Vallalar Universal Mission Trust   ramnad......
99. பார் உயப் புரி எனும் உள்ளொளி


197. பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்

198. ஆருயிர்க் குள்ளொளிர் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) அகண்டவெளி எங்கும், நிரம்பி, எங்கணும் பரிபூரண மாய் விளங்கிக் கொண்டிருக்கின்றவர் நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அப்படியுள்ள ஆண்டவர் மெய்யருள் ஞான அனுபவங்கொண்ட மனிதனின் உள் அகத்தேதான் முதலில் வெளிப்பட்டு விளங்குவதாக அறியப்படுவதாம். ஏனெனில் மனிதனில் அவனது ஆன்மாவாகிய ஆருயிர்அணுதான் கடவுள் உண்மையெலாம் வெளிப்பட உள்ள கடவுட் சிற்றம்பலமாக இருக்கின்றதாம். அகண்டபரிபூரணானந்த பரம்பொருள் , அந்த அகண்ட வடிவின், எந்த ஒரு சிற்றணுவிடத்தும் தன் பரிபூரண இயல்போடு, முழுமையான தன்மையோடுதான் இருந்து கொண்டிருப்பினும், எந்த ஒரு குறிப்பிட்ட சிற்றணுத்துவ ஆன்மாவுக்கு மெய்ஞ்ஞானபக்குவ மனித தேகம் ஏற்பட்டு அனுபவம் விளங்குகின்றதோ அங்குதான் வெளிப்பட்டிலங்குவதாகக் கொள்ளப்படும்.

நமது வள்ளற்பெருமான், தமது ஆருயிரின்கண் நிரம்பிப்பிரிவறவுள்ள அருட்பெருஞ்ஜோதிபதியை ஓதாதே திருவருளால் உணர்ந்து கொண்டுள்ளார். ஓதியுணர்வதற்கு அரியவன் ஒப்புயர்வில்லாப் பரம்பொருள். இவ்வுண்மைதான், உலகெலாம், உணர்ந்து ஓதற்கரியவன்” என்றா, வான் நிழல் மெய்ம் மொழியாக, அசரீரி வாக்காக் , சேக்கிழாருக்கு, அகமும் புறமும் திருசிற்றம்பலத்தின்கண் வழங்கப்படது. அவ்வருள் அடியே முதலாய்க்கொண்டு திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தை ஆக்கி அளித்துள்ளார். உலகம் எத்தனை? எண்ணில் அடங்கா உலகம் உள்ளனவாம். அத்தனையும் எப்படிக் கலையறிவால் ஓதிப் படித்துத் தெரிந்தூ கொள்ளமுடியும்? முடியாதே! அவ்வுலகங்களையே தெரிந்துகொள்ள முடியாதபோது, அவற்றையெல்லாம் அளவில் காலம் விளக்கம் செய்து கொண்டு விளங்குகின்ற ஒரு பரம்பொருளை எப்படியும் அறிந்துகொள்ளல் கூடாதன்றோ! அப்படி அறிவரிய பரம்பொருளைத்தான் நம் ஆன்ம சிற்சபையில் அருள் ஞான உணர்வால் கண்டுகொள்ளக்கூடியதாயிருக்கின்றதாம். அருள் என்பது மெய்ஞ்ஞானமும், மெய்யன்பும் நிரம்பிய உணர்வாம். இவ்விரண்டால் விளைகின்றது தான் நிறை இன்ப ஒளி அனுபவமாம். இந்த ஞானமும், அன்பும், நிறை ஒளியுமே நிலவுலாவிய நீர்மலி வேணி அலகில் ஜோதியனாக அருண்மொழித்தேவராம் சேக்கிழாருக்கு அன்று உணர்த்தப்பெற்றது. அது நம் அருட்பிரகாசருக்கு அருட்பெருஞ்ஜோதியாக உணர்த்தப்பெற்றுள்ளது. அன் தோற்றிய சிவ ஜோதி பஹ்டியைச் சைவசமய மதச்சார்பு கொண்டு சிறுபான்மையரே உவந்தேற்ககூடும். ஆதலின் , சமய மதாதீத, கற்பனாதீத உண்மை வெளிப்பட இன்று அப்பரஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதியாக வெளிப்பட்டுல்லதாம்.

சிவ ஜோதியை வாழ்த்தி வணங்கி நின்ற சேக்கிழார் பெற்றது சிவ ஐக்கியானுபவமாம். நம் வள்ளற்பிரானின் உள்ளத்தளியில் அன்று வெளியான அருட்பெருஞ்ஜோதி இவருக்குப் பார் உயப்புரிக எனப் பணிந்து அருள் செய்து கொண்டுள்ளதாம். அவரோ,. உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என்ற அருள் வாக்கு பெற்றதோடு சரி. அதனால், அருண்மலரடி வணங்கி , அவ்வடியில் ஒன்றி மறைந்த தீவிரபக்தத்தொண்டர் புராணம் பாடிப் பரவிச் சென்றார். இவரோ உலகெலாம் மரணமில்லாப் பேரின்பவாழ்வு பெற்று உய்ந்திடற்கு அருள் ஆணையால் திருவருட்பாவை வழங்கியுள்ளார். அருட்பெருஞ்ஜோதியதியே, பாருயப் புரி என ஆணை செய்ததோடு, இவரது ஆருயிர்க்குள்ளிருந்து விரிந்து இவராகவே விளங்கி நின்று உலகமெல்லாம் உய்ய அருள் செய்துகொண்டே யுள்ளதாம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்.

vallalarspace.com/vumt