Vallalar Universal Mission Trust   ramnad......
86. சகமுதல் முற்றுமாம்


171. சகமுதற் புறப்புறத் தங்கிய வகப்புறம்

172. அகம்புற முற்றுமாம் அருட்பெருஞ்ஜோதி

( உரை விளக்கம்) இங்கு சகமுதல் என்பது, மகாபிரபஞ்ச் காரணமான எங்கும் நிறைந்த கடவுட் பேரொளிநிலையைக் குறிக்கின்றதாம். சாதரணமாக அகம் என்பதை ஆன்மா வெனக்கொண்டு குறிகின்றது. வழக்கம், ஆனால் இந்த ஆன்மாவின் பெருநிலையே, எங்கும் நிறை கடவுட்பெருஞ்ஜோதியின்மெய் நிலையே, எங்கும் நிறை கடவுட் பெருஞ்ஜோதியின் மெய் கொண்ட தனியொரு கூறாக இருத்தலின், அவ் இறை பெரு நிலையைப் பரமான்ம நிலையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றாதாம். எனவே இந்தப் பரமான்ம பதியைச் சத்துண்மை கொண்ட, சகரமெய்கூடிய அக வடிவமாக, அதாவது ( ச் + அகம்) சகம் ஆகக் கொள்ளப்படுகின்றது. ஆகவே இங்கு சகம் என்பது எங்கும் நிறை அருட்பேரொளிக் கடவுணிலையையே சுட்டுவதாய்க் கொள்ள வேண்டியுள்ளதாம்.

இப்போது , சகம் என்பதற்குப் புதிய பொருள்; எங்கும் நிறை இறை ஜோதியே ஆம். இந்த ஒளிநிறை முழுப் பிரபஞ்மே சகம் என்ற சொல்லுக்கு அமைகின்றாதாம். முன்னோர் சகம் என்பதற்கு, உலகம், பிரபஞ்சம் என்று மட்டும் பொருள் கொண்டிருந்தனராம். இங்கு வழங்கப்பட்டுள்ள இச் சொற்பொருள் சுத்த சன்மார்க்க நிலையினின்று காண்பது.

இந்த சகமாகிய கடவுட் ஜோதியே புறப்புறம் தங்கி, புறத்தையும் அகப்புறத்தையும், அகத்தையும் விளங்கச் செய்து கொண்டுள்ளதாம். இங்கு அகண்டாகார வெளியொளி நிலையே புறப் புறம் என்றாம். இது வெற்று அக்கினி நிலையைக் குறிப்பதல்ல. அக்கினி, சூரியன், சந்திரன், நட்சத்திரம் தான்முன்னர், அகம், அகப்புறம், புறம், புறப்புறம்,என்று கொண்டது அக அனுபவ முறைக்காகவாம். ஆதலின், இது வேறு நிலையுண்மையாம் எனவே, சகமுதலாகிய புறவெளி நிலை நின்று நம் அகநிலை ஆகிய ஆன்ம நிலைவரையும் நிரம்பியுள்ள அருட்பெருஞ்ஜோதி முற்றும் ஆன உண்மை இங்கு குறிக்கப்பட்டதாகக் கொள்ளப்படுகின்றதாம்.

அகவல் உரைவிளக்கம்

தயாநிதி சரவணானந்தா

vallalarspace.com/vumt