்களில் எழுதியுள்ளார். நமக்கு அந்த தகுதி இல்லை என்பதை வள்ளலார் அறிந்தவர். அதனால் தக்க ஆச்சாரியனைக் கொண்டு நெற்றிக் கண்ணைத் திறந்து கொள்ளவேண்டும், என்று கூறியுள்ளார்.அவர் வார்த்தையை நாம் அலட்சியம் செய்யலாமா? சன்மார்கிகளில் நல்லவர்களே இல்லையா? நாம் யாரைப் பார்த்தாலும் அவர்களது குறைகளை மட்டுமே பார்ப்பதால் நாம் யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதுவே நமது குறை என்று நான் எண்ணுகிறேன்.