191. எப்படி எண்ணிய தென்கருத்திங்கெனக்
192. கப்படி அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) எண்ணியது எல்லாம் எல்லாருக்கும் கிடைத்துவிடுகின்றதில்லை. ஓர் ஒரு சமயம் அப்படி எண்ணியது கிடக்கின்றதுமுண்டு. பல சமயங்களில் கிடைக்காமல் போவதுமுண்டு. சில சமயம் எண்ணாதது வந்து சேர்வதுமுண்டு. இவையெல்லாம் ஆண்டவன் செயலே என்பர், திருவருட்செயலின் உண்மையை உணர்ந்தவர்கள். எண்ணிய எண்னியாங்கு எய்துவர் . எண்ணியர் திண்ணியராகப் பெறின், என்று கூறுவர் உண்மையில் அருள் ஆற்றல் பெற்றவரே எண்ணியதுபெறும் திண்ணியர் ஆவர். நம் அடிகளார், நிறையருள் பெற்று, அருளொளியோடு இரண்டற இருக்கும் இயல்பினராக உள்ளார். அருட்பெருஞ்ஜோதியே வள்ளலாரின் உள்ளமாக இருக்கின்றது ஆகையால் இவருடைய கருத்து வேறு, இறைவர் திருவுள்ளம் வேறாக இல்லையாம்.
இந்த உலகில் திருவருட்பிரகாசனார் திருவருட்பா இசைத்து துதி செய்திருந்தது எந்தச் சந்நிதியில் என்றால், அக சத்திய ஞான சபையில் வளர் அருட்பெருஞ்ஜோதியின் திருமுன் என்பதே உண்மையாகும். “ நினைத்தபோதெல்லாம் நின்னையே நினைத்தேன், நினைப்பற நின்றபோதெல்லாம் எனைத் தனியாக்கி நின்கணே நின்றேன். என்றதைப் புரிந்துகொண்டால் இவரது மெய்ந்நிலை நன்கு விளங்கும். சாதனை முற்றிச் சாத்தியமுற்று நின்ற அகநிலையில் அருட்பெருஞ்ஜோதியே, இவராகவும் இறைவராகவும் இருக்கின்றதாம். இரண்டுபட நின்று நினைக்கின்றார். வேண்டுகின்றார், அதுவே இறைவரின் திருவுளச் செயலாய் இருக்கின்றதால் உடனே நன்கு நிறைவேறி விடுகின்றதாம். தற்போதம் அற்று எண்ணும் யாவும் ஆண்டவர் எண்ணமே ஆகையால் இவரது உள்ளத்தில் தேவையில்லாதததோ, தவறானதோ, திருவுளச்சம்மதமல்லாததோ ஒருகாலும் தொன்றவே தோன்றாது. நல்ல எண்ணமே தோன்றும்., அதற்குரிய வேண்டுகையும் உடனுக்குடன் நிறைவேறும் என்பது உண்மை. தயவோடு உளநெகிழ்வோடு இருக்கின்ற இவருக்கு, அருட்செயல் வெளிப்பட ஆண்டவரே தக்க சூழ்நிலையை ஏற்படுத்ஹ்டிக் கொடுக்கின்றார். அப்போது இவர் தான் செய்யவேண்டியது கடமை எனக்கொண்டு, அருள்துணையால் செய்து நிறைவேற்றிவிடுகின்றார். கடும் பிணியாளன் ஒருவன், இவர்முன் வந்து, மெய்யாக வருந்தி வேண்டுகின்றான் என வைத்துக்கொன்ள்ள்வோம். அப்போது இவரது நெகிழ்ந்த உள்ளம், அப்பிணியொழிய வேண்டும் என்று எண்ணுகின்றாது; அது சமயம் திருவருள் இவருக்கு அப்பிணி யொழிக்கும் ஆற்றலைத் தந்து, உடம் செளக்கியத்தையும் வழங்கிவிடுகின்றது. இச்செயலைத் தன் செயலாகக் கருதிப் பெருமையிற் கர்வங் கொள்ளாது, ஆண்டவன் செயலெனக் கொண்டு அமைதியாக இருக்கின்றது இவரியல்பாம். இதனால் இவர் எண்ணம் அவருள்ளம் இரண்டுபடாதிருந்து, எது, எது, எப்போதெப்போது செய்யவேண்டுமோ, அப்போதப்போது செய்து முடிப்பதாய் இருக்கின்றதாம்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்.