Vallalar Universal Mission Trust   ramnad......
இராமநாதபுரம் மாவட்டப்பதிவாளர் ( District registrar) அவர்கள் மூலமாக இரண்டு ஆதரவற்ற மாணவர்கள் வள்ளலார் அறநிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.

இராமநாதபுரம் பாம்பன் பகுதியைச்சேர்ந்த இரண்டு ஆதரவற்ற மாணவர்கள் ஜெகந்நாதன், முனீஸ்வரன் என்ற இரண்டு மாணவர்கள் மற்றும் அவர்களுடன் உடன் பிறந்த இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சிறிய சகோதரனுடன் கடந்த இரண்டு மாதங்களாக அடைக்கலம் இன்றி இராமநாதபுரத்தில் தவித்த சூழ்நிலையில் தற்போதைய இராமநாதபுரம் மாவட்ட பதிவாளர் ( District Registrar) அவர்களது மூலமாக இரண்டு பெண்குழந்தைகளையும் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து மேலும் மேற்படி இரண்டு மாணவர்களையும் இராமநாதபுரம் வள்ளலார் அறநிலையத்தில் சேர்க்க கோரினார்கள் அதன்படி மேற்படி இரண்டு மாணவர்களையும் வள்ளலார் இல்லத்தில் சேர்க்கப்பட்டு முறையே ஐந்தாம் , ஆறாம் வகுப்புகளில் சேதுபதி நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டு தற்போது வள்ளலார் அறநிலையத்தில் பராமரிக்கப்படுகின்றார்கள். மேலும் 17.06.2010 அன்று மாவட்டப்பதிவாளர்(District registrar) அவர்கள் வள்ளலார் அறநிலையத்திற்கு நேரில் விஜயம் செய்து நமது வள்ளலார் அறநிலையத்திற்கு தேவையான உதவிகள் செய்வதாக உறுதியளித்துச் சென்றார்கள்.

vallalarspace.com/vumt