Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

அளவற்றஅருளாளன் நிகரற்ற அன்புடையோன்- இஸ்லாம்

தேவன் அன்பாய் ஒளியாய் இருக்கிறார்-கிறிஸ்தவம்


ஒன்றே குலம் ! ஒருவனே தேவன்- திருமூலர்


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க- வள்ளலார்


ஆன்ம நேய ஒருமைபாட்டுரிமையுடைய அன்பு சகோதரர்களுக்கு, அன்பு வணக்கம். கார்த்திகை, மார்கழி, தை மாத அதிகாலைப் பொழுதில் இறை உணர்வை பெற நமது பெரியோர்களால் ஆரம்பிக்கப் பட்ட இறை நாமம் உச்சரித்து மனித மனங்கலை பண்படுத்தவும் செம்மைப் படுத்தவும் அன்பு, தயவு, இரக்கம், ஒற்றுமை, சமத்துவம், உயிர்கள் நேயம், மனித நேயம் மற்றும் தர்மத்தையும் வளர்ப்பதற்கு செய்யப்பட்டன. நமது சான்றோர்கள் வழியில் நாமும் நடப்போம். எல்லா நலமும் வளமும் பெறுவோம். எண்ணற்ற கோடி தெய்வ நாமங்கள் அனைத்தும் ஒரே இறை வனுடைய நாமத்தைத்தான் குறிக்கிறது. இறைவன் ஒருவனே வணக்கத்திற்கும் உரியவன். பாரதியார், சிவாய நம என்றாலும் அல்லாகு என்றாலும் யகோவா என்றாலும் ஒம் சக்தி, ராம ராமா என்றாலும் கிருஷ்ண கிருஷ்ண என்றாலும் ஒரே இறை தத்துவத்தை தான் குறிக்கும் என்றார்.

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

என்ற அளவற்ற நிகரற்ற பற்று கோடான மகா மந்திரத்தை தாரக மந்திரத்தை இயற்கை உண்மை கடவுள் பரிபூரண சொரூபத்தைக் காட்டுகின்ற மகா மந்திரத்தை இறைவன் தனக்கு உணர உணர்த்தினார் என்று வள்ளலார் கூறுகின்றார். எல்லோரையும் ஓத செய்தார். எல்லோரையும் ஓதவும் செய்தார். ஒருவர் ஒருமுறை இம்மந்திரத்தை சொன்னால் ஒராயிரம் இறை நாமத்தை சொன்னதின் பயனை அடைவார். மேலும் இம்மந்திரம் உடலும், உள்ளமும், உயிரும் அதன் ஆற்றலை அடைந்து நன்மை பெற உதவுகிறது. பிறவி பயனை அடைய செய்கிறது. இந்த மகா மந்திரம் எல்லாம் வல்ல எல்லாம் உடைய எல்லாம் ஆகிய சர்வ வல்லமை படைத்தது. தினமும் காலையிலும் மாலையிலும் மற்றும் எல்லா நேரங்களிலும் இம்மந்திரத்தை ஒதிக் கொண்டிருத்தால் மனமும் உடலும் செம்மைப் பெறும். நோய் நொடிகளையும் துன்பங்களையும் வெல்லலாம். பிறவா வரமும் பெறலாம்.

இந்த அருட்பெருஞ்ஜோதி நாமம் சாதி, சமயம், மதம், இனம், தேசம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் எனும் பேதம் நீக்கி எல்லோரையும் நம்மவர்களாக காட்டுகின்ற நாமம்.

அன்பு செய்வது இன்பத்தின் வழி
எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்- கணியன் பூங்குன்றனார்.

சமுதாயத்தில் காணப்படும் பயனற்ற பொருளற்ற , சாதி, சாத்திரம், சடங்கு, சமயம், போன்ற பாகுபாடுகளை அஞ்சாமல் சாடிய ராமலிங்கசுவாமிகள் ஆ ன்ம நேய ஒருமைப் பாட்டுரிமை என்னும் தொடரால் அதனை விளக்குகிறார். சாதி - சாதிக்குள் சாதி -எனத் தம்மைத் தாமே பகுத்து, பகைமையையும் பிரிவினையும் வளர்த்துக்கொண்டே காலத்தில் துணிந்து அவை பொய் எனச் சாடிய துணிவு குறிக்கத்தக்கது, மக்களைப் பிரிக்கும் மாயையாகிய அச்சாதியை ஒருமித்த குரலோடு, சாதினால் தீமையே அன்றி அணுவளவும் நன்மை இல்லை என்றும் " கண்மூடிப் பழக்க மெல்லாம் மண் மூடிப் போக " எனப் பெரிதும் வருந்தி சாடியவர் இராமலிங்க சுவாமிகள்.

இறையுணர்வு என்பதே அன்புணர்வுதான். அன்பு சுரக்கும் இடத்தில்தான் அருள் சுரக்கும்.
அன்பு என்பது கடவுளிடம் மட்டும் அன்றி கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்ய வேண்டும். அருள் நெறி என்பது அன்பு நெறியின் நீடிய தோற்றமே.

எனவே சாதி சமய பேதமற்ற சமுதாயம் அன்புணர்வோடு உருவாக எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன்

G. சிவக்குமார்
சமரச சன்மார்க்க சபை
12/14 செட்டி தெரு, வடசேரி, நாகர் கோவில்

2 Comments
Ramanujam jam
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கிறிஸ்துமஸ் அன்றே வெளியிடப்பட்டதற்கு நன்றி..
வாழ்த்துக்கள்.
தயவுக் குழு, மதுரை.
Thursday, December 25, 2008 at 09:56 am by Ramanujam jam
satips
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நன்றி..
வாழ்த்துக்கள்.
Sathesh Kumar.S
Sunday, December 28, 2008 at 19:47 pm by satips