Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam and Vallalar Space Training Centre
இயற்கைத் தொன்மையாம் சுத்த சன்மார்க்கம்


வள்ளளார் சிந்தனைகள் ஆராய்ச்சி மற்றும் சேவா மையம் காரைக்காலின் சார்பாக சென்ற 02.10.2008 அன்று காரைக்கால் அம்மையார் கோவிலில் நம் அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் 186ஆவது வருவிக்க உற்ற நாள்விழாவை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.


நிகழ்ச்சியில் சேலம் தயவுத்திரு. ஆர்.குப்புசாமி ஐயா அவர்கள் இயற்கைத் தொன்மையாம் சுத்த சன்மார்க்கம் எனும் தலைப்பில் சுமார் இரண்டடரை மணிநேரம் மிகஅருமையானதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.


உரையின் சில துளிகள்


வள்ளல் பெருமானின் அருட்பாச் சிறப்பையும்,

சிற்றம்பலம் சிதம்பர இரகசியத்தையும்

காரைக்கால் அம்மையாரின் மாங்கனி

கதை குறித்த தத்துவ விளக்கத்தையும் அழகாக, எளிய தமிழில், இனிய நடையில்

கேட்டார் பிணிக்கும் தகையவாய் எடுத்துக் கூறினார்கள்.


மேலும் நாம் சுவாசிக்கும் காற்றின் தரமே நம் அறிவின் தரமாக உள்ளது என்றும், அதிகாலை 4,00 மணி முதல் 6,00 மணிவரை இறைவனின் உயிராகிய அமுதக்காற்று உலகிற்கு வருகிறதென்றும் இதனை நாம் விழித்திருந்தால் தான் பெற இயலும் என்றும் கூறினார்கள்.

மேலும் பசிப்பிணியை நிரந்தரமாக மாற்றிக் கொள்ள வழி கண்டு சொன்னவர் வள்ளள் பெருமான் ஒருவர் தான் என்றும்,

அவர் என்றும் இறவா நிலையில் உள்ள ஒரு அறிவியல் அணுவியல், விஞ்ஞானி என்றும் குறிப்பிட்டார்கள்


மேலும் நம் உடலுள் சிற்சபை என்று சொல்லக்கூடிய புருவ மத்தியில் ஒளி விட்டுபிரகாசித்துக் கொண்டுள்ள ஆன்ம அணுவாகிய, கடவுள் அணுவாம் அருட்பருஞ் சோதியை எண்ணி எண்ணி சிந்தித்திருப்போர் உடலின் மற்ற இடங்ககளில் உள்ள ஆயிரம் கோடி சடப்பொருள் அணுக்களையும் அதேபோல் உயிர்பெற்ற அணுவாக்கி அதன் வழியே சுத்த தேகமாம் ஒளியுடல் பெறலாம் என்று குறிப்பிட்டார்கள்


மேலும்

சித்தர்கள் கூறிய மாங்காய்ப்பால் தேங்காய்ப்பால் பற்றிய மறைபொருள் விளக்கம், சாகாத்தலை, வேகாக் கால், போகாப் புனல் குறித்த விளக்கம், அகப்புற அமுதம், புறப்புற அமுதம் போன்ற எண்ணற்ற தத்துவ மறைபொருட்களுக்கெல்லாம்

மிகமிக அருமையான எளிமையான அற்புதமான விளக்கம் அளித்து அனைத்து மக்களையும் இரணடரை மணிநேம் கண்சிமிட்டவும் விடாது தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து வள்ளல் பிரானின் அருளமுதை உரைநடையில் ஊட்டினார்கள்.


மகுடியில் மயங்கிய பாம்பென வந்திருந்த அததனை பேரும் ஐயாவின் பேச்சால் தன்னை மறந்து வள்ளளாரின் கொள்கைக்குள் சிறைபட்டனர். மேலும் இப்பேச்சால் பலர் சன்மார்க்க கொள்கைக்கு வந்துவிட்டதாகவும், வள்ளளார் இத்தனை பெரிய ஞானியா என்று எண்ணி எண்ணி அதிசயிப்பதாகவும் கூறினர்.


முன்னதாக அன்று மாலை 4.00 மணிமுதல் காரைக்கால் தயவுத்திரு சோ. ருத்ராபதி ஐயா குழுவினரி்ன் தலைமையில் அகவல் ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்காலைச் சேர்ந்த தமிழாசான் உயர்திரு. இராமமூர்த்தி ஐயா அவர்கள் நிகழ்ச்சிக்க தலைமை ஏற்று சிறப்பானதொரு துவக்கஉரை ஆற்றினார்கள்

விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு சன்மார்க்க அன்பர்கள் மற்றும் வள்ளளார் சிந்தனைகள் ஆராய்ச்சி மற்றம் சேவா மையம் சார்பில் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அருட்பா எனும் அமுதத் தேன் பருகினர்.


நிகழ்ச்சியின் நிறைவில் சன்மார்க்கத் தொண்டர் பேராசிரியர் உயர்திரு. சேனாதிபதி ஐயா அவர்கள் நன்றி நவின்றார்கள்.


கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக

குழுவினர் சுற்றிச் சுழன்று அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக

அன்பர்களுக்கு அன்னதானமும் அளிக்கப்பட்டது.


வள்ளளாரின் மீதில் அளவு கடந்த பற்றும் மாறாக் காதலும் கொண்ட வள்ளளார் சிந்தனைகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் சேவா மையத் தலைவர் பிரான்ஸ் திரு. கலியபெருமாள் ஐயா அவர்கள் இவை அத்துணை செயல்பாடுகளுக்கும் ஆணி வேராய் இருந்து தன் முழு நேரப் பணியாய் வள்ளாரின் தொண்டிலேயே ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் சீரிய முயற்சியாலும், தன்னலம் கருதாத பொதுநல தியாக உணர்வாலும் காரைக்கால் முழுவதும்

சன்மார்க்க அலை வீசத் தொடங்கியுள்ளது. ஏராளமான இளைஞர்களும், பெண்களும், குழந்தைகளும், பொதுமக்களும், கற்றோரும் மற்றோரும் சன்மார்க்க நெறி பற்றி பின்பற்றத் தொடங்கி விட்டனர்.


உண்மையில் ஒவ்வொருவர் உள்ளத்தின் உள் நின்றும் நம்மை இயக்கத் தொடங்கிவிட்டார் நம் அருட்பெருஞ் சோதி ஆண்டவர்.


இதுபோன்ற நிகழ்வுகள் ஊர்தோறும் நடைபெற அருட்பெருஞ்சோதி ஆண்டவர் திருவுளங்கொண்டருளள் வேண்டும் என்பது எங்களின் பேரவா.


தொகுப்பு

தமிழாசிரியர் பொன். மூர்த்தி (எ) பூங்குன்றன் காரைக்கால்.

Ramanujam jam
சேலம் குப்புச்சாமி அய்யாவின் சொற்பொழிவு சமீப காலங்களில், அனைவரையும் சுத்த சன்மார்க்கத்திற்கு
இழுத்து வருகிறது. முதற்கண் அவருக்கு நன்றி. அவரைஇயக்கிவரும் பெருமானாருக்கு அடுத்த நன்றி.
அவரை அழைத்து, காரைக்காலையே வடலூர் ஆக்கியதற்கு அதற்கடுத்த நன்றி.
நல்லதொரு முயற்சியினை மேற்கொண்ட
அனைவருக்கும் நன்றி.
தொகுப்பு மிக அருமை
இதுபோன்ற தொகுப்புகள்தான் தமிழ் கூறும் நல்லுலகெலாம் அவ்வப்போதைக்கப்போது சென்றடையவேண்டும்.
இணையதளம், அதற்காகத்தான் செயல்பட்டு வருகிறது.
தக்காருக்குத்தான் (allotted a space in the space directory) இந்த இணைய தளம் இடமளித்துள்ளது என்பதை
ஓர்ந்து நோக்கும்போது, காரைக்காலில் சன்மார்க்கம் தீவிரமாகவும் விரைவாகவும் புத்துணர்ச்சியுடன் தழைக்க
அன்பர். பூங்குன்றன் நன்முயற்சி எடுத்து வருவது தெரிகிறது.
தயவுக் குழு உறுப்பினர், மதுரை.
Friday, October 10, 2008 at 05:01 am by Ramanujam jam
Senthil Maruthaiappan
ஐயா, மிக அருமையான தொகுப்பு! இதில் முக்கியமாக எங்களைக் கவர்ந்த வரி
"வள்ளளார் இத்தனை பெரிய ஞானியா என்று எண்ணி எண்ணி அதிசயிப்பதாகவும் கூறினர்"
மிக அருமை.
ஓங்குக வள்ளலார் புகழ்,
வாழ்க சன்மார்கம்,
வாழ்க தயவுத்திரு. குமரேசன்,
வாழ்க விழா குழுவினர் அனைவரும்,
வாழ்க தயவுத்திரு..குப்புசாமி ஐயா
Friday, October 10, 2008 at 05:22 am by Senthil Maruthaiappan
sakthi252
It was an excellant programme, we never been continuously with '''Vallalar''' and his recitals for more than 2 and a half hours at a stretch , ever before like this. The significance is that we were not allowed even try to think of anything else other than what we were hearing from Thiru .Kupusamy.It was so fluent and eloquent and in elite Tamil.
The preachings of vallalar was very nicely and simply putforth to the public with clear and strong supportive collections from Thirumoolar , Manickavasagar and Thiruvalluvar.
People who were under the opinion of Vallalar's Sanmarga sangam as 'annadhanam only', had an oppurtunity to realise in depth as what was truthfully told by Vallalar on immortality/deathlessness , siddhi and the ways to put our efforts towards the path.
We thank from our heart Mr.Kaliaperumal of Karaikal who has organised this programme for the public of Karaikal.
Best Regards from R.Chitrambalam,, Karaikal.
Monday, October 20, 2008 at 10:05 am by sakthi252